புத்தகம்-1 பத்திரங்கள்

புத்தகம்-1 பத்திரங்கள்

சொத்துப் பத்திரமாக இருந்தாலும், அல்லது சொத்து சம்மந்தப்படாத பத்திரமாக இருந்தாலும், எல்லாப் பத்திரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுவாக, பத்திரங்களை மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள்.

:சொத்து சம்மந்தப்பட்ட பத்திரங்கள். இவை சொத்தின் உரிமையை மாற்றிக் கொடுக்கும் வகையில் இருக்கும். இந்த மாதிரி சொத்து சம்மந்தப்பட்ட பத்திரங்களை பதிவு  அலுவலகத்தில் புத்தகம்-1 (Book-I) பத்திரமாகவே பதிவு செய்வார்கள். உதாரணமாக ஒரு கிரயப் பத்திரத்தை எடுத்துப் பார்த்தால், அதில் பத்திர எண்ணுடன், அது எந்தப் புத்தகத்தில் பதிவாகி உள்ளது என்றும் எழுதி இருக்கும். புத்தகம்-1ல் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை “பொதுப்பத்திரம்” அல்லது Public Documents என்று சொல்வார்கள்


 பொதுப்பத்திரம் என்பது என்னவென்றால், இந்த வகைப் பத்திரப் பதிவை உலகுக்கு அறிவிப்பது எனப் பொருள்படும். ஒருவர் கிரயம் வாங்கியதை உலகுக்குத் தெரியப்படுத்துவது ஆகும்.  யார் வேண்டுமானாலும், அதன் காப்பியை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் அந்த பதிவுச் செய்தியானது வில்லங்க புத்தகத்திலும் இடம் பெறும். எனவே யார் வேண்டுமானலும் அதைப் பார்க்கவும், அந்தப் பத்திரத்தின் காப்பியை பெறவும் உரிமை உண்டு.


புத்தகம்-1 பத்திரங்கள் பொதுவெளியில் இருக்கும் பத்திரம் என்று பெயர்.  உலகுக்கு அந்த விபரத்தை தெரியப்படுத்தி விடும். ஒரு சொத்தை ஒருவர் கிரயம் வாங்கினார் என்பதை எல்லா மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவரின் உரிமையை உலகம் அறிந்து கொள்ள முடியும்.

இது எப்படியென்றால், பொதுவாக ஒரு பொருளை கொண்டு வந்து எல்லோரும் கூடியுள்ள சந்தையில் விற்பனை செய்தால்,  அந்தப் பொருள் விற்பனை ஆகிவிட்டது என்றும், அதை ஒருவர் வாங்கி உள்ளார் என்பதும் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியவரும். இந்தத் தத்துவப்படி, சொத்தின் உரிமை மாறும் பத்திரங்களை புத்தம்-1ல் பதிவு செய்கிறார்கள். புத்தகம்-1 பத்திரங்கள்  உலகுக்கு அறிவிக்கும் பத்திரங்கள் வகையைச் சேர்ந்தது.