செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா?

செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா?

உங்கள் தாய்  அல்லது தந்தை அல்லது வேறு ஒருவர் உங்களுக்கு கொடுத்த  தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது. இது போன்ற வழக்குகள் தான் நீதிமன்றத்தில் குவிந்த வண்ணம் உள்ளது.

 ஏனென்றால் அந்த தான செட்டில்மெண்ட் பத்திரத்தில் தான் பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது. தானமாக எப்போது கொடுக்கப்பட்டதோ அப்போதே அதனை திரும்பவும் மற்றும் ரத்து செய்ய ஆகாது. 

மேலும்  தானம் குடுக்கும் நபர் சுவாதீனம் (அந்த இடம் அல்லது நிலம் அவனுக்கு சொந்தமானது என்று பொருள்) சேர்த்து  உங்களிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றும் பட்டா உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து இருத்தல் அவசியம். அவ்வாறு சுவாதீனம் மற்றும் பட்டா மாற்றம் செய்யாமல் இருப்பது தான செட்டில்மெண்ட் பத்திரத்துக்கு மிகவும் ஆபத்து ஆகும். 

தானம் செய்பவர் சில பல நிபந்தங்களுடன் மற்றும் விதிமுறைகளுடன் உங்களுக்கு கொடுத்தார் என்றால் அத்தகைய நிபந்தனை மற்றும் விதிமுறைகள் கட்டாயம்  பின்பற்ற வேண்டும்.

 இல்லையென்றால் அதுவும் ஒரு பிரச்சினையே.  தானம் என்பது தனது சொந்த ரத்தத்தில் கொடுப்பது ஆகும். மூன்றாவது நபருக்கும் அவர்கள் கொடுக்கும் உரிமை உள்ளது. சொந்த இரத்தத்தில் கொடுத்தால் முத்திரைத்தாள் கட்டணம் 1 சதவீதம், பதிவு கட்டணம் 1 சதவீதம் முதல் 4000 ருபாய் மட்டுமே இருக்கும். மூன்றாவது நபருக்கு கொடுக்கும் பட்சத்தில் சற்று அதிகமாக பதிவு கட்டணங்களை தரும் சூழல் உருவாகிறது. அதாவது  முத்திரைத்தாள் கட்டணம் 8 சதவீதம் மற்றும் பதிவு கட்டணம் 1 சதவீதம் முதல் 4000 வரை வாங்கப்படும். இதில் கூறப்படும் தொகை வேறுபடலாம்.