புலன் எண் என்றால் என்ன

புலன் எண் என்றால் என்ன 

புலன் எண் என்பது ஆங்கிலத்தில் சர்வே நம்பர் என கூறுவர். அதாவது மொத்த நிலங்கள் பிரிக்கப்பட்டு எண்கள் தருவர். அத்தகைய எண்கள் தான் புல எண்கள் எனப்படும். 

இந்த  புல எண் எதற்காக பயன்படுகிறது என்று கேட்டால் புல எண்ணை வைத்து தான் அந்த நிலம் எங்கு அமைந்து இருக்கிறது என்பதை மிகவும் துல்லியமாக காட்டும்.  இந்த புல எண்கள் பட்டா விவரத்தை காண உதவும். 

மேலும்  இந்த எண்கள் நிலத்தின் தன்மை பரிவர்த்தனை செய்தல் போன்றவைகளுக்கு உபயோகமாக இருக்கும். ஒவ்வொரு நிலத்திற்கும் தனி தனியான எண்கள் இருக்கும்.

 உதாரணமாக  ஒரு நிலம் உங்கள் ஊரில் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அதற்கான சர்வே எண் 12 என்று குறிப்பிட்டிருக்கும். 

பிறகு  அதன் உட்பிரிவு எண்ணும் சேர்ந்து காட்டும்.

 மேலும் நாம் அருகில் உள்ள நிலங்களை கூட இந்த புல எண் கொண்டு அறிந்து  கொள்ள முடியும். ஒருவேளை பாகப்பிரிவினை செய்து இருந்தால் புல எண் மற்றும் அதோடு A, B என அந்த சர்வே நம்பர் இல் காட்டி விடும்.