சொத்து பத்திரம் எழுதுவதில் கூடுதல் கவனம் அவசியம்

அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான பத்திரம் எழுதுவதில் பல்வேறு கூடுதல் விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.
வீடு, மனை வாங்குவோர் அதற்கான கிரைய பத்திரத்தை எழுதுவதில் பொது விஷயத்தில் மட்டுமே பலரும் கவனம் செலுத்துகிறோம்.

சொத்துக்கள் விற்பனை பத்திரத்தில் விற்பவர், வாங்குபவர், பெயர், முகவரி, சொத்தின் சர்வே எண், பரப்பளவு, வகை, நான்கு எல்லை போன்ற தகவல்கள் இருந்தால் போதும் என நினைப்பது தவறு. ஆனால், இது போதுமானதல்ல. சொத்து எந்த நிலையில் உள்ளது, காலி நிலமா, தோட்டமா, வீடு, கிணறு, ஆழ்குழாய் உள்ளதா என பல விஷயங்களை கவனிக்க வேண்டும்.
இது போன்ற தகவல்களை பத்திரத்தில் அவசியம் குறிப்பிட வேண்டும். நிலம், வீட்டின் மதிப்பை மட்டும் குறிப்பிட்டால் போதும் என நினைக்கலாம். ஒரு சொத்தை, நிலம், வீடு ஆகியவற்றுடன் மட்டுமே வரையறுக்க முடியாது. அதில் உள்ள பொருட்களையும் சேர்த்து தான் மதிப்பு தீர்மானிக்க வேண்டும்.

இது போன்ற முக்கிய தகவல்களை குறிப்பிடவில்லை என்றால் விற்பனை முடிந்த பின் மனையில் உள்ள வீட்டுக்கு விற்றவர் உரிமை கோரினால் சிக்கல் ஏற்படும்.
நீங்கள் வாங்கும் நிலத்தில் என்ன வசதிகள் இருக்கிறதோ அதை அப்படியே பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். மரங்கள் இருந்தாலும் என்ன வகை, எத்தனை என்பதை குறிப்பிட வேண்டும் இதற்கு பதிவு துறையில் மதிப்புகள் கடைபிடிக்கப்படுகின்றன. அந்த மதிப்புகளை விசாரித்து பத்திரத்தில் குறிப்பிடுவது நல்லது