அதிரடி! போலி பத்திரப் பதிவு விவகாரத்தில்...சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு
அதிரடி! போலி பத்திரப் பதிவு விவகாரத்தில்...சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு
புதுச்சேரி : அதிகரிக்கும் போலி பத்திர பதிவுகள் தொடர்பாக கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பிக்க பத்திரப் பதிவுத்துறை தயாராகி வருகிறது. சொத்து வாங்கும் போதும், விற்கும் போதும் இரு தரப்பினரும் சார் பதிவாளர் அலுவலகம் முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் பத்திரப் பதிவின்போது வெப் கேமரா உதவியுடன், இரு தரப்பினரின் போட்டோ ஒட்டி, விரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. சாட்சிகளுக்கும் இந்த நடைமுறை உள்ளது. மோசடி இருப்பினும், சொந்தமாக ஒரு இடம் வாங்க பலமுறை யோசிக்க வேண்டிய நிலை உள்ளது.
அத்துடன் பத்திரப் பதிவின்போது வெப் கேமரா உதவியுடன், இரு தரப்பினரின் போட்டோ ஒட்டி, விரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. சாட்சிகளுக்கும் இந்த நடைமுறை உள்ளது. மோசடி இருப்பினும், சொந்தமாக ஒரு இடம் வாங்க பலமுறை யோசிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஏற்கனவே விற்ற நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மீண்டும் விற்பது, ஆள் மாறாட்டம் மூலம் போலியான போட்டோக்களை ஒட்டுவது என பல மோசடி சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால், சிரமத்திற்கிடையே சொத்து சம்பாதித்தவர்கள் நிலை குலைந்து போய் விடுகின்றனர்.
நில மோசடியால் பாதித்தவர்கள், பத்திர பதிவு அலுவலகத்தில் புகார் அளித்தாலும், பெரிதாக எதுவும் நடந்து விடாது. விசாரணை நடத்தும் பத்திர பதிவுத்துறை அதிகாரிகள், அனைத்து ஆவணங்களையும் சரிபாார்த்து, போலியானவை என, தெரிந்தும், பாதித்தவர்கள் பக்கம் இருப்பதில்லை. '
போலி பத்திர பதிவை நீக்க, தங்களுக்கு அதிகாரம் இல்லை. சிவில் கோர்ட்டிற்கு சென்று உத்தரவை பெற்று வாருங்கள்' என்று கைகழுவி விடுவார்கள். காவல்துறை அதிகாரிகளும் நில மோசடியில் ஈடுபடுவர்கள் மீது எப்.ஐ.ஆர் போடுவதில்லை. இந்த பழங்கால நடைமுறைகள் களையப்பட்டு போலிப் பத்திரங்கள் தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க, பத்திரப் பதிவுத்துறைக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஐகோர்ட் கிளையில் அண்மையில் நடந்த சிவில் வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் இந்த கூடுதல் அதிகாரம் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் போலி, முறைகேடான பத்திர பதிவு அதிகாரம் தொடர்பாக முடிவெடுக்க பத்திரப் பதிவுத் துறை வருவாய் துறைக்கு கோப்பு அனுப்பியுள்ளது.
விசாரணை எப்படி?
இதன்படி, இனி, போலி பத்திரம் குறித்து புகார் எழுந்தால் மாவட்ட பதிவாளர் நேரடியாக விசாரிப்பார். இரு தரப்பினருக்கும் சம்மன் கொடுக்கப்படும். இரண்டு தரப்பினரும் நேரில் ஆஜரானதும், அந்தந்த பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., சர்வேயர் உதவியுடன் சொத்து பத்திர ஆவணம் ஆராயப்படும்.
இந்த விசாரணை விரைவாக முடிக்கப்படும். ஆவணம் போலியானது என தெரிந்தால் போலி பத்திரம் குறித்து தனி ஆர்டர் பிறப்பித்து, ஆவணத்தில் தனி என்ட்ரி செய்யப்பட உள்ளது. அத்துடன் நில மோசடி, போலி பத்திர பதிவுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி எப்.ஐ.ஆர்., பதிய வேண்டும் என, காவல் துறைக்கு, துறை ரீதியாக பரிந்துரை செய்யப்படும். இது தொடர்பாக, சார் பதிவாளர் பத்திர பதிவு அலுவலகங்களில் தனி ஆவணங்கள் பராமரிக்க உத்தரவிடப்பட உள்ளது.
நம்பிக்கை
பத்திர பதிவு துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியதால் பாதித்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இனி, நிலமோசடி வழக்குகள் பத்திர பதிவு துறையில் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: தினமலர்