செட்டில்மெண்ட் என்றால் என்ன?
செட்டில்மெண்ட் என்றால் என்ன?
செட்டில்மெண்ட் பத்திரம் தனது குடும்பத்தில் உள்ள சொத்தை தானமாக அதாவது பரிசாக கொடுப்பது செட்டில்மெண்ட் எனப்படும்.
தான் உயிருடன் இருக்கும்போதே சொத்தை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு யாருக்காவது சுய நினைவோடு எழுதி தருவதாகும். அவ்வாறு தானமாக கொடுக்கும் செட்டில்மெண்ட பத்திரத்தை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது.
இது போன்ற வழக்குகள் ஏராளமாக குவிந்து உள்ளது. ஆனால் ரத்து செய்யும் பத்திரமும் விற்ற சொத்தையும் திரும்ப கண்டிப்பாக வாங்க முடியாது.
செட்டில்மெண்ட் என்றால் என்ன?
எதற்காக ஒரு சில நபர்கள் கொடுத்த தான பத்திரத்தை திரும்ப பெறுகிறார்கள் என்றால் சொத்தை பெற்ற நபர் தேவை இல்லாத செயலில் தங்கள் அனுமதி இன்றி செய்தால் திரும்ப பெற வழக்கு தொடுவார்கள்.
அதற்கு முன்னரே சொத்தை தானமாக விற்கும் நபர் சில பல கண்டிஷன் போட்டு பத்திரத்தை எழுத வேண்டும். அதில் சொத்தை விற்கும் நபர் என்ன வேண்டுமானாலும் கண்டிஷன்ஸ் அப்ளை செய்யலாம்.
தானம் கொடுப்பவர் கவனிக்க வேண்டியவை
செட்டில்மெண்ட் பத்திரம் தானமாக வழங்கும் நபர் தனது சுய சம்பாதித்த சொத்தை மட்டும் தான் எழுத முடியும். பூர்வீக சொத்தை தானமாக எழுதி தர முடியாது. தானம் கொடுக்கும் நபர் கண்டிஷன் போட்டு பத்திரம் எழுதுவது நல்லது. கண்டிஷன் போட்டு தான் செட்டில்மெண்ட செய்தால் பின்னாளில் அதனை ரத்து செய்யும் வாய்ப்பு மிகவும் அதிகம் ஆகும்.
தானம் பெறுபவர் கவனிக்க வேண்டியவை
தானம் பெறுபவர் உங்களுக்கு அண்ணன் தம்பி அல்லது தாய் தந்தை யார் வேண்டுமானாலும் தானம் கொடுக்கலாம். இவர்களில் யாராவது எழுதி கொடுக்கும் பட்சத்தில் பிற குடும்ப நபர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று ஆலோசிப்பது நல்லது ஆகும். இதை தவிர சுவாதீனம் கண்டிப்பாக நீங்கள் தானம் கொடுக்கும் நபரிடம் வாங்கி ஆக வேண்டும்.