தமிழ்நாடு பத்திர பதிவு அலுவலகங்கள்
தமிழ்நாடு பதிவு அலுவலகங்கள்
தமிழ்நாட்டில் நிலம் வாங்குதல் விற்றல் தொடர்பான பதிவுகள், திருமணப் பதிவுகள், சமுதாயச் சங்கம் மற்றும் நிறுவனப் பதிவுகள் செய்யும் பதிவு அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய ஊர்களில் அமைக்கப்பட்டுள்ளன.
பதிவு அலுவலகப் பணிகள்
பதிவு அலுவலகங்களில் குறிப்பாக கீழ்காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- பத்திரப் பதிவு
- சான்றளிக்கப்பட்ட நகல் பத்திரங்கள்
- வில்லங்கமில்லாச் சான்றிதழ் வழங்கல்
- சமுதாயச் சங்கங்கள் பதிவு
- நிறுவனங்கள் பதிவு
- சிறுசேமிப்பு நிறுவனங்களைக் கண்காணித்தல்
- பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் வழங்கல்
- இந்துத் திருமணங்களைப் பதிவு செய்தல்
- சிறப்புத் திருமணங்களைப் பதிவு செய்தல்
- இந்தியக் கிறித்துவத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தல்
- பார்சி மதச் சட்டத்தின் கீழான திருமணப் பதிவுகள்
- இணைய வழியில் வில்லங்கமில்லாச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் விண்ணப்பங்களை வழங்கல்
- வில்லங்கச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், சமுதாயச் சங்கப் பதிவேடுகள் போன்றவற்றின் ஒப்பளிக்கப்பட்ட சான்றுகளை வழங்குதல்
- பதிவு செய்யப்பட்ட சமுதாயச் சங்கங்கள்/ சிறுசேமிப்பு நிறுவனங்கள் குறித்த விளக்கமளித்தல்