தனியார் நில ஆக்கிரமிப்பு சட்டம்
தனியார் நில ஆக்கிரமிப்பு சட்டம்
தனியாக ஒரு நிலம் இருந்தால் அரசு அந்த நிலத்தை எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிப்பு செய்யலாம் என்று உச்ச வரம்பு சட்ட திருத்தம் உள்ளது. ஆனால் தனியாக ஒருவர் மற்றொருவர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முடியாது.
தனியார் நில ஆக்கிரமிப்பு சட்டம் அரசாங்கம் நிலம் - தனியார் நிலம்
1. ஒருவர் சொந்தமாக நிலம் வைத்திருந்தார் என்று வைத்து கொள்வோம். அதை திடீர் என்று அரசு அந்த நில உரிமை சொந்தக்காரருக்கு நோட்டிஸ் அனுப்பாமல் அந்த நிலத்தை எடுத்து கொள்ளலாம்.
2. இதனைத் தான் 1971 பிரிவு 20 ஊரமைப்பு சட்டம் சொல்கிறது.
3. முன்பு எல்லாம் அரசு ஒரு தனியார் நிலங்களை எடுத்து கொள்வதற்கு முன் நில உரிமையாளரிடம் ஆலோசித்து பின்னர் அதனை நிறுவுவர்.
4. 1971 சட்ட திருத்தத்தின் படி, அரசு ஒரு சமுதாய பயன்பாட்டிற்காக செய்யும் விஷயங்களுக்கு நிலம் தேவைப்பட்டால் கண்டிப்பாக எடுத்து கொள்ளும்.
5. முதலில் அரசு அந்த ஊரில் அரசு புறம்போக்கு நிலங்களை ஆராயும். எதுவும் இல்லாத பட்சத்தில் தனியாருக்கு சொந்தமான நிலங்களை சமுதாய பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தும்.
6. இதற்காக அரசு சார்பில் இழப்பீடுகளை அந்த நில உரிமையாளருக்கு கொடுத்து விடும்.
தனியார் நிலம் ஆக்கிரமிப்பு
1. ஒருவர் நிலத்தை பராமரிக்க தவறினால் அந்த நிலத்தில் உள்ள உள்ள ஒரு சிறிய இடம் அல்லது பெரிய இடம் சேர்த்து கட்டடமைப்பு செய்தால் அது ஆக்கிரமிப்பு எனப்படும்.
2. முதலில் இடத்தின் சொந்தக்காரர் FMB பார்க்கவும். பத்திரத்தை முழுவதுமாக படிக்கவும். அப்படியும் நிலம் ஆக்கிரமிப்பு செய்தார் என்றால் அவர்களிடம் உங்கள் FMB டீடெயில்ஸ்-ஐ சொல்லவும்.
3. அந்த நபர் வீடு கட்டி இருந்தால் அதற்கு ஏற்ற பணம் கொடுக்க அவர் தயார் என்றால் நீங்கள் வாங்கவில்லை என்றால் வழக்கு தொடுக்கலாம்.
எப்படி நம் நிலத்தை பாதுகாப்பது
உங்கள் நிலத்தை கண்டிப்பாக மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது பார்க்க வேண்டும். உங்கள் இடத்தை சுற்றி வேலியை கட்டாயம் போட வேண்டும். உங்கள் பத்திரம் xerox யாரிடமும் கொடுக்க வேண்டாம். போலி பத்திரம் உருவாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கும். பட்டா உங்கள் பெயரில் இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் பெயரில் பத்திரம் இருக்கும் ஆனால் பட்டா இருக்காது. உடனடியாக பட்டா மாற்றம் செய்யுங்கள்.