ஜெனரல் பவர் பத்திரம்

ஜெனரல் பவர் பத்திரம்

 பவர்  பத்திரத்தில் இந்த பத்திரம் ஒரு வகை ஆகும். அதாவது ஒரு ஏஜென்ட்-க்கு கொடுக்கும் அதிகாரம் ஆகும். அந்த வகையில் கொடுக்கும் பவர் பத்திரம் வாங்கும்போது யோசித்து மற்றும் விசாரித்து வாங்க வேண்டும். அவ்வாறு சரியாக அந்த பவர் பத்திரம் நாம் வாங்கும் போது எதிர்பாராத விதமாய் அதனை ரத்து செய்தால் வாங்கிவருக்கு மிகப்பெரிய  நஷ்டம் ஆகும். 

ஜெனரல் பவர் பத்திரம் 

இப்பொது ஒருவர் நிலம் வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம். அதன் பத்திரம் Power Of Attorney யை சேர்ந்தது என்று அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது நமக்கு தெரிய வரும் போது முதல்வரின் லைப் சான்றிதழும் மற்றும் அவரின் ஒப்புதலும் நிலம் வாங்குபவர் வாங்க வேண்டும். முகவருக்கு விற்பனை அதிகாரம் இருந்தாலும் முதல்வர் தான் அதற்கு முதலாளி என்பதால் அவரின் ஒப்புதல் மிகவும் முக்கியம். 

ஜெனரல் பத்திரம் முழு அதிகாரம் பெற கூடிய  ஆவணம் ஆகும். ஆனால் இதனை தவறாக சில பவர் ஏஜெண்டுகள் முதல்வருக்கு தெரியாமல் விற்பனை செய்து விடுகின்றனர். அவ்வாறு விற்பனைக்கு வாங்கும் நபர் ஏமாந்து தான் போவார்கள். ஏனென்றால் அந்த பவர் பத்திரத்தை அவர் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். 
எதற்கு இந்த பவர் பத்திரம்
சொத்தின் உரிமையாளர் தன்னால் பார்த்து கொள்ள முடியாத பட்சத்திலும் மற்றும் தன் குடும்பத்தில் யாரும் இல்லாத நிலையிலும் சொத்தை பார்த்துக் கொள்ள ஒரு நம்பிக்கையான நபரை நியமிப்பார். அவர்  முகவர் அல்லது பவர் ஏஜென்ட் என்று அழைக்கப்படுவார்.