பதிவு செய்ய கட்டாயமற்ற ஆவணங்கள்
பதிவு செய்ய கட்டாயமற்ற ஆவணங்கள்
அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை, விரும்பினால் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தை காட்டி மேற்படி ஆவணங்களை நிராகரிக்க முடியாது.
நீதிமன்ற ஏலத்தில் ஒரு அசையா பொருளை விற்க கொடுக்கும் விற்பனை சான்றிதழை (sales certificate) பதிவு செய்ய வேண்டும்.
அடமான கடன் சேர்ந்துவிட்டது அல்லது பற்று ஆகிவிட்டது என ஒப்புகொண்டு அதற்கு பதிலான அடமான பத்திரத்திலேயே குறித்து எழுதினால் அதனை பதிவு செய்ய தேவையில்லை.
அரசாங்கம் வழங்கும் அசையா பொருள் நன்கொடை பட்டயம் வழங்கிய உத்தரவுகளை பதிவு செய்ய தேவையில்லை.
கடன் உறுதி சீட்டுகள் (Debenture) கூட்டுறவு கழகங்களில் வழங்கப்பட்டு இருந்தாலும் பதிவு செய்ய தேவையில்லை.
நீதிமன்றத்தில் சமரசம் பேசி சமாதான பத்திரம் எழுதினால் பதிவு செய்ய தேவையில்லை.
ஒரு ஆண்டு காலத்திற்குள்
இருக்கும் குத்தகை/வாடகைகளை பதிவு செய்ய தேவையில்லை.
சொத்து விற்பனை உடன்படிக்கைகள் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. சொத்து எதுவும் கைமாறவில்லை என்பதால் அதனால் சச்சரவு வரும்போது நீதிமன்றம் செய்ய வேண்டுமானால் பதிவு செய்து இருக்க வேண்டும்.
உயில் மூலம் தத்து எடுத்துக் கொள்ள அதிகம் வழங்கப்பட்டு இருந்தால் அதனை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கூட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் நமக்குள்ளேயே விவசாய நிலங்களை கூறுசீட்டு மூலம் பிரித்துக் கொண்டால் கூறுசீட்டை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அசையும்/அசையா பொருள் பற்றிய உயிலை பதிவு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.
விவசாயத்திற்கான குத்தகையை ஒரு ஆண்டிற்கு மேற்பட்டதாக இருந்தால் பதிய தேவையில்லை.
நன்றி:
பரஞ்சோதிபாண்டியன்