வழக்கில் சிக்கிய சொத்துக்கள்: பத்திர பதிவுக்கு வருகிறது தடை?
வழக்கில் சிக்கிய சொத்துக்கள்: பத்திர பதிவுக்கு வருகிறது தடை? சென்னை: வழக்கில் சிக்கிய சொத்துக்கள் தொடர்பான பத்திரங்களை, பதிவுக்கு ஏற்காமல் தவிர்க்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட, பதிவுத்துறை தயாராகி வருகிறது. தமிழகத்தில் வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்களை வாங்குவோர், அதற்கான கிரையப் பத்திரங்களை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். இவ்வாறு சொத்துக்களை பதிவு செய்யும் போது, அதற்கான பத்திரங்களில் எந்தவித வில்லங்கமும் இருக்கக் கூடாது. சொத்து வாங்குவோர், இதுபோன்ற ஆவணங்களை தெளிவாக விசாரித்து, பதிவுக்கு செல்ல வேண்டும். 'ஆன்லைன்' முறையில் பத்திரங்களை பதிவு செய்ய தயாராகும் நிலையிலேயே, இந்த விஷயங்களை கவனிக்க, பதிவுத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பாலமுருகன் கூறியதாவது:பொதுவாக சொத்துக்கள் அடிப்படையில் கடன் வழங்கும் போது, அதில், உரிமையியல் பிரச்னைகள் உள்ளதா என, வங்கிகள் ஆய்வு செய்யும். ஆனால், சில சமயங்களில், ஆவண ஒப்படைப்பு அடமான கடன் வழங்கும் போது, இந்த விஷயங்களை வங்கிகள் கவனிப்பது இல்லை. இதனால், வழக்கு பிரச்சினையில் உள்ள ...