கனவு வீடு வாங்குவோருக்கு எச்சரிக்கை.. 10-15% விலை உயர்வு..!
ஜனவரி 2020ல் இருந்து கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் இதே வேளையில் சந்தையில் அதிகளவிலான டிமாண்டும் உருவானது. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வேறு வழி இல்லாமல் அதிகமான விலைக்கே பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
விலை உயர்வு
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் டைல்ஸ், பாத்ரூம் பிட்டிங்க்ஸ், எலக்ட்ரிக்கல் பிட்டிங்க்ஸ், மரப் பொருட்கள் ஆகியவற்றின் விலை சுமார் 20 முதல் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் இந்த விலை உயர்வை சமாளிக்க முடியாத கட்டுமான நிறுவனங்கள் விலை உயர்வை வாடிக்கையாளர்கள் மீது திருப்பியுள்ளனர்.
10-15% விலை உயர்வு
இதனால் புதிய கட்டுமான திட்டங்களில் வீடுகளை வாங்குவோர் 10 முதல் 15 சதவீதம் கூடுதலான தொகையைக் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தாலும் இனி வரும் காலத்திலும் வீடுகளின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
பண்டிகை கால விற்பனை
இந்தப் பண்டிகை காலத்தில் நாடு முழுவதும் பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிகப்படியான தள்ளுபடி சலுகை உடன் வீடுகளை விற்பனை செய்த காரணத்தால் இத்துறை தாறுமாறான விற்பனையைப் பதிவு செய்தது. இதனால் கட்டுமான பொருட்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் கட்டுமான பொருட்களின் விலை குறைவதில் 50:50 சான்ஸ் மட்டுமே உள்ளது.
விலை சுமை
கடந்த 5 முதல் 6 வருடத்தில் வீடு மற்றும் கட்டிடங்களின் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாத வேளையில் தற்போது ஸ்டீல், சிமெண்ட் மட்டும் இல்லாமல் டைல்ஸ், அலுமினியம், காப்பர், கேஸ் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை சுமையைக் கண்களை மூடிக்கொண்டு வாடிக்கையாளர் தலையில் கட்டுப்படுகிறது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்.