இந்தியாவில் குறைந்த விலையில் சொந்த வீடு வாங்க சிறந்த இடம் இதுதான்..!

இந்தியாவில் குறைந்த விலையில் சொந்த வீடு வாங்க சிறந்த இடம் இதுதான்..!

இந்திய ரியல் எஸ்டேட் துறை நாளுக்கு  நாள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது இன்றளவும் நடுத்தர மக்களுக்குப் பெரும் கனவாகத் தான் உள்ளது. இப்பிரிவு மக்களை ஊக்கப்படுத்துவதற்காகத் தான் மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்து  வருகிறது, ஆனால் இதன் மூலம் பலன் அடைவோர் பெரும்பாலானோர் வசதி வாய்ப்பு உடையவர்களாகவே உள்ளனர்.

இப்படி இருக்கையில் இந்தியாவில் மலிவு விலையில் அதாவது சாமானிய மக்களும் வாங்கக் கூடிய விலையில் வீடுகள் அதிகம் இருக்கும் நகரங்கள் எது தெரியுமா...?!

ரியல் எஸ்டேட் 

இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை அமைப்பான க்னைட் பிராங்க் வெளியிட்டுள்ள 'Affordability Index 2021' என்ற ஆய்வில் 50 சதவீதம் என்ற நிலையை அடிப்படையாகக் கொண்டு எந்த நகரத்தில்  வீடுகளின் விலை குறைவாக உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

50 சதவீத அளவீடு 
அதாவது  50 சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால் மலிவான விலை, 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால் விலை அதிகமாக இருப்பது என்பது பொருள். அப்படிப் பார்க்கும் போது இந்தியாவின் முக்கிய 8 நகரங்களில் மும்பையில் தான் வீடுகளின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

சென்னை 
க்னைட் பிராங்க் நிறுவனத்தின் ஆய்வுகள் படி மும்பை 53 சதவீதத்தைப் பெற்று உள்ளது. 2016ல் மும்பையின் மதிப்பீடு 92 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  2021ஆம் ஆண்டில் இந்தியாவின் முக்கியமான 8 நகரங்களில் வீடுகளின் விலை குறைவாக இருக்கும் டாப் 3 நகரங்கள் அகமதாபாத் 20%, புனே 24%, சென்னை 25% ஆக உள்ளது.

பெங்களூரு 
மும்பையைத்  தொடர்ந்து தமிழ் மக்கள் அதிகம் வாழும் பெங்களூரில் 2012ல் 57 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 26 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ரியல் எஸ்டேட் துறை 
இந்த Affordability Index தான் ரியல் எஸ்டேட் துறையில் அடித்தள காரணம் ஒவ்வொரு நகரங்களில் ப்ராபர்டி விலை, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், மக்களின் சராசரி வருமானம், மக்கள் வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும் அளவீடு ஆகிய அனைத்தும் கணக்கில் கொண்டு இது மதிப்பீடு செய்யப்படுகிறது.

வளர்ச்சி 
மேலும் இந்த Affordability Index குறைவாக இருந்தால் மட்டுமே ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியில் இருக்கும் இல்லையெனில் இத்துறையில் உருவாகும் வர்த்தகம், வேலை வாய்ப்பு, பணப்பரிமாற்றம் என அனைத்தும் பாதிக்கப்படும்.