பெங்களூரு, புனே, சென்னையில் குவியும் மக்கள்.. எதிர்கால நிலை இதுதான்..!
கடந்த சில அமர்வுகளாகவே ரியல் எஸ்டேட் பங்குகள் உச்சம் தொட ஆரம்பித்துள்ளன. இத்துறை மீதான எதிர்பார்ப்பும் வலுத்து வருகின்றது.
தற்போது வட்டி விகிதம் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளதையடுத்து, பொருளாதாரமும் மீண்டு வந்து கொண்டுள்ளது. இதனால் தேவையும் மீண்டு வந்துள்ளது.
குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் ரியல் எஸ்டேட் மீதான ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
வரலாறு காணாத வட்டி குறைவு
குடிசை வீடானாலும் சொந்த வீடாக இருக்க வேண்டும் என்பதே இன்றைய காலகட்டத்தில் பலரின் எண்ணமாக உள்ளது. அதனை நிறைவேற்ற இது தான் சரியான தருணமும் கூட. ஏனெனில் வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது.
ரியால்டி இன்டெக்ஸ் குறியீடு
இதற்கிடையில் தான் பிஎஸ்இ ரியால்டி இன்டெக்ஸ் குறியீடு கடந்த ஐந்து அமர்வுகளில் 10% ஏற்றம் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் மட்டும் 35% ஏற்றம் கண்டுள்ளது. இந்த துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் காண இன்னும் ஏராளமான சாதகமான குறியீடுகள் சாதகமாக உள்ளன.
ரியால்டி செக்டார் வளர்ச்சி
நிஃப்டி ரியால்டி குறியீடு 10 ஆண்டு நிலையான தன்மையை உடைத்துக் காட்டியுள்ளது. அந்தளவுக்கு இந்த துறையில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன என்று ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக குறைவான வட்டி விகிதம், அரசு சப்போர்ட் உள்ளிட்ட பல காரணிகள் சந்தைக்கு சாதகமாக உள்ளன.
ஐடி துறையில் வளர்ச்சி
அதோடு ஐடி துறையில் பணியமர்த்தல் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சம்பள விகிதமும் அதிகரித்து வருகின்றது. இது இன்னும் குடியிருப்புக்காக ஊழியர்களை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய தூண்டலாம். நிபுணர்கள் இன்னும் வலுவான வளர்ச்சியினை காணலாம் என்று கூறி வருகின்றனர்.
பணியமர்த்தல் அதிகரிக்கலாம்
இதனால் இன்னும் புதிய பணியமர்த்தல் என்பது அதிகரிக்கலாம். அதோடு தற்போது வீட்டில் இருந்து பணி என்ற கலாச்சாரம் இருந்து வருகின்றது. இதே சமயம் பொருளாதாரமும் ஒரு வலுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது. இதனால் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சியினைக் காணலாம். மேலும் வணிக ரீதியிலான ரியல் எஸ்டேட் துறையும் விரைவில் நல்ல வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது சார்ந்த பங்குகளும் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சம் தொட்டுள்ளது?
இதற்கிடையில் ஒரு தசாப்தத்திற்கு பிறகு ரியல் எஸ்டேட் துறையில் தற்போது, வேகம் அதிகரித்துள்ளது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக பங்குகள் ஏற்கனவே உச்சத்தினை எட்டியுள்ளன. இது எதிர்காலத்தில் இந்தபோக்கு தொடரும் என்ற நிலையில், சந்தையிலும் இதன் போக்கு தொடரலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
எங்கெங்கு?
குடியிருப்பு விற்பனைகளில் பெரும்பாலான பங்குகள் பெங்களூருவில் இருந்து வருவதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. இது இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக இருக்கும், பெருங்களூருவில் அதிகரித்து வரும் புதிய பணியமர்த்தல் காரணமாக இன்னும் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புனே மற்றும் சென்னையில் தேவையை அதிகரிக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
ரியல் எஸ்டேட் பங்குகள் ஏற்றம் காணலாம்
கொரோனா நெருக்கடிக்கு பிறகு இந்தியாவின் டாப் 10 நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையில் வலுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றன. கொரோனா தொற்று நோய், மோசமான கடன் பிரச்சினை, பணத்தடை உள்ளிட்ட மோசமான பிரச்சினைகளுக்கு மத்தியில், 2016க்கு பிறகு புதிய வீடுகள் விற்பனை மற்றும் அபார்ட்மெண்ட்கள் சந்தையினை மோசமாக பாதித்துள்ளது. எனினும் தற்போது அவை மீண்டு வந்து கொண்டுள்ளன. இது ரியால்டி பங்குகளுக்கு நல்ல பலன் கொடுக்கும். இதற்கிடையில் ரியல் எஸ்டேட் சார்ந்த பங்குகள் நல்ல பலன் கொடுக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.