டெவலப்பர்கள் கவனிக்க வேண்டியவை
டெவலப்பர்கள் கவனிக்க வேண்டியவை
குறிப்பிட்ட ஒரு பூமியை மனைப் பிரிவுகளாக மாற்ற முனையும் போது சம்பந்தப்பட்ட பூமி பற்றி அனைத்து விதமான சட்டபூர்வ ஆவணங்களையும் ஒரு வழக்கறிஞர் மூலம் லீகல் ஒப்பீனியன் பெற்ற பின்னரே நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
மேலும் தனிப்பட்ட முறையில் நிலத்தை விற்பவர், அவர்களுடைய வாரிசுகள், நிலத்திற்கான மூல பத்திரங்கள், பட்டா உள்ளிட்ட அரசு ஆவணங்கள், வில்லங்க சான்று ஆகியவை பற்றியும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். மேலும் உள்ளூர் ஊராட்சி அல்லது நகராட்சி சம்பந்தப்பட்ட அனுமதிகளையும் முறைப்படி பெற வேண்டும்.