வீடு ரெடின்னா சொல்லுங்க.. உடனே வாங்க ரெடி.. சென்னைவாசிகள் அசத்தல்..!
வீடு தயார்னா சொல்லுங்க.. உடனே வாங்க ரெடி.. சென்னைவாசிகள் அசத்தல்..!
இதுதான் உண்மை
இந்திய ரியல் எஸ்டேட் துறை கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்பு மூலம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில் மத்திய அரசு இத்துறையை மேம்படுத்த பல்வேறு ஊக்கத் திட்டங்களை அறிவித்தது.
இதேபோல் பல மாநில அரசுகள் குறிப்பாக மாகராஷ்டிர மாநில அரசு ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை ஊக்குவிக்கப் பல சலுகைகள், வரிக் குறைப்பு, கட்டண ரத்து என அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்திய மக்களின் முடிவுகளால் ரியல் எஸ்டேட் துறையில் மிக முக்கியமான மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
ரியல் எஸ்டேட் வர்த்தகம்
பொதுவாக இந்தியாவில் ஒரு ரியல் எஸ்டேட் திட்டம் அறிவிக்கப்பட்டுச் சில மாதங்களிலேயே அனைத்துப் பிளாட்கள் அல்லது வீடுகள் விற்பனையாகி விடும். அதிலும் குறிப்பாகப் பிரபலமான நிறுவனம் அல்லது முன்னணி நிறுவனங்களின் கட்டுமான திட்டம் என்றால் டிமாண்ட் சற்று அதிகமாகவே இருக்கும்.
2020ல் பெரும் மாற்றம்
இதனால் வீடுகளைக் கட்டி முடிக்காத முன்பே பெரும்பாலான வீடுகள் விற்பனை ஆகி வரும் நிலையில் 2020க்குப் பின் மக்கள் மத்தியில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் மீதான கண்ணோட்டம் பெரிய அளவில் மாற்றியுள்ளது. குறிப்பாக 2020 மற்றும் 2021ல் வீடு வாங்கத் திட்டமிட்டவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை.
ரெடி டூ மூவ் வீடுகள்
அந்த வகையில் பிராம்டைகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் ரெடி டூ மூவ், அதாவது முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல், மக்களின் மத்தியில் ரெடி டூ மூவ் வீடுகளுக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக இருக்கிறது என இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தடாலடி உயர்வு
2015ல் வெறும் 7 சதவீதமாக இருந்த ரெடி டூ மூவ் வீடுகளின் எண்ணிக்கை 2020ல் 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ரயில் எஸ்டேட் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் வீடு வாங்குவோர் காத்திருந்து வீடுகளுக்குள் செல்ல விருப்பம் காட்டுவது இல்லை என்பதே இதில் வெளிப்படும் நிதர்சனமான உண்மை. கடந்த சில வருடமாகப் பல திட்டங்கள் மிகவும் காலதாமதமாகக் கட்டி முடிக்கப்பட்டு வருகிறது, இதனால் வீடு வாங்குபவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கட்டி முடிக்கப்படாத வீடுகள்
கட்டி முடிக்கப்படாத வீடுகள்
பொதுவாக under-construction பிரிவில் இருக்கும் வீடுகளுக்குக் கட்டுமான நிறுவனங்கள் அதிகளவிலான சலுகைகளை அளிக்கும், இதன் மூலம் வீடுகளின் விலை சற்று குறைவாகவே இருக்கும், ஆனால் நீண்ட காலம் காத்திருக்கும் காரணத்தால் கடனுக்கான வட்டியும் அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை மக்கள் மாஸ்
2020ல் மட்டும் சுமார் 1,82,640 ரெடி டூ மூவ் வீடுகள் விற்பனையாகியுள்ளது, இது மொத்த வீட்டு விற்பனையில் 21 சதவீதம், மீதமுள்ள 79 சதவீத வீடுகள் under-construction பிரிவில் இருக்கும் வீடுகளாகும். மேலும் இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிகமாக ரெடி டூ மூவ் வீடுகள் விற்பனையாகியுள்ளது. சென்னையின் மொத்த வீடு விற்பனையில் 32 சதவீதம் ரெடி டூ மூவ் வீடுகள் தான்.