பணி ஓய்வுக்குப் பிறகு வீடு வாங்க வேண்டுமா? இதைப் பாலோ பண்ணுங்க..!
பணி ஓய்வுக்குப் பிறகு வீடு வாங்க வேண்டுமா? இதைப் பாலோ பண்ணுங்க..!
உங்களின் நண்பர்கள் சொத்துக்களில் முதலீடு செய்யும் போது நீங்கள் வேறு பிரச்சினைகளைக் கையாண்டு கொண்டு இருந்திருக்கலாம். உங்களுக்கான பொறுப்புகள் வேறாக இருந்திருக்கலாம்.
எது எப்படியிருந்தாலும், தற்போது நீங்கள் ஓய்வு பெற்று விட்டதால் கண்டிப்பாக உங்களுக்கு வீடு தேவை. ஆனால் பணத்தைத் திரட்டுவது மிகவும் கடினமாக உள்ளது மற்றும் சொத்துக்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
பல்வேறு வழிகளில் பணத்தைச் சேமிப்பதன் வாயிலாக உங்களின் பட்ஜெட்டுக்கு உள்ளேயே உங்கள் கனவு இல்லத்தை நிஜமாக்க முடியும். பணிஓய்விற்குப் பிறகான கனவு இல்லத்திற்குத் திட்டமிடும் போது, உங்களால் பணத்தை மேலாண்மை செய்ய முடியும் வழிகளின் பட்டியல் இதோ..
அளவு
பொதுவாகப் பணி ஓய்விற்குப் பிறகான இல்லத்தில் நீங்களும், உங்களின் வாழ்க்கைத் துணையும் என இருவர் மட்டுமே இருப்பீர்கள். இதனால் தனது சிறிய அளவிலான இல்லம் பரிந்துரைக்கப்படுகிறது. சிறிய அளவிலான சொத்திற்குக் குறைவான பணம் செலுத்தினால் போதும் என்பதால் உங்கள் பட்ஜெட்டும் குறையும். அதுமட்டுமின்றிப் பெரிய வீட்டை ஒப்பிடும் போது, சிறிய வீட்டைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவும் குறைவு.
இடம்
நீங்கள் சொத்து வாங்கும் இடம் தான் அதன் விலையை நிர்ணயிக்கிறது. மூத்த குடிமக்கள், எப்போதும் பரபரப்பாக இருக்கும் நகரத்து வாழ்க்கையை விட்டு சற்று தள்ளி இருப்பது தான் நல்லது. இது இரண்டு வழிகளில் நன்மை அளிகக்கூடியது. நகரத்தின் மையப் பகுதியில் உள்ள சொத்தைக் காட்டிலும், இந்தச் சொத்துக்கள் விலை மலிவாகக் கிடைக்கும் மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறச் சூழலையும் தரும். நீங்கள் வாங்கவுள்ள சொத்து மூத்த குடிமக்களுக்கான அனைத்து வசதிகளையும் தரும் திட்டமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதர செலவுகள்
புறநகர் பகுதியில் வீடு வாங்குவது ஆர்வமுள்ள ஒன்றாக இருந்தாலும், நீங்கள் அடிக்கடி நகரத்திற்குச் சென்று வரும் தேவை இருந்தால் புறநகரில் வசிப்தும் அதிகச் செலவுகளை ஏற்படுத்தும். இது போன்ற வேறு சில காரணிகளும் உங்களின் வீடு வாங்கும் ஒட்டுமொத்த தொகையையும் உயர்த்திவிடும். எனவே வீடு தேடத்துவங்குவதற்கு முன்பு, உங்களின் தேவைகள் என்னென்ன என்பதை நன்கு ஆராய்ந்து, உங்களால் முடிந்த அளவிற்குப் பணத்தைச் சேமியுங்கள்.