எஸ்பிஐ முதல் எச்டிஎப்சி வரை குறைந்த வட்டியில் ‘வீட்டு கடன்’ பெற ஏற்ற வங்கிகள்..!
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸேட் பாங்க் ஆப் இந்தியா 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் 25 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் குறைத்து 8.35 சதவீதமாக அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி 8.35 தான் வீட்டுக் கடன் சந்தையில் குறைவான வட்டி விகிதம் இது தான் என்று அறிவித்தது. மேலும் வீட்டுக் கடன் பெறுபவர்கள் 2.67 லட்சம் ரூபாய் வரை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.67 லட்சம் வரை வட்டியில் மானியமும் பெறலாம்.
உங்களுடைய பிற வீட்டு கடனையும் எந்த வீத கூடுதல் கட்டணமும் இல்லாமல் எஸ்பிஐ வங்கிக்கு மாற்றுவதன் மூலமாக எஸ்பிஐ வங்கியின் குறைவான வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைப் பெற்றுப் பயன்பெறலாம்.
ஐசிஐசிஐ
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி சேவையான ஐசிஐசிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.30 சதவீதம் வரை குறைத்தது. இதனால் வேலை செய்து சம்பளம் வாங்கும் பெண்களுக்கு 8.35 சதவீத வட்டி விகிதத்திலும் பிற 8.4 சதவீத வட்டி விகிதத்திலும் வீட்டுக் கடன் பெறலாம்.
ஐசிஐசிஐ வங்கி இந்த வட்டி விகிதத்தில் 24/36 மாதங்களாக மிதக்கும் மற்றும் நிரந்தர வட்டி விகித வீட்டுக் கடன் முறையிலும் அளிக்கின்றது.
எச்டிஎப்சி
இந்தியாவில் கடன் அளிப்பதற்கு மிகவும் பிரபலமான எச்டிஎப்சி வங்கியில் ஐசிஐசிஐ வங்கி போன்றே 30 லட்சம் ரூபாய் கடன் தகையை வேலை செய்து சம்பளம் வாங்கும் பெண்களுக்கு 8.35 சதவீத வட்டி விகிதத்திலும் பிற 8.4 சதவீத வட்டி விகிதத்திலும் வீட்டுக் கடன் பெறலாம்.
ஆக்சிஸ் வங்கி
மே 16-ம் தேதி முதல் ஆக்ஸிஸ் வங்கி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தில் 30 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளது. அதனால் மாத சம்பளம் வாங்குபவர்கள் வீட்டுக் கடன் வேண்டும் என்றால் 8.35 சதவீத வட்டி விகிதத்திலும், இதுவே வணிகம் செய்பவர்கள் என்றால் 8.4 சதவீத வட்டி விகிதத்திலும் வீட்டுக் கடன் பெறலாம்.