குறைந்த செலவில் நீச்சல் குளம் அமைக்கச் சூப்பர் ஐடியா..!
நீங்கள் அதிக அளவு பணத்தைச் செலவு செய்யாமல், குறைந்த இடத்திலேயே நீச்சல் குளம் வேண்டுமென்றால் சிறு நீச்சல் குள வடிவமைப்புள்ள நிலத்திற்கு உள்ளான நீச்சல் குள (In-ground pool) வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வடிவமைப்பில் செயல்படுத்துவதற்கான குறைவாக இருப்பதுடன், நீண்ட காலம் உழைக்கும் என்பதால் அதிகப் பணத்தைச் சேமிக்கலாம். சிறிய மற்றும் ஆழமற்ற நீச்சல் குளம் என்றாலே குறைந்த பராமரிப்பு, குறைந்த ஆட்கள் மற்றும் குறைந்த மூலப்பொருட்கள்.
மேலும் உங்களுக்கு விரும்பமான வடிவம் வேண்டுமென்றால் அதிகச் செலவுகள் ஏற்படும் என்பதால் அதையும் தவிர்க்கவும்.
தேவை குறைந்த காலத்தில் உருவாக்குதல் (Off-season installation)
குறைந்த விலையில் நீச்சல் குளத்தைக் கட்டமைக்கவேண்டும் என்றால், அதற்குத் தேவை குறைவாக உள்ள குளிர்காலத்தில் பணிகளைச் செய்ய வேண்டும். குளிர்காலத்தில் நீச்சல் குளத்தை வடிவமைக்கும் செயல்திட்டங்கள் குறைவாகவே இருக்கும் என்பதால், சிறந்த முறையில் குறைவான பணத்தில் வடிவமைத்து விடலாம். இதே காலத்தில் குறைந்த விலையில் அதற்கான கருவிகளை வாங்கிவிட வேண்டும்.
ஒப்பந்ததாரர்
மேலும், உங்கள் நீச்சல் குளத்தை உருவாக்க ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுக்கும் முன், குறைந்தபட்சம் ஐந்து ஒப்பந்ததாரரிடம் விசாரியுங்கள். பல்வேறு நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகளை ஒப்பிட்டுக் குறைந்த விலையில் சிறந்த சேவை வழங்குவோரைத் தேர்ந்தெடுங்கள். பின்னர் என்ன? நீச்சல் குளத்தில் மட்டுமில்லாமல் மகிழ்ச்சியிலும் மிதக்கலாம்.