பத்திரபதிவு துறை, வருவாய் துறை, அங்கீகார துறை என மூன்று துறைக்கும் தேவை ஒருங்கிணைப்பு……………

பத்திரபதிவு துறை, வருவாய் துறை, அங்கீகார துறை என மூன்று துறைக்கும் தேவை ஒருங்கிணைப்பு..

தமிழக அரசின் மிகப்பெரிய சவாலே?  பத்திரபதிவுத் துறை, வருவாய் துறை, அங்கீகார துறை இவை மூன்றும் ஒரே நேரத்தில் ஒரே தனிமையில் இயங்க வைப்பது மூன்று துறையும் மெர்ஜ் ஆகி இயங்கும் போது பொது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும்.

பொதுவாக EB, லைன் புதைக்கும் போதும், ஆன்லைன் கேபிள் புதைக்கும்போதும், குடிநீர் குழாய் புதைக்கும் போதோ ஒரே சாலையில் ஒவ்வொருவரும் குழி வெட்டுகின்றனர். பிறகு மூடுகின்றனர் மூன்று பேரும் ஒருங்கிணைந்து மேற்படி பணிகள் செய்யும்போது, ஒரே முறைதான் குழி வெட்டப்படும்.

இதனால் நேரம், பணம், உழைப்பு மிச்சப்படும், மேற்படி சாலையும் வீணாகாது, பொது மக்களின் வாகன போக்குவரத்துக்கும் அதிக இடஞ்சல்கள் இருக்காது.

ஆனால் மேற்படி EB, ONLINE WATER துறைகளுக்கு ஒரே சாலையில் வேறு வேறு திட்டங்களுக்கு வேறு வேறு களங்களில் போடுவதை தவிர்த்து ஒரே நேரத்தில் திட்டமிடுவது அதற்காக ஒருங்கிணைப்பு இல்லாதது போலவே, பத்திரப்பதிவு, நில வருவாய் துறை, அங்கீகார துறை போன்ற மூன்று ஒருங்கிணைக்கப்படாமல் செயல்படும்போது, பல வித அசௌரியங்கள், நேரடியாக (அ) மறைமுக வருவாய் இழப்புகள் ஏற்படுகின்றன. சில வேளைகளில் அதிக சிக்கல்கள் தீர்க்க முடியாமல் தவிர்க்கின்றனர்.

உதாரணமாக சொத்து கிரைய பத்திரம் செய்யும் போதே பட்டா பெயர் மாற்றத்திற்கான மனுவை நீதிமன்ற வில்லை ஒட்டி மேற்படி அனைத்து பத்திரங்களின் நகல்களையும் இணைத்து பத்திரம் பதிவு செய்யும் போது சார்பதிவகத்தில் கொடுக்கின்றோம். ஆனால் அவை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று சேர்வதே இல்லை.

பலபேர் நகல் கட்டணம், நீதிமன்ற வில்லை கட்டணம் என மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது. பட்டா மனு செய்ய மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ, அல்லது இணைய தளம் மூலமாக நேரடியாக மனுவையும் நீதிமன்ற முத்திரை வில்லை பத்திரத்தின் நகலையும் ஒப்படைக்க வேண்டி இருக்கிறது.

மிக சமீபத்தில் பத்திரப்பதிவு ஆன்லைனில் இப்பொழுது வந்து இருப்பதால் கிரைய பத்திரம் சார்பதிவகத்தில் முடிந்தவுடன் மேற்படி பத்திரங்கள் ஆன்லைன் மூலமாக ஆன்லைன் பட்டா பெயர் மாற்றத்திற்காக சென்று விடுகிறது.


பட்டா பெயர் மாற்ற மனு செய்ய கிரைய பத்திரம் நடக்கும் அன்றே ஆன்லைன் பட்டா அப்ளைக்கு சென்று விடுகிறது. ஆனால் பொதுமக்களுக்கு கிரையப்பத்திரம் ஒரிஜினல் பதிவு அலுவலகத்தில் திரும்ப கிடைக்க ஒரு வாரம் 1௦ நாட்கள் ஆகிறது. அதன் பிறகு தான் பத்திரத்தை எடுத்து கொண்டு கிராம நிர்வாக அலுவலரை அவர்கள் சந்திக்க முடியும்.

ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பட்டா மனு செய்து 1௦ நாட்கள் ஆள் வரவில்லை என்றால் ஆன்லைன்னில் மனுவை இரத்து செய்து விடுகிறார்கள்.

இன்னும் இதுபோல் பல சிக்கல்கள் அசௌகரியமாக பதிவு துறை, வருவாய், அங்கீகார துறைகளில் சின்ன சின்னதாக பல உள்ளன. இன்றைய நாளிதழில் நான் பார்த்த சமீபத்திய செய்தி பட்டா மாற்றம் செய்யும் நடைமுறை பற்றி அறிய தமிழக அரசின் வருவாய் துறை அதிகாரிகள் கர்நாடக மாநிலத்திற்கு செல்கிறது.

நான் ஏற்கனவே அங்கீகாரம் – தமிழகம் கர்நாடகம் ஒரு ஒப்பீடு ( அதனுடைய லிங்க் ) எழுதி இருக்கின்றேன். கர்நாடகத்தில் வருவாய்துறை , பத்திரப்பதிவுதுறை , அங்கீகார துறையின் மாஸ்டர் பிளான் எல்லாம் 90% ஒருங்கிணைக்கப்பட்டு ( INTESRATE) இருக்கிறது.


வருவாய் துறையின் FMB புலப்படம், அங்கீகார துறையின் பிளானோடு, ஒருகிணைக்கப் பட வேண்டும். மேற்படி படம் பதிவு துறையின் சர்வே எண் அடிப்படையிலான வழிகாட்டி மதிப்பு பதிவேடுடன் இணைக்கப்பட வேண்டும்.

அப்பொழுது பத்திரத்திலேயே பொதுமக்களுக்கு எது எது என்ன வகையான நிலம் என்று தெரிந்து விடும்.

இடத்தை தேர்வு செய்யும் போதே ஒரே இடத்தில் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். தற்பொழுது இடத்தை கிரயம் முடித்துவிட்டு பட்டா மாற்றம் செய்யும் பொழுது வருவாய் துறை ஆவணங்களில், புலப்படங்களில் மிக சரியாக ஆவண சொத்து விவரம் உட்காரவில்லை, அங்கீகாரம் வேண்டும் என்றால்,

பல தடை இல்லா சான்றுகள் வாங்க வேண்டும் என்பன போன்ற பல சுற்றி வளைத்து காதை தொடும் முறைகள் குறைந்து விடும்.


நன்றி:
சா.மு.பரஞ்சோதிபாண்டியன், Advocate.