வழி இல்லாத நிலத்துக்கு வழி

வழி இல்லாத நிலத்துக்கு வழி

வழி இல்லாத நிலங்களும் சொத்துக்களும் ஏராளமாக நம்முடைய கிராமப்புறங்களில் காணப்படுகிறது. அவ்வாறு இருக்கும் நிலம் நம்முடைய நிலம் இருந்தால் நாம் என்ன செய்வது. அதற்கு தீர்வு என்ன என்ன என்பதை பார்ப்போம்.

நீங்கள் ஒரு நிலம் ஏற்கனவே வாங்கி விட்டீர்கள் என்று வைத்து கொள்வோம். அதில் நீங்கள் விவசாயம் செய்து இருந்தால் போக வர வரப்பு வழி கண்டிப்பாக வேண்டும். இதனை நீங்கள் நீங்கள் நீதிமன்றம் சென்று மனு அளித்தால் கண்டிப்பாக உங்கள் வசம் தான்.

இதையே நீங்கள் ஒரு வீடு அல்லது நிலம் வாங்கி இருக்கிறீர்கள் என்றால் அதற்கு போக வர வழி இல்லை எனில் என்ன செய்வது. கண்டிப்பாக நீங்கள் நீங்கள் வசிக்கும் இடத்தின் மொத்த கிராம நில வரைபடம் எடுத்து கொள்ள வேண்டும். அதில் வழி பாதை மொத்தமாக இருக்கும். அதனை வைத்து உங்களுக்கு வழி இருக்கிறதா என்று சோதனை செய்யலாம்

ஒருவேளை வழி இருந்து அதனை பக்கத்து வீட்டுக்காரர் அல்லது வேறு யாரோ ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தால்  நீங்கள் அவர்களிடம் சென்று நில வரைபடத்தில் தோன்றிய வழிகளை காண்பியுங்கள். அதற்கும் அவர்கள் எங்கள் நிலம் தான் என்று கூறினால் நீங்கள் வட்டாட்சியரை தொடர்பு கொள்ளலாம்.