முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தாமல் சொத்துரிமை மாற்றம் செய்வது எப்படி?
முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தாமல் சொத்துரிமை மாற்றம் செய்வது எப்படி?
ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்துரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதே குடும்ப உறவுகளுக்குள் சொத்துரிமை மாற்றம் நிகழும்போது அதாவது சொத்துரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒரேமுறை, தானமாக வழங்குவது, இதனை பத்திரத்தில் பதிந்து பதிவு செய்வதைத் தான் தானப் பத்திரம் என்றழைக்கப்படுகிறது.
இந்த தானப் பத்திரம் மூலம் சொத்துரிமை மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர், தன் சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தன் கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம்.
இப்படி தானமாகக் கொடுக்கும் சொத்தை பதிவு செய்யும் போது முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1% அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவுக் கட்டணம் 2000 ரூபாய் கட்ட வேண்டும். தானம் கொடுப்பதை, தானம் வாங்குபவர் ஏற்றுக்கொண்டு, அந்த இடத்தின் சுவாதீனத்தை, உடனடியாக அடைய வேண்டும். அந்த இடத்தின் மீதான வருவாய் ஆவணங்கள், பிற ஆவணங்களை உடனடியாக தானம் வாங்குபவர் தனது பெயருக்கு மாற்ற வேண்டும். தானம் ரத்து செய்ய இயலாத ஒன்று.
ஆதாரம் : லாயர்ஸ் லைன்