ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் கவனிக்க வேண்டியவை
ரியல் எஸ்டேட் பிசினஸ் பிளான் ரீதியாக வீடு, மனை, நிலம், தோட்டம் ஆகிய எவ்வகையிலான அசையா சொத்துக்களாக இருந்தாலும், அவற்றிற்கான பத்திரங்கள், பட்டா மற்றும் வில்லங்கச் சான்று போன்ற ஆவண ரீதியான தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் தான் வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
பில்டர் மற்றும் டெவலப்பர் ஆகியோர் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
கான்கிரீட் கட்டமைப்பு மற்றும் விற்பனை என்ற நிலையிலிருந்து, வாழ்வியல் அவசியங்களின் அடிப்படையில் வாடிக்கையாளர் தேவைகளுக்கேற்ப சேவை அளிக்கும் வர்த்தக மாடலாக ரியல் எஸ்டேட் துறை மாற்றம் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் சந்தை நிலவரம் மட்டுமல்லாமல் மக்களின் பொதுவான மனப்பான்மையை கணித்தும், ரியல் எஸ்டேட் பிசினஸ் பிளான் மூலம் வர்த்தக வியூகங்களை பில்டர்கள், டெவலப்பர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள் அமைத்துக் கொண்டு சிறந்த எதிர்காலத்தை பெற முடியும்.