ஒரு ஆடம்பர வீட்டில் இதெல்லாம் இருக்க வேண்டும்.. இல்லைனா வேஸ்ட்..!

ஒரு ஆடம்பர வீட்டில் இதெல்லாம் இருக்க வேண்டும்.. இல்லைனா வேஸ்ட்..!

மெதுவாக  வளர்ந்து வந்தாலும், இந்தியாவில் ஆடம்பரத்தில் எந்தவிதமான பின்னடைவும் இல்லை. ஃபோர்ப்ஸ் படி, 2017 இல் இந்தியா 101 பில்லியனர்கள் கொண்டு உலகச் சந்தையில் கம்பீரமாக உள்ளது.

கூடுதலாக,  கிட்டத்தட்ட 2.36 லட்சம் மில்லியனர்களுடன், உலக அளவில் ஈர்க்கக்கூடிய அளவு நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. இப்படி வளம் கொழிக்கும் இந்தியாவில் ரியல் எஸ்டேட் பல தரப்பட்ட வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதில் ஆடம்பர வீடுகளுக்குப் பஞ்சமில்லை.

ஆடம்பர  வீட்டில் பில்லியனர்கள் மற்றும் மில்லியனர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் யாவை..? அனைத்தையும் தாண்டி கீழ் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் இருந்தால் தான் இது ஒரு ஆடம்பர வீடு. அப்படி என்ன இருக்கிறது. 

தொழில்நுட்ப ரீதியாகத் திறமை

ஒவ்வொரு  ரியல் எஸ்டேட் டெவலப்பர் மற்றும் வீடு வாங்குபவர் ஒரு ஆடம்பர வீட்டில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று விரும்புவர். எனவே, ஆட்டோமேஷன் ஒரு முக்கிய வார்த்தை ஆகிறது.

சொத்து விலை  குறியீட்டைப் பொறுத்து, தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அளவு மாறுபடும். எரிசக்தி திறமையான வீடுகள், ஸ்மார்ட் லைட்டிங் மற்றும் ஒலி வீடுகள், க்ளைமேட்-கட்டுப்பாட்டு இல்லங்கள், ஸ்மார்ட் கழிப்பறை கொண்ட வீடுகள் இவை எல்லாம் தற்போது ஆடம்பர வீடுகளில் ஒரு முக்கிய விஷயமாக இருக்கிறது.

தரமான கட்டுமானம்

மூலப்பொருட்கள்,  ஃபிட்டிங்க்ஸ், அலங்கார பொருட்கள் மற்றும் accessories-இன் தரம் ஒரு ஆடம்பர வீட்டை வரையறுக்கின்றன. கட்டுமானம் மட்டுமல்லாமல், உட்புற மற்றும் வெளிப்புற மேக்-ஓவர்கள் அல்லது சமையலறை மற்றும் குளியல் புனரமைப்பு, வரவேற்பு, வடிவமைப்பு புனரமைப்புகள் அல்லது கட்டடக்கலை மேக்-ஓவர்கள் போன்ற மேம்பாட்டுச் சேவைகள். இத்தகைய வரிசையான சேவைகள் வழங்குவதிலும் டெவலப்பர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இடம்

மும்பை  போன்ற சில பிரதான இடங்களில் வீடு இருந்தாலும் கூடச் சொகுசு வீட்டில் வசிக்கும் இடம் தான் அடிப்படைத் தேவை. எனவே, 3,000 சதுர அடிக்கு மேலே உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை நீங்கள் மும்பையில் தேடுகிறீர்களானால், 10 முதல் 30 கோடி ரூபாய் அல்லது அதற்கும் மேலே செலவு செய்ய நீங்கள் தயாராக வேண்டும்,

இருப்பிடம் 

ஆடம்பரம்  என்பது வீடு எந்தப் பகுதியில் உள்ளது என்பதையும் குறிக்கும். சிறிய நகரங்களில் அல்லது பெரிய நகரின் வெளியே அமைந்திருக்கும் பெரிய பாரம்பரிய வீடுகள் ஆடம்பர வீடாகத் தகுதி பெறாது. 

எனவே,  அந்த இடம் ஒவ்வொரு விதத்திலும் பிறர் விரும்பத்தக்கதாகவும், விலையுயர்ந்ததாகவும், உயிர்ப்பு மிகுந்ததாகவும் இருக்க வேண்டும். மொத்த திட்டத்தின் இடம் மட்டுமல்ல, உங்கள் வீடிருக்கும் யூனிட் இடம் கூட விலையில் வேறுபாடுகளைக் கொண்டுவரலாம்

சுற்றுப்புறம் 

ஒரு சொகுசான சுற்றுப்புறம், ஒரு சிலரின் கவனத்தை ஈர்க்கிறது. எனவே, ஆடம்பர டெவலப்பர்கள் இந்த முக்கிய மக்களை இலக்காகக் கொண்டு பிராண்ட் மதிப்பைப் பராமரிப்பதில் எச்சரிக்கையாக உள்ளனர். குடியிருப்பாளர்கள் தனியுரிமையை வலியுறுத்துவதால்,. ஒரு தளத்தில் ஒரு வீடு என்ற கருத்துக் காலப்போக்கில் பிரபலமாயிற்று

டிரென்ட்-செட்டர் 

நீங்கள்,  நிலப்பரப்பு, சமையலறை அல்லது நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பொழுதுபோக்கு மண்டலங்கள் போன்ற வசதிகள் போன்றவற்றை அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

இவை  ஒவ்வொன்றும் ஒரு டிரென்ட்-செட்டராகத் தான் இருக்க வேண்டும். விலை எப்போதும் வசதிகளின் தரத்தை உயிர்ப்பாகவே வைத்துள்ளது. . எனவே, ஒரு ஆடம்பர திட்டத்தில் உள்ள நீச்சல் குளமும் மற்றும் ஒரு இடைப்பட்ட திட்டத்தில் உள்ள நீச்சல் குளமும் ஒன்று அல்ல. எனவே, ஆடம்பர திட்டங்கள் கவர்ச்சியைச் சேர்க்கும்போது, ஒரு வழக்கமான திட்டம் அதைச் செய்வதில்லை. இதேபோல், காசிபோக்கள், அவுட்ஹவுஸ், அல்லது ஒரு வெளிப்புற ஓய்வு இடம் வீடுகளில் ஒரு அரிதான வசதி. எனவே விலையும் அதிகம்.

வீட்டில் பொழுதுபோக்கு 

ஒரு  வீட்டுத் தியேட்டர் மற்றும் தனிப்பட்ட கேமிங் மண்டலத்துடன் கூடிய ஒரு பொழுதுபோக்கு மண்டலம் ஒரு ஆடம்பர வீட்டிற்குப் புதிய சேர்ப்பாக உள்ளது. சமீபத்திய சந்தையில் சாதனங்கள் இளம் வயதினர் மற்றும் முதியவருக்கு ஒன்று போலவே இருக்க வேண்டும். இந்த அம்சத்தின் முக்கிய நோக்கம் வீடு வாங்குபவர் எப்போதும் வீட்டின் ஆடம்பரங்களை விட்டு வெளியே வர வேண்டிய அவசியத்தை உணராதிருப்பதற்கான ஒரு இடத்தை உருவாக்குவதாகும்.

உடற்பயிற்சிக்கு முன்னுரிமை

ஆடம்பர வீடுகள்  பெரும்பாலும் தனிப்பட்ட ஜிம் பொருத்தப்பட்டதாக உள்ளது.. செல்வந்தர்கள் தங்கள் வீட்டு ஜிம்மிலேயே உடற்பயிற்சி செய்ய விரும்புகிறார்கள் ஏனென்றால் மற்ற ஜிம் களில் அவர்கள் இயந்திரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்.

ஆடம்பர வீடுகளில் அனைத்துத் தேவையான இயந்திரங்கள் மற்றும் எடை கற்கள் உள்ளடக்கிய ஒரு தனி அறை இருக்கும் மேலும் அங்கு ஒரு தொலைக்காட்சி பெட்டி, வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் மற்ற பிற சாதனங்களைக் கொண்டுள்ளதால் அவர்களால் வசதியாக உடற்பயிற்சி செய்ய முடிகிறது

அப்-ஹை 

வீட்டின்  வரவேற்பறை வரை வந்து நிற்கும் ஒரு தனிப்பட்ட லிஃப்ட் ஆடம்பர வீடுகளில் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும். இப்போது ஒரு அடுக்குமாடி, ஒரு பென்ட்ஹவுஸ் அல்லது ஒரு மாளிகையில் லிஃப்ட் கட்டாயத் தேவையாக இருக்கிறது.

விஸ்தீரணமான தனி இடம் 

படுக்கை  அறைகள் ஆடம்பர வீடுகளுக்குப் பெரிய மதிப்புச் சேர்க்கிறது. நமக்குத் தெரிந்த வகையில் ஒரு மாஸ்டர் படுக்கையறை, ஒரு பெரிய அளவு கட்டிலுக்கு இடமளிக்கும் வகையில் இருக்கும். ஆட்டோமேஷன் அமைப்புகளுடன் கூடிய அனைத்து ஹை-டெக் அம்சங்களையும் இங்கே உள்ளடக்க முடியும்.

மாஸ்டர் படுக்கையறையின் நீட்டிப்பு ஒரு வாக்-இன் அலமாரி. நீங்கள் உங்களுடைய அனைத்து விலையுயர்ந்த வடிவமைப்பாளர் ஆடைகள், காலணிகள் மற்றும் அனைத்தையும் வைக்க முடியும். இந்த அலமாரி ஏராளமான விளக்குகள், சீலிங்-டு-ஃப்ளோர் கண்ணாடிகள் மற்றும் சிறந்த அலமாரிகளுடன் நன்கு பொருத்தப்பட்டிருக்கும்.