சொந்த வீட்டை வாங்க சரியான வயது எது..? இளைஞர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை...

சொந்த வீட்டை வாங்க சரியான வயது எது..? இளைஞர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை...

வீடு என்பது  அத்தியாவசியத் தேவைகளில் மிக முக்கியமானது. அது நமக்கான சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் நினைத்தபடி வாழலாம், அதுமட்டும் அல்லாமல் எத்தனை பேரை வேண்டுமானாலும் தங்க வைக்கலாம்.

 சுவரில்  வரையலாம், கிறுக்கலாம், சத்தமாகப் பாட்டுப் பாடலாம். வாடகை வீட்டில் அது இயலாது. வீட்டின் உரிமையாளர் உங்களை வெளியேற்றி விடுவார். பின்பு மறுபடியும் வேறொரு வீடு தேடி அலைய வேண்டும்.

வீட்டின்  மீதும், வீட்டு மனைகளின் மீதும் முதலீடு செய்வதென்பது நீங்கள் மிகவும் சுதந்திரமாய் வாழ வழி செய்கின்றீர்கள் என்று அர்த்தம்.

ஒவ்வொருவரின் கனவு 

சொந்த வீடு  என்பது நம் ஒவ்வொருவரின் கனவு. ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்துத் தங்குவதை விட நம் இடத்தில் கட்டப்படும் வீடும், நம் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கும் வீட்டில் வாழ்வதும் தரும் மகிழ்ச்சி அலாதியானது. வீட்டிற்காகச் செய்யப்படும் முதலீடானது மகிழ்ச்சி என்பதைக் காட்டிலும் புத்திசாலித்தனம் என்றும் சொல்லலாம். எவ்வளவு விரைவாக நீங்கள் வீட்டிற்கான முதலீட்டிற்காகப் பணம் சேமிக்கின்றீர்களோ அவ்வளவு தூரம் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.

வீட்டுக் கடன் 

சொந்த வீடு  என்னும் கனவை அடைய வீட்டுக் கடன் வாங்கலாம். அது உங்களின் கனவினை மிக எளிதில் அடைந்துவிட வழி செய்யும். ஆனால் வங்கியிலிருந்து வீட்டுக்கடன் வாங்க உங்கள் வயது, வருமானம், ரிஸ்க் அப்பெட்டைட் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா? வீடு வாங்கும் முன் நீங்கள் யோசித்துச் செயல்படி வேண்டிய விஷயங்கள் கீழே,

அடிப்படை கணக்கீடு 

உங்களின்  மாத வருமானம், உங்கள் தொழிலினால் நீங்கள் அடையும் வருமானம், அல்லது ஏற்கனவே உங்களிடம் இருக்கும் பழைய சொத்து மற்றும் வீடுகளின் மதிப்புகள் கொண்டே வீட்டுவசதி கடன்கள் தரப்படுகின்றது.

வயது வரம்பு 

புதுவீடோ,  வீட்டு மனையோ வாங்க உச்ச வயது வரம்பு என்று ஒன்றுமே இல்லை. ஆனால் உங்களின் வருமானம் மற்றும் வங்கி செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படும் என்பதை மறந்து விட வேண்டாம்.

மாத வருமானம் 

ஒரு வேளை  நீங்கள் மாத வருமானம் பெறுபவர்களாக இருந்தால் நீங்கள் வாங்கும் சம்பளம் மற்றும் உங்களின் பணி ஓய்வுக்கு இடைப்பட்ட காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மாத சம்பளத்தின் உதவியால் வீடு வாங்க விரும்புபவர்கள் தங்களின் 30 வயதிற்குள் வீடு வாங்கினால் நலம்.

சொந்த தொழில் 

ஒரு வேளை  நீங்கள் சொந்தமாகத் தொழில் நடத்திவருபவர் என்றால் நீங்கள் உங்களின் 40 வயதிலும் வீடு வாங்கலாம். உங்களுக்கு ஏற்கனவே சொந்த வீடும், சொத்துகளும் இருக்கும்பட்சத்தில் உங்களின் 50 மற்றும் 60 வயதுகளிலும் நீங்கள் சொந்தமாக வீடு வாங்கலாம். அந்தச் சொத்துகளின் மதிப்பினை வைத்து உங்களுக்கான வீட்டுக்கடனை வெகு சீக்கிரமாக வாங்கி விடலாம்.

முதலீடு செய்யும் முன் யோசிக்க வேண்டியவை 

சந்தை  நிலவரங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களின் வீட்டுக்கடன் வசதிகள் பற்றிய போதுமான தகவல்களை உங்களுக்குத் தரும். இரண்டு அல்லது மூன்று நபர்கள் சேர்ந்து சம அளவாக முதலீடு செய்யும் போது அபெடைட் ரிஸ்க் குறையும். ஒவ்வொரு வங்கியிலும் வீட்டுவசதிக் கடனிற்கான வட்டி விகிதங்களில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

முழுமையான தகவல் 

அதனைப்  பற்றிய தகவல்களை நீங்கள் இணையத்தின் வழியாகவோ அல்லது வங்கி கிளைகளுக்கு நேரில் சென்றோ தெரிந்து கொள்ளலாம். உங்கள் உறவினர்கள், நண்பர்கள் யாராவது ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கித் தவணைகளைச் செலுத்திக் கொண்டிருந்தால், அவர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பது மிகவும் நல்லது.

சொந்த வீடு

ஏற்கனவே  சொந்தமாக வீடு வைத்திருக்கும் அனைவரும் வீடுகள் வாங்க ஆசைப்படுவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், வீடு அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிப் போகின்றது. தேவைக்கேற்பவும், வாழும் சூழலிற்கேற்பவும் தான் வீடுகள் தேவையாகின்றன. சிலர் வெளியூரில் வேலை செய்தாலும், அவர்களுக்கெனச் சொந்தமாக வீடு இருக்கும். சிலர் பல ஆண்டுகள் வாடகைவீட்டில் தங்கினாலும் ஓய்வு காலத்தில் வசிக்கச் சொந்தமாக ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார்கள்.

நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை 

நீங்கள்  உங்களின் 25 வயதில் வீடு வாங்க வீட்டுக்கடன் வாங்கினால் உங்களுக்கு வரிச்சலுகைகள் கிடைக்க வாய்ப்புண்டு 

• நீண்ட காலத்திற்கான தவணைமுறைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பது உங்களின் வீட்டுவசதிக் கடனை அடைப்பதற்கு எளிமையாகவும் சிக்கல்கள் இல்லாததாகவும் இருக்கும்

 • நீங்கள் வெளி அலுவல் காரணமாகச் சொந்த வீட்டிலிருந்து வேறு இடத்திற்குக் குடியேற நேரினால் உங்களின் வீட்டினை வாடகைக்குத் தரலாம். அதனால் உங்களுக்கு ஒரு கூடுதல் வருமானம் தரும்.

 • முப்பது வயதில் வீடு வாங்க முற்பட்டால், உங்களின் நிலையான வருமானம், இதுவரை சேமித்து வைத்திருக்கும் பணம் ஆகியவை உங்களுக்கு அதிக அளவில் உதவும். • திருமணமானவர்கள் வீட்டுக்கடன் வாங்கினால் அதை இருவரும் இணைந்தே திருப்பிச் செலுத்தலாம்.

 • 40 வயது ஆகும் போது உங்களின் பெரும்பாலான வீடு சார்ந்த சுமைகள் குறைந்திருக்கும். அப்போது உங்களின் வருமானத்தின் மதிப்பினை கணக்கில் வைத்துக் கொண்டு வீட்டுவசதிக் கடன் பெற்றுக் கொள்ளலாம்

. • வீடு எங்கே எப்போது வாங்கப் போகின்றோம் என்பதைத் தீர்க்கமாக முடிவு செய்துவிட்டு பின்பு வீட்டுக்கடன் பற்றி யோசிக்கச் செய்யுங்கள்.