ரியல் எஸ்டேட் முதலீட்டில் சிறந்த ரிட்டர்ன்ஸை பெற 5 சூப்பர் வழிகள்
ரியல் எஸ்டேட் முதலீட்டில் சிறந்த ரிட்டர்ன்ஸை பெற 5 சூப்பர் வழிகள்
ஆனால் நல்ல ரிட்டர்ன்ஸை தரும் முதலீட்டை எப்படி செய்வது என்ற குழப்பம் பொதுவாக அனைவருக்கும் இருக்கும். உங்களுக்கும் இந்த குழப்பம் இருந்தால் இந்த செய்தி உங்களின் குழப்பங்களை தீர்க்க நிச்சயமாக உதவி செய்யும்.
Best return from Real Estate investment :
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது எப்போதுமே ஒரு நன்மை பயக்கும் செயலாகும். ஒரு அவசர தேவைக்கும் கூட பல வகையில் இந்த முதலீடு கை கொடுக்கும். அதனால் தான் பெரும்பாலான மக்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு அதிக அளவில் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
ஆனால் நல்ல ரிட்டர்ன்ஸை தரும் முதலீட்டை எப்படி செய்வது என்ற குழப்பம் பொதுவாக அனைவருக்கும் இருக்கும். உங்களுக்கும் இந்த குழப்பம் இருந்தால் இந்த செய்தி உங்களின் குழப்பங்களை தீர்க்க நிச்சயமாக உதவி செய்யும்.
கீழ் வரும் தகவல்கள் அனைத்தும் வில்லா ஓர்டிகா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் வடிவமைப்பாளர் சராப்ஜித் சிங் கூறியது. நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் இந்த ஐந்து விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் சிறப்பான ரிட்டர்ன்ஸை பெற இயலும் என்கிறார் சிங்.
நிலம் அமைந்துள்ள இடம் :
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் போது நீங்கள் எங்கே நிலம் / வீடு / வீட்டுமனைகள் வாங்குகிறீர்கள் என்பது மிக முக்கியம். பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சந்தைகள் என அனைத்தும் அருகில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துவிட்டு பிறகு முதலீடு செய்யுங்கள். நகரத்துடன் அனைத்து வகையிலும் தொடர்பில் இருக்கும் ஒரு இடத்தில் நிலம் அல்லது வீட்டுமனைகள் வாங்குவது சிறந்த வழியாகும்.
வடிவமைப்பு :
நீங்கள் நிலம் வாங்குவதற்கு பதிலாக அப்பார்மெண்ட் அல்லது வீடுகளாக வாங்கும் பட்சத்தில் அந்த வீடுகளை வடிவமைக்கும் நிறுவனம் எது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பிரபலமான நிறுவனங்களால் சிறப்பாக ஒரு அமைவிடம் வடிவமைக்கப்படுமாயின் சிறந்த பொருட்களை கொண்டு உள்கட்டமானம் உருவாக்கப்பட்டிருக்கும். அதனால் நீங்கள் அடிக்கடி ரிப்பேர் மற்றும் மெய்ண்டனஸிற்காக பணத்தை செலவழிக்கும் நிலை இருக்காது.
தரம் :
ஸ்டேட்-ஆஃப்-ஆர்ட் கட்டுமான நுட்பங்களை நிறுவனங்கள் பயன்படுத்தும் போது கட்டுமானங்களில் வாழ்நாள் நீடித்து இருக்கும். காலத்திற்கும் நிலைத்து நிற்கும் கட்டங்களுக்கு நீங்கள் செய்ய இருக்கும் ரிப்பேர் செலவு என்பது குறைவாகவே இருக்கும். உங்களுக்கு நிறைய வகையில் உங்கள் பணத்தை மிச்சம் செய்து தர வழிவகை செய்யும்.
அதிக வாடகை :
சொத்தின் மதிப்பு அதிகரிக்கும் அதே வேளையில் முதலீடு செய்த நபருக்கு சிறந்த வாடகை தொகையை கிடைக்கவும் வழி வகை செய்கிறது நல்ல கட்டுமானம்/அப்பார்மெண்ட்களில் செய்யப்பட்ட முதலீடு. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மற்றும் தரமான பொருள் மற்றும் கட்டுமான நுட்பங்களைப் பயன்படுத்திய ஒரு முக்கிய இடத்தில் ஒரு கட்டடத்தை வாங்குவது சிறந்த வாடகை வசூலை வழங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மறுவிற்பனை மதிப்பு
எந்தவொரு ரியல் எஸ்டேட் முதலீட்டின் உண்மையான மதிப்பு அது விற்பனை செய்யப்படும் போது தான் தெரிய வரும். எனவே மிக விரைவான மறுவிற்பனை மதிப்பு இந்த விசயத்தில் மிக முக்கியமானது. ஒரு சொத்தை வாங்கும் போது இடம், நிலத்தின் மதிப்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை கவனத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.