முதலீட்டில் 50% லாபம் பெற ரியல் எஸ்டேட் தான் பெஸ்ட் சாய்ஸ்
முதலீட்டில் 50% லாபம் பெற ரியல் எஸ்டேட் தான் பெஸ்ட் சாய்ஸ்
சென்னை: கடந்த பத்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண குப்பை நிலம் கூட இப்போது பிளாட் போட்டு விற்கின்றனர். மண் மீதான ஆசை யாரையும் விட்டு வைக்கவில்லை. நிலத்தின் மீதான முதலீடு நம் எதிர்காலத்தை பெரிய அளவில் மாற்றிட உதவும்.
ஆனால் இன்றளவும் ரியல் எஸ்டேட் மீதான அச்சம் அதிகளவில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த வளர்ச்சி சாமானிய மக்களுக்கு சொந்த வீடு என்னும் கனவை எட்டும் உயரத்தில் கொண்டு வந்துள்ளது. இது உண்மையில் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
வீட்டு மனை முதலீட்டாளர்களை கவரும் வகையிலும் சாதாரண மக்களின் விட்டு மனை கனவை நினவாக்கும் வகையில் மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்தது.
வங்கி கடன்கள்
முதல் முறையாக ரியல் எஸ்டேட் அல்லது விட்டு மனையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 1.5 இலட்சம் முதல் 2.5 இலட்சம் வரை எளிமையான முறையில் வங்கிகள் கடன் வழங்க உத்தரவு பிறப்பித்தது. இது ஒவ்வொருவரின் வீடு வாங்கும் கனவை நனவாக்க மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
வர்த்தகம் உயர்வு
பில்டர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளின் விலையை குறைத்து கொண்டு வருகிறது. இதனால் இத்துறையின் வளர்ச்சியும் வர்த்தகமும் உயர்ந்துள்ளது.
குறைவான விலையில் வீட்டு மனைகள்
மேலும் கடந்த சில காலாண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை மிதமான வேகத்தில் செல்கிறது. இதனால் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் 30 இலட்சம் முதல் 60 இலட்சம் வரை விற்கப்படுகிறது.
சாதகமான வழிமுறைகள் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான ஒழுங்குமுறை சீர்திருத்தங்களால் ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படை தன்மை, ஒற்றை வழி அனுமதி, வரி சார்ந்த சீர்திருத்தங்கள், இடைதரகர்களின் தலையிடு ஆகியவை களையப்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் துறை மீண்டும் பாதுகாப்பான வளர்ச்சியை அடையும் என தெரிகிறது.
லாபம் நிச்சயம்
தற்போது உள்ள சூழ்நிலையில் வீடுகளை வாங்க நினைப்பவர்கள் சரியான இடத்தில் சரியான முறையில் முதலீடு செய்தால் அதிகப்படியான லாபம் அடையலாம். ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் கூறுகையில் அடுத்த 3 வருடத்தில் ரியல் எஸ்டேட் யாரும் நினைக்காத உயரத்தை எட்டும் என கூறுகின்றனர்.
50% லாபம்
இந்த தருணத்தில் முதலீடு செய்யதால் 50 சதவீதத்திற்கு அதிகமாக லாபம் அடையலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய வீடு உங்கள் கையில்
இதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பட்ஜெட் தாக்கல் ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமான அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நீங்கள் வாங்கு வீட்டிற்கு ஈஎம்ஐ செலுத்தி வாடகைக்கு செல்வதை விட, ஈஎம்ஐ செலுத்தி வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு வட்டியில் 0.25 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.