ரியல் எஸ்டேட் விதிகள்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ரியல் எஸ்டேட் விதிகள்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடில்லி : ரியல் எஸ்டேட்  துறையில் 'பில்டர்' மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் ஒப்பந்தம் செய்து  கொள்ளும் வகையிலான விதிகள் வகுக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து, மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.

ரியல் எஸ்டேட்  ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க  புதிய விதிகளை வகுக்க கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான  விசாரணையின் போது நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு:வீடு வாங்க நினைக்கும் நடுத்தர  மக்களின் நலன் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது. 
ரியல் எஸ்டேட் துறையில் பில்டர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளும்  வகையில் விதிகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம்.

இது தொடர்பாக  ஏற்கனவே அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய விதிகள் ஒட்டுமொத்த நாட்டிலும் அமலாக வேண்டும்.  எனவே, மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.