வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிப்பது லாபமா?

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிப்பது லாபமா நஷ்டமா?

நம்மில்  பெரும்பாலானோர் சொந்த வீட்டை வீட்டுக் கடன் மூலம்தான் வாங்கியிருப்போம். இப்படி வாங்கிய கடனை முடிந்த அளவுக்கு சீக்கிரமாகத் திரும்பக் கட்டி முடித்துவிட வேண்டும் என்பதில் நம்மவர்கள் குறியாக இருக்கிறார்கள். 

பொதுவாக,  கடன் என்பதைப் பாரமாக நினைப்பவர்கள் நம்மவர்கள். அதிலும் அதிக கடன் தொகை இருக்கும் வீட்டுக் கடனை நம்மவர்கள் பெரும் பாரமாகவே நினைக் கிறார்கள். எனவேதான், கூடுதலாக இ.எம்.ஐ செலுத்துகிறார்கள்; கணிசமான தொகை கையில் கிடைக்கும்போது அதை வீட்டுக் கடனைத் திரும்பக் கட்ட பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அப்படித்தான்  எனக்குத் தெரிந்தவர்களில் ஒருவரான சுரேஷ், கையில் கணிசமான தொகை கிடைத்ததும் அதைக் கொண்டு வீட்டுக் கடனில் ஒரு பகுதியை (Part Payment) அடைத்துவிட்டார். இது நடந்தது 2020–ம் ஆண்டில். அதாவது, கொரோனா பாதிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு.

இப்போது அவர்,  ஏன்தான் அந்தத் தவற்றைச் செய்தோமோ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். காரணம், கொரோனா பாதிப்பின்போது போடப்பட்ட ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கத்தால் அவர் வேலை பார்த்த நிறுவனம் ஆறு மாதங்கள் பூட்டிக் கிடக்கும் சூழல் உருவானது. சுரேஷின் நிறுவனத்தில் பணியாளர்களின் சம்பளம் 50% குறைக்கப்பட்டது. இதில் சுரேஷும் மாட்டிக்கொண்டார்.

வீட்டுக் கடன்  தவணையைத் திரும்பக் கட்ட ரிசர்வ் வங்கி கொடுத்த ஆறு மாத சலுகையைப் பயன்படுத்தி, மாதத் தவணையைக் கட்டாமல் தப்பித்தார். கொரோனா பாதிப்பு குறைந்து புதிய இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகும் சுரேஷ் வேலை பார்த்த நிறுவனம் குறைத்த சம்பளத்தை அதிகரிக்கவில்லை. இந்த நிலை கிட்டத்தட்ட 13 மாதம் நீடித்தது. அதன் பிறகு தான் குறைக்கப்பட்ட சம்பளத்தில் 20 சதவிகிதத்தை உயர்த்தினார்கள்.

அப்போதும்  சுரேஷால் வீட்டுக் கடன் தவணையைச் சரியாகக் கட்ட முடியவில்லை. அவரின் வீட்டுக் கடன் வாராக்கடன் நிலைக்கு வந்துவிட்டது. சமீபத்தில் வீட்டுக் கடன் வாங்கிய வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்திருக்கிறது. உடனடியாக சுமார் ரூ.5 லட்சம் கட்டினால்தான் வீட்டை ஏலத்தில் விடுவதைத் தடுக்க முடியும் என அந்த நோட்டீஸில் சொல்லப்பட்டிருந்தது.

இந்தப்  பணத்தைப் புரட்ட சுரேஷ் பல வழிகளில் முயற்சி செய்தார். ஆனால், பணம் முடியவில்லை. இந்த நிலையில், வீட்டுக் கடன் வாங்கிய வங்கியிலேயே டாப்அப் கடன் கேட்க, ‘உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவாக இருக்கிறது’ எனப் பதில் வந்துள்ளது. மேலும், ‘நீங்கள் வீட்டுக் கடன் தவணையைப் பல மாதங்கள் தவணைக் காலம் தவறி கட்டி இருக்கிறீர்கள். அதனால், உங்களுக்கு மேலும் கடன் தர முடியாது. ரூ.5 லட்சம் உடனடி யாகக் கட்டவில்லை எனில், வீடு ஏலத்துக்கு வந்துவிடும்’ என்றிருக்கிறார்கள்.

நிலைமையைச்  சமாளிக்க தனிநபர் கடன் வாங்கலாம் எனில், அங்கும் குறைவான கிரெடிட் ஸ்கோரைக் காரணம் காட்டி கடன் தர மறுத்திருக்கிறார்கள்.

என்ன செய்வது எனத் தவித்துக்கொண்டிருக்கும் அவருக்கு தங்க நகை ஏதாவது இருந்தால், அடமானம் வைத்து கடன் வாங்குங்கள் அல்லது விற்றுப் பணமாக்குங்கள்; பின்னால் கடன் முடிந்த பிறகு, நகை வாங்கிக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னேன். ஆயுள் காப்பீடு எண்டோவ் மென்ட் பாலிசி எடுத்திருந்தார். அதை அடமானம் வைத்து, அதிலிருந்து கிடைக்கும் ரூ.5 லட்சம் கடன் அடையுங்கள். அடுத்து வருமானத்தைப் பெருக்க பகுதி நேர வேலை ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்; வீட்டில் இருப்பவர்கள் ஏதாவது பகுதி நேர வேலை அல்லது வணிகம் / தொழில் செய்ய முடியுமா என ஆலோசனை கொடுத்து அனுப்பினேன்.

சுரேஷ்,  மொத்தப் பணம் கிடைத்தபோது பகுதிக் கடனை அடைக்கப் பயன்படுத்தாமல் முதலீடு செய்திருந்தால், அவர் அந்தத் தொகையைக் கொண்டு, சம்பளம் குறைந்த காலத்தில் வீட்டுக் கடன் மாதத் தவணைத் தொகையை சரியாகக் கட்டி வந்திருக்க முடியும். அதாவது, மொத்தத் தொகையை மியூச்சுவல் ஃபண்டில் அதிக ரிஸ்க் இல்லாத ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால்கூட ஆண்டுக்கு சுமார் 10 - 12% வருமானம் கிடைத்திருக்கும். அதிலிருந்து கிடைக்கும் தொகையை மாதத் தவணையை அடைக்க பயன்படுத்தி யிருக்கலாம். தேவைப்பட்டால் தேவைப்படும் தொகைக்காக யூனிட்டுகளை விற்றுகூட மாதத் தவணையை சரியான நேரத்தில் கடனைக் கட்டியிருக்க முடியும்.

இனி  யாராவது வீட்டுக் கடன் பகுதிக் கடனை அடைப்பதாக இருந்தால், ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படவும். வேலை அல்லது தொழில் செய்யும் ஒருவருக்கு வருமானம் என்பது தொடர்ந்து வரும் அல்லது வராது என்று கணிக்க முடியாது. கோவிட்-19 போன்ற பாதிப்பு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. மேலும், எப்போதும் 3 முதல் 6 மாதங்கள் ஏன் 12 மாதங் களுக்குத் தேவையான தொகையை அவசரகால நிதியாக வைத்திருப்பது புத்திசாலித்தனமாகும்.

நம்மில் பெரும்பாலானோர் சொந்த வீட்டை வீட்டுக் கடன் மூலம்தான் வாங்கியிருப்போம். இப்படி வாங்கிய கடனை முடிந்த அளவுக்கு சீக்கிரமாகத் திரும்பக் கட்டி முடித்துவிட வேண்டும் என்பதில் நம்மவர்கள் குறியாக இருக்கிறார்கள். பொதுவாக, கடன் என்பதைப் பாரமாக நினைப்பவர்கள் நம்மவர்கள். அதிலும் அதிக கடன் தொகை இருக்கும் வீட்டுக் கடனை நம்மவர்கள் பெரும் பாரமாகவே நினைக் கிறார்கள். எனவேதான், கூடுதலாக இ.எம்.ஐ செலுத்துகிறார்கள்; கணிசமான தொகை கையில் கிடைக்கும்போது அதை வீட்டுக் கடனைத் திரும்பக் கட்ட பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அப்படித்தான் எனக்குத் தெரிந்தவர்களில் ஒருவரான சுரேஷ், கையில் கணிசமான தொகை கிடைத்ததும் அதைக் கொண்டு வீட்டுக் கடனில் ஒரு பகுதியை (Part Payment) அடைத்துவிட்டார். இது நடந்தது 2020–ம் ஆண்டில். அதாவது, கொரோனா பாதிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு.

இப்போது அவர், ஏன்தான் அந்தத் தவற்றைச் செய்தோமோ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். காரணம், கொரோனா பாதிப்பின்போது போடப்பட்ட ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கத்தால் அவர் வேலை பார்த்த நிறுவனம் ஆறு மாதங்கள் பூட்டிக் கிடக்கும் சூழல் உருவானது. சுரேஷின் நிறுவனத்தில் பணியாளர்களின் சம்பளம் 50% குறைக்கப்பட்டது. இதில் சுரேஷும் மாட்டிக்கொண்டார்.

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிப்பது லாபமா? 
வீட்டுக் கடன் தவணையைத் திரும்பக் கட்ட ரிசர்வ் வங்கி கொடுத்த ஆறு மாத சலுகையைப் பயன்படுத்தி, மாதத் தவணையைக் கட்டாமல் தப்பித்தார். கொரோனா பாதிப்பு குறைந்து புதிய இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகும் சுரேஷ் வேலை பார்த்த நிறுவனம் குறைத்த சம்பளத்தை அதிகரிக்கவில்லை. இந்த நிலை கிட்டத்தட்ட 13 மாதம் நீடித்தது. அதன் பிறகு தான் குறைக்கப்பட்ட சம்பளத்தில் 20 சதவிகிதத்தை உயர்த்தினார்கள்.

அப்போதும் சுரேஷால் வீட்டுக் கடன் தவணையைச் சரியாகக் கட்ட முடியவில்லை. அவரின் வீட்டுக் கடன் வாராக்கடன் நிலைக்கு வந்துவிட்டது. சமீபத்தில் வீட்டுக் கடன் வாங்கிய வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்திருக்கிறது. உடனடியாக சுமார் ரூ.5 லட்சம் கட்டினால்தான் வீட்டை ஏலத்தில் விடுவதைத் தடுக்க முடியும் என அந்த நோட்டீஸில் சொல்லப்பட்டிருந்தது.

இந்தப் பணத்தைப் புரட்ட சுரேஷ் பல வழிகளில் முயற்சி செய்தார். ஆனால், பணம் முடியவில்லை. இந்த நிலையில், வீட்டுக் கடன் வாங்கிய வங்கியிலேயே டாப்அப் கடன் கேட்க, ‘உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவாக இருக்கிறது’ எனப் பதில் வந்துள்ளது. மேலும், ‘நீங்கள் வீட்டுக் கடன் தவணையைப் பல மாதங்கள் தவணைக் காலம் தவறி கட்டி இருக்கிறீர்கள். அதனால், உங்களுக்கு மேலும் கடன் தர முடியாது. ரூ.5 லட்சம் உடனடி யாகக் கட்டவில்லை எனில், வீடு ஏலத்துக்கு வந்துவிடும்’ என்றிருக்கிறார்கள்.

நிலைமையைச் சமாளிக்க தனிநபர் கடன் வாங்கலாம் எனில், அங்கும் குறைவான கிரெடிட் ஸ்கோரைக் காரணம் காட்டி கடன் தர மறுத்திருக்கிறார்கள்.

என்ன செய்வது எனத் தவித்துக்கொண்டிருக்கும் அவருக்கு தங்க நகை ஏதாவது இருந்தால், அடமானம் வைத்து கடன் வாங்குங்கள் அல்லது விற்றுப் பணமாக்குங்கள்; பின்னால் கடன் முடிந்த பிறகு, நகை வாங்கிக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னேன். ஆயுள் காப்பீடு எண்டோவ் மென்ட் பாலிசி எடுத்திருந்தார். அதை அடமானம் வைத்து, அதிலிருந்து கிடைக்கும் ரூ.5 லட்சம் கடன் அடையுங்கள். அடுத்து வருமானத்தைப் பெருக்க பகுதி நேர வேலை ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்; வீட்டில் இருப்பவர்கள் ஏதாவது பகுதி நேர வேலை அல்லது வணிகம் / தொழில் செய்ய முடியுமா என ஆலோசனை கொடுத்து அனுப்பினேன்.

சுரேஷ், மொத்தப் பணம் கிடைத்தபோது பகுதிக் கடனை அடைக்கப் பயன்படுத்தாமல் முதலீடு செய்திருந்தால், அவர் அந்தத் தொகையைக் கொண்டு, சம்பளம் குறைந்த காலத்தில் வீட்டுக் கடன் மாதத் தவணைத் தொகையை சரியாகக் கட்டி வந்திருக்க முடியும். அதாவது, மொத்தத் தொகையை மியூச்சுவல் ஃபண்டில் அதிக ரிஸ்க் இல்லாத ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால்கூட ஆண்டுக்கு சுமார் 10 - 12% வருமானம் கிடைத்திருக்கும். அதிலிருந்து கிடைக்கும் தொகையை மாதத் தவணையை அடைக்க பயன்படுத்தி யிருக்கலாம். தேவைப்பட்டால் தேவைப்படும் தொகைக்காக யூனிட்டுகளை விற்றுகூட மாதத் தவணையை சரியான நேரத்தில் கடனைக் கட்டியிருக்க முடியும்.

இனி யாராவது வீட்டுக் கடன் பகுதிக் கடனை அடைப்பதாக இருந்தால், ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படவும். வேலை அல்லது தொழில் செய்யும் ஒருவருக்கு வருமானம் என்பது தொடர்ந்து வரும் அல்லது வராது என்று கணிக்க முடியாது. கோவிட்-19 போன்ற பாதிப்பு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. மேலும், எப்போதும் 3 முதல் 6 மாதங்கள் ஏன் 12 மாதங் களுக்குத் தேவையான தொகையை அவசரகால நிதியாக வைத்திருப்பது புத்திசாலித்தனமாகும்.

தேவையைவிட அளிப்பு மிக அதிகமாக அதாவது, அதிக நிதி இருப்பதால் வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.68% அளவுக்கு மிகவும் குறைத்துள்ளன. கடனுக்கான வட்டி குறைவாக இருக்கிற நிலையில், எத்தனை ஆண்டுகளில் வீட்டுக் கடனை அடைப்பதாகக் கடன் வாங்கியிருக்கிறீர்களோ, அத்தனை ஆண்டுகளில் அடைப்பது லாபகரமாக இருக்கும். வட்டி விகிதம் குறைவு, திரும்பக் கட்டும் அசல், வட்டிக்கு வரிச் சலுகை இருப்பதால் கடனை விரைந்து அடைக்க வேகம் காட்ட வேண்டியதில்லை. தவிர, வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைப்பதாலே முழுக்கடனும் தீர்ந்துவிடப் போவதில்லை. இதற்காக வங்கியானது உங்களைப் பாராட்டப்போவதும் இல்லை. உங்களுக்கு இடையில் ஏதாவது பணம் தேவைப்பட்டால் டாப் அப் கடன் கேட்டால், உங்கள் நன்னடத்தையைப் பார்த்து எந்த வங்கியும் உங்களுக்கு உடனே கடன் தந்துவிடப்போவதில்லை. அவர்கள் திரும்பத் திரும்ப பார்ப்பது, கிரெடிட் ஸ்கோரை மட்டும்தான். எனவே, கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடாமல் இருப் பது நல்லது. அதற்கு கைவசம் கூடுதல் தொகை இருந்தால், எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தக்கூடிய வகையில் முதலீடு செய்து வைத்துக் கொள்வது நல்லது.

மொத்தமாகக் கிடைக்கிற பணம் அல்லது உபரிப் பணத்தை நம்மிடம் வைத்துக்கொள்வது புத்திசாலிதனம். இன்றைக்கு வீட்டுக் கடனுக்கு கட்டும் வட்டி விகிதம் என்பது கிட்டத்தட்ட பணவீக்க அளவுக்குத்தான் இருக்கிறது. இந்த நிலையில், நமக்கு மொத்தப் பணம் கிடைத்தால் அல்லது மாதம் தோறும் உபரித் தொகை கிடைத்து வந்தால் அதை முதலீடு செய்ய வேண்டுமே (முதலீடு மூலம் 10% - 12% வருமானம் கிடைக்கும் நிலையில்) தவிர, வீட்டுக் கடன் தொகையை அதிகரித்துக் கட்டவோ, பகுதி தொகையை அடைக்கவோ கூடாது. வீட்டுக் கடனைக் கூடுதலாக அடைப்பதற்குப் பதில், அந்தத் தொகையை முதலீடு செய்து வந்தால்தான், உங்களுக்கு லாபம்!

நன்றி: விகடன்