இந்திய ரியல் எஸ்டேட்டில் என்ஆர்ஐகள் முதலீடு செய்வது எப்படி?

இந்திய ரியல் எஸ்டேட்டில் என்ஆர்ஐகள் முதலீடு செய்வது எப்படி?

இந்திய ரிசர்வ் வங்கி  மற்றும் எஃப்இஎம்எ (FEMA) ஆகியவை வகுத்திருக்கும் விதிமுறைகளின் கீழ் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறனர்.

பின்வரும்  சொத்துக்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுமதிக்கப்படுகிறனர்.

1. விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் மற்றும் விவசாயம் சார்ந்த சொத்துக்களைத் தவிர, மற்ற எந்த ஒரு அசையா சொத்தையும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வாங்கலாம். 

2. இந்தியாவில் வாழ்ந்து வரும் இந்திய குடிமகனிடமிருந்தோ அல்லது வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்திய குடிமகனிடமிருந்தோ அல்லது வெளிநாட்டில்  வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்தோ, ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் இந்தியாவில் உள்ள அசையாச் சொத்துக்களை அன்பளிப்பாக பெறலாம். 

3. வெளிநாட்டு வாழ்  இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்களது பரம்பரைச்  சொத்துக்களைப் பெற அனுமதி உண்டு.

 4. வெளிநாட்டு வாழ் இந்தியர் தங்களது அசையா சொத்துக்களை, இந்தியாவில் வசிப்பவர்களுக்கு விற்பனை செய்ய அனுமதி உண்டு. 

5. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் இருக்கும் தங்களது விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் மற்றும் விவசாயம் சார்ந்த நிலங்கள்  போன்றவற்றை, இந்தியாவில் வாழ்பவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க அனுமதி உண்டு.

 6. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் இருக்கும் தங்களது வீடுகள் அல்லது  வியாபார சொத்து போன்றவற்றை இந்தியாவில் வாழ்பவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளில் வாழும் இந்திய குடிமக்களுக்கோ அல்லது வெளிநாடுகளில்  வாழந்து வரும் இந்திய வம்சாவளியினருக்கோ அன்பளிப்பாக வழங்க அனுமதி உண்டு.

நிதி ஆதாரம் 

இந்தியாவில்  சொத்துக்களை வாங்க, இந்திய நிதி நிறுவனங்கள் தங்களுக்கு மிக எளிதாக கடன் தருவதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் இந்திய நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களை தங்களின் முக்கியமான வாடிக்கையாளர்களாக கருதுகின்றன.

 வெளிநாட்டு  வாழ் இந்தியர்களுக்கு, இந்திய நிதி நிறுவனங்கள் மிக எளிதாக, விரைவாக வீட்டுக் கடனை வழங்குகின்றன. 

ஏனெனில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வீட்டுக் கடனை சரியான நேரத்தில் செலுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் வங்கிகள் மூலம் சரியான வழியில் கடனைத் திருப்பிச் செலுத்தி விடுகின்றனர். 

ஒரு வெளிநாட்டு வாழ்  இந்தியர் ஏற்கனவே வாடகை மூலமாகவோ, அல்லது டிவிடன்ட் மூலமாகவோ வருமானம் பெற்று வந்தால், அவர் நேரடியாகவே வங்கிக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.

தற்போது  இந்தியாவில் சொத்துக்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வீட்டுக் கடன் பெறுவதற்கு ஏதுவாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது.

 அதாவது  ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் இந்தியாவில் வீடு வாங்க, வீட்டுக் கடனுக்காக விண்ணப்பித்திருந்தால், நிதி நிறுவனங்கள் 80 சதவீத கடன் தொகையை மட்டுமே வழங்க வேண்டும். மீதித் தொகையை வெளிநாட்டு வாழ் இந்தியரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

 கடன் தொகையைத்  திருப்பிச் செலுத்த, ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் தான் வசிக்கும் இடத்திலிருந்தே  வங்கிகளின் மூலமாக அதாவது என்ஆர்ஒ அல்லது என்ஆர்இ வங்கிக் கணக்குகள் மூலமாக செலுத்தலாம். 

மேற்சொன்ன வங்கிக் கணக்குகள் மூலம் மட்டுமே வெளிநாட்டு வாழ் இந்தியர் தனது கடன் தொகையையும் அதற்கான வட்டித் தொகையையும் செலுத்த வேண்டும்.

வட்டி விகிதம் 

வெளிநாட்டு வாழ்  இந்தியர்கள் இந்தியாவில் வாங்கும் சொத்துக்களை பதிவு செய்யும் போது அதற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் வரிகளைச் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் இந்தியர்களாக இருப்பதால், அதற்கான சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

 எனினும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் சொத்துக்களை குத்தகைக்கு விட்டால் அதற்கான வரிவிதிப்பு முறைகள் சற்று சிக்கலாகவே உள்ளன. அதாவது குத்தகைப் பணம்  சொத்திலிருந்து வரும் வருமானமாக இருப்பதால், அதற்கான வரியை அவர்கள் செலுத்த வேண்டும். 

மேலும் அவ்வாறு அவர்கள் தங்களது சொத்துகள் மூலம் வருமானம் பெறும் போது, அவர்கள் வாழ்கின்ற நாடுகள் இந்தியாவோடு டபுள் டாக்ஸ் அவாய்டன்ஸ் ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால், அவர்கள் வசிக்கும் நாடுகளிலும் வரி செலுத்த வேண்டும்.

ஆனால் வீட்டுக் கடனுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் செலுத்தும் வட்டித் தொகைக்கு அவர்கள் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர். அதுபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள சொத்துக்களை விற்கும் போது, வருமானவரி சட்டத்தின் கீழ் அவர்கள் கேப்பிட்டல் கெயின் வரியைச் செலுத்த வேண்டும்.