வேகமாக மீண்டும் வரும் ரியல் எஸ்டேட்.. மக்கள் மகிழ்ச்சி..!
மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் 8 முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் சார்ந்த வர்த்தகம் 95 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டு இத்துறை சார்ந்த ஊழியர்களும், வர்த்தகர்களும் அதிர்ச்சி அடைந்தன.
சூடுபிடிக்கும் விற்பனை
ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து நிதி நெருக்கடி இருந்தாலும், நாடு முழுவதும் விழாக் காலம் முன்னிட்டு பல புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதோடு நீண்ட நாட்களாக விற்கப்படாமல் இருக்கும் வீடுகளுக்கும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளும் பல்வேறு சலுகைகள் விலை தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டு வருவதால் விற்பனை தற்போது சூடுபிடித்து வருகிறது.
டிமாண்ட்
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு டிமாண்டு மிகவும் அதிகமாகியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் சிறிய வீடுகளில் இருக்கும் குடும்பங்களுக்குப் பெரிய வீடுகளுக்கு மாறவும், வாங்கவும் விரும்புகின்றனர்.