வருமான வரி விதிப்பில் தளர்வு.. நிதியமைச்சகத்தின் புதிய அறிவிப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..!

வருமான வரி விதிப்பில் தளர்வு.. நிதியமைச்சகத்தின் புதிய அறிவிப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..!

கொரோனா  தொற்றுக் காரணமாகப் பல கோடி  மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவும் வகையில் நிறுவனங்கள் முதல் தனிநபர் வரையில் பல்வேறு வகையில் உதவி செய்தனர்.

இந்நிலையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவும் வகையில் பலருக்கு திடீர் பணவரவு வந்துள்ளது. இதனால் வருமான வரிக் கணக்கில் புதிய பிரச்சினை உருவான நிலையில் மத்திய நிதியமைச்சகம் வருமான வரிக் கணக்கீட்டில் கொரோனா நிதியுதவிக்காகச் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இப்புதிய சலுகை மக்களுக்குப் பெரும் நிதிச் சுமையைக் குறைக்க உள்ளது.

சரி  மத்திய நிதியமைச்சகம் அப்படி என்ன சலுகையை அளித்துள்ளது, வாங்க பார்ப்போம்.

கொரோனா சிகிச்சைக்கு நிதியுதவி

2019-20  நிதியாண்டு மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கொரோனா சிகிச்சைக்காக நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கும், ஒரு நபர் மற்றொரு நபருக்கு நிதியுதவி செய்திருந்தால் இந்தத் தொகையைப் பெறும் நபர் மற்றும் ஊழியரிடம் இருந்து வருமான வரி வசூலிக்கப்படாது.

Ex-Gratia தொகைக்கு வரி ரத்து

இதேபோல்  கொரோனா மூலம் யாரேனும் இறந்திருந்து, நிறுவனமோ அல்லது தனிநபரோ இறந்தவரின் குடும்பத்திற்கு உதவும் வகையில் Ex-Gratia நிதியுதவி செய்திருந்தால் அதற்கும் வருமான வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் ExGratia தொகை அளவீட்டை 10 லட்சம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளது.

வீட்டு மனை முதலீடு 

வீட்டு மனை  முதலீட்டில் கிடைக்கும் வரிச் சலுகையை 3 மாதம் நீட்டித்துள்ளது மத்திய நிதியமைச்சகம். இதன் மூலம் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலத்திற்கு வீட்டு மனையில் செய்த முதலீட்டுக்குப் பிரிவு 54 மற்றும் பிரிவு 54GB கீழ் வரிச் சலுகையைப் பெற முடியும்.

வட்டியில்லா பேமெண்ட் 

இதேபோல்  வருமான வரி தாக்கல் இருக்கும் பிரச்சனைகளைக் களைய vivad se vishwas திட்டத்தின் கீழ் வட்டி இல்லாமல் பணம் செலுத்த 2 மாத காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 31 வரையில் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.