தங்கத்தையே ஓரங்கட்டும் ரியல் எஸ்டேட்.. காரணம் என்ன..?
தற்போதைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், தங்கம், ரியல் எஸ்டேட் என்பது மக்களின் எவர் க்ரீன் திட்டங்களாகும். ஏனெனில் இதனை தலைமுறையாக தொடர முடியும். இது இந்திய குடும்பங்களில் மிக விருப்பமான முதலீடுகளிலும் ஒன்றாக உள்ளது
தங்கம் Vs ரியல் எஸ்டேட்
குறிப்பாக தங்கம் மிகவும் பிடித்தமான முதலீடாகவும் உள்ளது. இது தேவையான அளவில், கையில் பணம் இருக்கும் அளவுக்கு முதலீடு செய்து கொள்ள முடியும். அதோடு விரைவில் பணமாகவும் மாற்றிக் கொள்ளும் ஒரு லிக்விட் முதலீடாகும்.
இதுவே ரியல் எஸ்டேட் நீண்டகால முதலீடுகளில் விருப்பமான ஒன்றாக உள்ளது. எனினும் அதனை சரியாக தேர்வு செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது. அப்படி சரியாக தேர்வு செய்யும் பட்சத்தில் எதிர்காலத்தில் நல்ல லாபத்தினை கொடுக்கலாம்.
ரியல் எஸ்டேட் சாதகங்கள்
ரியல் எஸ்டேட் என்பது மிகவும் நிலையான முதலீட்டு விருப்பமாகும். இது ரிஸ்க் குறைவான முதலீட்டு திட்டமாகவும் உள்ளது. இதே தங்கம் என்பது ஒரு விலையுயர்ந்த உலோகமாகும். இதில் அதிக ஏற்ற இறக்கம் உண்டு. பாதுகாப்பு பிரச்சனை உண்டு. இது பங்கு சந்தையிலும் வர்த்தகமாகிறது. ஆனால் நிலத்தில் முதலீடு செய்வது அப்படி அல்ல, இதில் வரிச் சலுகை கிடைக்கிறது. வருமானமும் கிடைக்கிறது. இது குடியிருப்பு, வணிக பயன் என வாடகை வடிவத்தில் வருமானம் கிடைக்கும். ஆனால் தங்கத்தில் அப்படி கிடைக்காது.
உணர்வு பூர்வமான முதலீடுகள்
எனினும் ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு பெரியளவிலான முதலீடுகள் தேவை. இதன் மூலம் பல வகையான துறைகள் பலன் அடைகின்றன. இது துறைசாரா அல்லது மறைமுகமாக பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பினையும் கொடுக்கிறது. இது பொருளாதார வளர்ச்சியிலும் பங்களிக்கிறது. ஆக ரியல் எஸ்டேட் முதலீடு என்பது பாதுகாப்பானது மட்டும் அல்ல, இது சரியாக தேர்வு செய்யும் பட்சத்தில் நிரந்தர வருமானம் தரக்கூடிய திட்டமும் கூட.