வீடு, நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை முக்கியமானவை இது தான்..!

வீடு, நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை முக்கியமானவை இது தான்..!

சொந்தமாக  இடம் வாங்கி அங்கு வீடு கட்ட வேண்டும் என பலருக்கு ஆசை இருக்கும். ஏற்கனவே சொந்த வீடு உள்ளவர்களுக்கு இன்னும் கூடுதலாக நிலம் அல்லது சொத்துக்களை வாங்க வேண்டும் என ஆசையாக இருக்கும்.

ஆனால்  நம்மிடம் பணம் இருக்கோ? இல்லையோ? சொந்தமாக இடம் வாங்கும் போது நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். கொஞ்சம் ஏமாந்து நிலத்தை வாங்கிவிட்டு, நீதிமன்றம் சென்று அலைய முடியுமா? எனவே ஒரு சொத்தை வாங்கும் முன்பு நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை என்பதை இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

சொத்தின் முன்னாள் உரிமையாளர்கள்

ஒருவர்  நிலத்தை வாங்கும் முன்பு கடந்த 30 வருடங்களாக அந்த நிலத்தை யார் எல்லாம் வைத்து இருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விவரங்கள் நிலத்தின் மூலப் பத்திரத்தில் இருக்கும். அதை வாங்கி முதலில் சரிபார்க்க வேண்டும்.


வில்லங்கச் சான்றிதழ்

வில்லங்கச் சான்றிதழ்  பெற்று பெற்று அந்த இடத்தில் வேறு ஏதாவது சிக்கல்கள் உள்ளதா என பார்க்க வேண்டும். நிலத்தின் மீது வழக்கு அல்லது கடன் ஏதாவது உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.


பத்திரம்

மூலப் பத்திரத்தை  தொடர்ந்து சொத்தை விற்பவரின் பெயரில் அந்த நிலத்தின் தற்போதைய உரிமைக்கான பட்டா உள்ளதா என சரிபார்க்க வெண்டும்.


நில அளவு

பத்திரத்தில் குறிப்பிடப்பட்டது போல நிலத்தின் அளவு பட்டா, சிட்டா போன்றவற்றில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். கடைசியாக யாரெல்லாம் இந்த இடத்தின் உரிமையாளர்களாக இருந்துள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும்.


வரைப்படம்

வாங்க உள்ள  இடத்தின் வரைப்படத்தை சரிபார்க்க வேண்டும். அதில் வாங்கும் இடத்திற்கு சென்று வர வழி எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்ள வெண்டும். நடிகர் சூரி இப்படி சரியான வரைப்படத்தை பார்க்காமல், வழி இல்லாத இடத்தை வாங்கியது தான் இப்போது வழக்கு தொடர்ந்ததற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


விவசாய நிலம்?

 வீடு கட்ட வாங்கும் இடத்தின் மீது மின் கம்பிகள் சென்றால், அங்கு வீடு கட்ட முடியாது. எனவே அதையும் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் அதை மாற்ற மின்சார வாரியத்தை அணுகி கோரிக்க வைக்க வேண்டும். அதற்கு கூடுதல் செலவு மட்டுமல்லாமல் தேவையில்லாத அலைச்சலாகவும் இருக்கும்.

வீடு கட்ட வாங்கும் இடத்தின் மீது மின் கம்பிகள் சென்றால், அங்கு வீடு கட்ட முடியாது. எனவே அதையும் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் அதை மாற்ற மின்சார வாரியத்தை அணுகி கோரிக்க வைக்க வேண்டும். அதற்கு கூடுதல் செலவு மட்டுமல்லாமல் தேவையில்லாத அலைச்சலாகவும் இருக்கும்.


ஆவணங்களை சரிபார்த்தல்

நிலத்தின்  ஆவணங்களை சரிபார்க்க இடத்தின் ஆவண நகல்களை உரிமையாளரிடம் இருந்து வாங்கி, குறிப்பிட்ட அந்த இடம் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் வருகிறது என்பதை பார்த்து அங்கு உள்ள சமீபத்திய அசல் ஆவணத்துடன் ஒத்துப்போகிறதா என பார்க்க வேண்டும்


நில வரி & மதிப்பு

நிலத்தின் உரிமையாளரின் பெயரில் நில வரி செலுத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். மேலும் நிலத்தின் தற்போதைய மதிப்பு எவ்வளவு என சரிபார்க்க வேண்டும்.