யோகி ஆதித்யநாத் அரசின் செம அறிவிப்பு.. உண்மையிலேயே பல லட்சம் பேருக்கு நன்மை..!

யோகி ஆதித்யநாத் அரசின் செம அறிவிப்பு.. உண்மையிலேயே பல லட்சம் பேருக்கு நன்மை..!

யோகி ஆதித்யநாத்-தின் பல அறிவிப்புகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குப் பெயர் போனதாக இருந்தாலும்,

தற்போது  அவர் அறிவித்துள்ளது அறிவிப்பு அம்மாநில மக்களுக்குப் பெரிய அளவில் நன்மை அளிப்பது மட்டும் அல்லாமல் பலருக்கும் பல ஆயிரம் ரூபாய் சேமிக்கும் ஒரு வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது.

அப்படி  என்ன அறிவிப்பு என்று தானே கேட்குறீங்க.. வாங்க சொல்றேன்.

யோகி ஆதித்யநாத் 

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநில அரசு லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுக்குள் சொத்து பரிமாற்றத்திற்கான பத்திர வரியை தள்ளுபடி செய்வதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

பத்திர வரி 

அதாவது குடும்ப உறுப்பினர்களிடையே  சொத்துப் பரிமாற்றம் செய்யும் போது கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், மருமகள், மருமகன் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு ஆகியோர் மத்தியிலான சொத்துப் பரிமாற்றம் செய்யும் போது செலுத்தப்படும் பத்திர வரியை முழுமையாகத் தள்ளுபடி அளிக்க முடிவு செய்துள்ளது யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு.

கட்டணம் 

இதற்கு முன்பு  இத்தகைய சொத்துப் பரிமாற்றத்திற்கு 7 சதவீத பத்திர வரி வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள தள்ளுபடி மூலம் குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலான சொத்துப் பரிமாற்றத்திற்கு 5000 ரூபாய் பதிவு அல்லது பரிமாற்ற கட்டணம் மற்றும் 1000 ரூபாய் பிராசசிங் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்

17.11 லட்சம் கோடி ரூபாய்

2022ஆம்  நிதியாண்டில் இந்திய மாநிலங்கள் பத்திர பதிவு மற்றும் பதிவு கட்டணம் வாயிலாகச் சுமார் 17.11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை வசூலித்துள்ளது. இந்தக் கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் அதிகமாகும்.

மகாராஷ்டிரா 

மகாராஷ்டிரா ரூ.3.55 லட்சம் கோடி உடன் முதல் இடத்திலும் யோகி ஆதித்யநாத்-தின் உத்தரபிரதேசத மாநிலம் 2 லட்சம் கோடி, தமிழ்நாடு 1.43 லட்சம் கோடி ரூபாய் வசூலித்துள்ளது.