Posts

Showing posts from June, 2023

ரியல் எஸ்டேட் துறை எப்போது கரையேறும்?

ரியல் எஸ்டேட் துறை எப்போது கரையேறும்? அதிகம்  பணம் புழங்கும் துறை என்று பேசப்பட்ட  இந்திய  ரியல் எஸ்டேட்   துறை கடந்த சில ஆண்டுகளாகவே பெருத்த அடி வாங்கி மீளாத் துயரில் சிக்கியுள்ளது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு இத்துறையின் வருவாய் குறைந்து நிதி நெருக்கடி அதிகமானது.  பின்னர்  2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி, அதைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் சட்டம் கடுமையாக்கப்பட்டது என, ரியல் எஸ்டேட் துறை பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானது. இதுபோன்ற சூழலில் இந்த ஆண்டில்  கொரோனா  பாதிப்பால் மேலும் சிக்கல் ஏற்பட்டது. நிதி நெருக்கடி காரணமாக மக்கள் தங்களது ரியல் எஸ்டேட் முதலீடுகளையும், வீடு வாங்கும் எண்ணத்தையும் கைவிட்டனர். இந்திய  ரியல் எஸ்டேட் துறை கொரோனா பாதிப்பிலிருந்து எப்போது மீளும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், இன்னும் சில மாதங்களில் கொரோனாவுக்கு முன்னர் இருந்த சூழல் திரும்பி விடும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கில்  நான்காம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திர...

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் 'டிஜிட்டல்’  வழிகளை  நாடுவது, நகரை விட்டு தொலைவில் இருந்தாலும் பெரிய வீட்டை நாடுவது என ரியல் எஸ்டேட் துறையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா சூழல் இணைய வழி கல்வி, வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஆகிய மாற்றங்களை கொண்டு வந்திருப்பதோடு, ஒவ்வொரு துறையிலும் தனியே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் துறையிலும், கொரோனா சூழல் காரணமாக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன .ரியல் எஸ்டேட்  நிறுவனங்கள் சவாலான நிலையை சமாளிக்க புதுமையான வழிகளை பின்பற்றி வரும் நிலையில், வீடு வாங்கும் விருப்பம் கொண்டவர்கள் புதிய வீடுகளை தேடி கண்டறியும் முறையும் மாற்றத்திற்கு உள்ளாகியிருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும், அதற்கான காரணங்களையும், எதிர்கால போக்குகளையும் பார்க்கலாம். டிஜிட்டல் வழி கொரோனா  தாக்கத்தால் பொதுமுடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், வீடு வாங்க விரும்புகிறவர்கள், விற்பனையாளர்கள், இடைத்தரகர்கள் என பல்வேறு தரப்பினரும் டிஜிட்டல் வழியை நாடத...

சென்னைக்கு மிக அருகில்’ - நீரில் மூழ்கிய ரியல் எஸ்டேட் நிலங்கள்

சென்னைக்கு மிக அருகில்’ - நீரில் மூழ்கிய ரியல் எஸ்டேட் நிலங்கள் 'சென்னைக்கு மிக அருகில்’ என்ற முழக்கத்துடன் விற்பனை செய்யப்பட்ட வீட்டு மனைப்பிரிவு ஒன்று, நீர் தேங்கி ஏரி போல காட்சியளிக்கிறது. செங்கல்பட்டில்  இருந்து பொன்விளைந்த களத்தூர் செல்லும் வழியில் ஒழத்தூர் என்ற ஏரியை ஒட்டிய பகுதி மனைப்பிரிவுகளாக விற்பனைக்கு வந்தன. அந்த இடம் தற்போது குளம் போல காட்சியளிக்கிறது.  காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் முக்கிய வருவாய் மாவட்டமாக மாறியுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின்  பல்வேறு இடங்களில் விவசாயம் கைவிடப்பட்ட நிலங்கள் வீட்டு மனைகளாக உருமாறி வருவதன் அடையாளமாக இந்த இடம் காட்சியளிக்கிறது. இதுபோன்று நீர்த் தேங்கும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு மனைப்பிரிவுகளாக மாற்றப்படுவதே மழை வெள்ளகாலத்தில் அதிக பாதிப்புகள் உருவாவதற்கு காரணம் என கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள். சென்னைக்கு  அருகில் என்று நம்பி மனை வாங்குவோர்,  மனையை பார்த்து வாங்க வேண்டும் என்றும், ஏமாறும் நிலைக்குச் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கிறார்கள் அப்பகுதிவாசிகள...

இந்திய ரியல் எஸ்டேட்டில் என்ஆர்ஐகள் முதலீடு செய்வது எப்படி?

இந்திய ரியல் எஸ்டேட்டில் என்ஆர்ஐகள் முதலீடு செய்வது எப்படி? இந்திய ரிசர்வ் வங்கி  மற்றும் எஃப்இஎம்எ (FEMA) ஆகியவை வகுத்திருக்கும் விதிமுறைகளின் கீழ் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறனர். பின்வரும்  சொத்துக்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுமதிக்கப்படுகிறனர். 1. விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் மற்றும் விவசாயம் சார்ந்த சொத்துக்களைத் தவிர, மற்ற எந்த ஒரு அசையா சொத்தையும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வாங்கலாம்.  2. இந்தியாவில் வாழ்ந்து வரும் இந்திய குடிமகனிடமிருந்தோ அல்லது வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்திய குடிமகனிடமிருந்தோ அல்லது வெளிநாட்டில்  வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்தோ, ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் இந்தியாவில் உள்ள அசையாச் சொத்துக்களை அன்பளிப்பாக பெறலாம்.  3. வெளிநாட்டு வாழ்  இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்களது பரம்பரைச்  சொத்துக்களைப் பெற அனுமதி உண்டு.  4. வெளிநாட்டு வாழ் இந்தியர் தங்களது அசையா சொத்துக்களை, இந்தியாவில் வசிப்பவர்களுக்...

யோகி ஆதித்யநாத் அரசின் செம அறிவிப்பு.. உண்மையிலேயே பல லட்சம் பேருக்கு நன்மை..!

யோகி ஆதித்யநாத் அரசின் செம அறிவிப்பு.. உண்மையிலேயே பல லட்சம் பேருக்கு நன்மை..! யோகி ஆதித்யநாத்-தின் பல அறிவிப்புகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குப் பெயர் போனதாக இருந்தாலும், தற்போது  அவர் அறிவித்துள்ளது அறிவிப்பு அம்மாநில மக்களுக்குப் பெரிய அளவில் நன்மை அளிப்பது மட்டும் அல்லாமல் பலருக்கும் பல ஆயிரம் ரூபாய் சேமிக்கும் ஒரு வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. அப்படி  என்ன அறிவிப்பு என்று தானே கேட்குறீங்க.. வாங்க சொல்றேன். யோகி ஆதித்யநாத்   யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநில அரசு லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுக்குள் சொத்து பரிமாற்றத்திற்கான பத்திர வரியை தள்ளுபடி செய்வதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. பத்திர வரி   அதாவது குடும்ப உறுப்பினர்களிடையே  சொத்துப் பரிமாற்றம் செய்யும் போது கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், மருமகள், மருமகன் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு ஆகியோர் மத்தியிலான சொத்துப் பரிமாற்றம் செய்யும் போது செலுத்தப்படும் பத்திர வரியை முழும...

முதலீட்டில் 50% லாபம் பெற ரியல் எஸ்டேட் தான் பெஸ்ட் சாய்ஸ்

முதலீட்டில் 50% லாபம் பெற ரியல் எஸ்டேட் தான் பெஸ்ட் சாய்ஸ் சென்னை: கடந்த  பத்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண குப்பை நிலம் கூட இப்போது பிளாட் போட்டு விற்கின்றனர். மண் மீதான ஆசை யாரையும் விட்டு வைக்கவில்லை. நிலத்தின் மீதான முதலீடு நம் எதிர்காலத்தை பெரிய அளவில் மாற்றிட உதவும்.  ஆனால்  இன்றளவும் ரியல் எஸ்டேட் மீதான அச்சம் அதிகளவில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த வளர்ச்சி சாமானிய மக்களுக்கு சொந்த வீடு என்னும் கனவை எட்டும் உயரத்தில் கொண்டு வந்துள்ளது. இது உண்மையில் மகிழ்ச்சிக்குரிய விஷயம். வீட்டு மனை  முதலீட்டாளர்களை கவரும் வகையிலும் சாதாரண மக்களின் விட்டு மனை கனவை நினவாக்கும் வகையில் மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்தது. வங்கி கடன்கள்   முதல் முறையாக  ரியல் எஸ்டேட் அல்லது விட்டு மனையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 1.5 இலட்சம் முதல் 2.5 இலட்சம் வரை எளிமையான முறையில் வங்கிகள் கடன் வழங்க உத்தரவு பிறப்பித்தது. இது ஒவ்வொருவரின் வீடு வாங்கும் கனவை நனவாக்க மிகப்பெரிய உதவியாக இருக்கும்.  வர்த்தகம் உயர்வு...

வீட்டுக்கடன் வட்டி உயர்வால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பாதிப்பா?

வீட்டுக்கடன் வட்டி உயர்வால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பாதிப்பா? சமீபத்தில்  ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து  கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்  வீட்டுக்கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் ரியல் எஸ்டேட் துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?  என்பது குறித்து தற்போது பார்ப்போம். வங்கிகளின்  வீட்டுக்கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய பாதிப்பில்லை என்று ரியல் எஸ்டேட் துறையில் உள்ள நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீட்டுக்கடன் வட்டி வங்கிகள்  வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை  அதிகரித்ததால் ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த விளைவையே ஏற்படுத்தி உள்ளது என்றும் புதிய குடியிருப்பு திட்டங்களுக்கான முன்பதிவுகள் அதிகரித்து வருகின்றன என்றும் நாங்கள் எதிர்பார்த்தபடியே இன்னும் சில நாட்களில் அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடும் என்றும் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் வ...

புதிய வீடு வாங்குவோருக்கு ஷாக்.. சென்னை, பெங்களூரில் மக்கள் கவலை..!

புதிய வீடு வாங்குவோருக்கு ஷாக்.. சென்னை, பெங்களூரில் மக்கள் கவலை..! கொரோனா  தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் மிகவும் முக்கியமான துறை ரியல் எஸ்டேட், கட்டுமான பணிகள் முதல் விற்பனை வரையில் அனைத்தும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனாலேயே மத்திய அரசு ரியல் எஸ்டேட் துறைக்கு அதிகப்படியான சலுகையை அறிவித்தது. மேலும்  பல மாநிலங்கள் பத்திர பதிவு கட்டணத்தில் அதிகப்படியான சலுகையை அறிவித்தது.  இதோடு ரியல் எஸ்டேட் கட்டுமான திட்டங்களுக்கு அதிகப்படியான கடன் அளிக்கப்பட்ட காரணத்தால் வேலைவாய்ப்பு முதல் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சிப் பாதைக்குச் சென்றது. ஆனால் இதே வேளையில் புதிய வீடுகளுக்கான டிமாண்ட் மக்கள் மத்தியில் அதிகரித்த காரணத்தால் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இந்திய ரியல் எஸ்டேட் பத்திர கட்டணங்கள் பெரிய அளவில் குறைந்த  காரணத்தாலும், மக்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தாலும் புதிய வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதே வேளையில் சிமென்ட் மற்றும் ஸ்டீல் போன்ற கட்டுமான மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்தியாவின் 8 முக்கியப் ...

கோவிட் காலத்தில் 113% அதிகரித்த வீடு விற்பனை; சென்னையில் நிலை என்ன?

கோவிட் காலத்தில் 113% அதிகரித்த வீடு விற்பனை; சென்னையில் நிலை என்ன? இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை முக்கியமான ஏழு நகரங்களில் 2021-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 113% அதிகரித்திருப்பதாக அனராக் (ANAROCK) ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் 2020-ன் மூன்றாம் காலாண்டில் சுமார் 29,520 வீடுகள் விற்பனையான நிலையில் 2021-ன் மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட 62,800 வீடுகள் விற்பனையாகி இருக்கின்றன. இது 156% அதிகரிப்பாகும். 2020-ன் மூன்றாம் காலாண்டில் 32,530   புதிய வீடுகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் 2021-ன் மூன்றாம் காலாண்டில் 64,560 வீடுகளுக்கான கட்டுமானத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது 78 சதவிகித அதிகரிப்பாகும்.   இதில், மும்பை மெட்ரோ பாலிடன் பகுதியில் அதிகபட்சமாக 16,510 புதிய அடுக்குமாடி வீடுகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புதிய வீடுகளில் ரூ. 40 லட்சம் முதல் 80 லட்சம் வரையிலான நடுத்தர விலை வீடுகளின் பங்களிப்பு 41 சதவிகிதமாக இருக்கிறது. ரூ. 40 லட்சத்துக்குள் விலை உள்ள வாங்கக்கூடிய விலையிலான அஃபோர்டபிள் வீடுகளுக்களுக்கான பங்களிப...

வேகம் எடுக்கும் வீடு விற்பனை..!

வேகம் எடுக்கும் வீடு விற்பனை..! இந்தியாவில்  அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனை முக்கியமான ஏழு நகரங்களில் 2021-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 113% அதிகரித்திருப்பதாக  அனராக் (ANAROCK) ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது...  இந்தியாவில்  2020 மூன்றாம் காலாண்டில் சுமார் 29,520 வீடுகள் விற்பனையான நிலையில் 2021 மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட 62,800 வீடுகள் விற்பனையாகி இருக்கின்றன. இது 156% அதிகரிப்பாகும். 2020 மூன்றாம்  காலாண்டில் 32,530 புதிய வீடுகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், 2021 மூன்றாம் காலாண்டில் 64,560 வீடுகளுக்கான கட்டுமானத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது 78 சதவிகித அதிகரிப்பாகும்.  இதில்,  மும்பை மெட்ரோ பாலிடன் பகுதியில் அதிகபட்சமாக 16,510 புதிய அடுக்குமாடி வீடுகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புதிய வீடுகளில் ரூ.40 லட்சம் முதல் 80 லட்சம் வரையிலான நடுத்தர விலை வீடுகளின் பங்களிப்பு 41 சதவிகிதமாக இருக்கிறது. ரூ.40 லட்சத்துக்குள் விலை உள்ள வாங்கக்கூடிய விலையிலான அபோர்டபிள் வீடுகளுக்கான பங்களிப்பு 2021 மூன்றாம் காலாண்டில் ...

வீடு கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்..!

Image
வீடு கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்..! சொந்த வீடு  என்பது ஒவ்வொரு சாமானியனுக்கும் கனவாக இருக்கிறது. நீங்களே பொருள்களை வாங்கித் தந்து வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டை வாங்குவதாக இருந்தாலும் சரி, அதில் அரசின் விதிமுறைகள் அனைத்தும் சரியாகப் பின்பற்றப்பட்டு கட்டப்பட்டுள்ளதா என்பதை அனுபவம் வாய்ந்த பொறியாளர் ஒருவரை நியமித்து வாங்கினால்தான், எதிர்காலத்தில் பிரச்சினை வராமல் பாதுகாப்பாக இருக்கும். அல்லது கட்டடப் பொறியாளர் கட்டிய வீட்டில் அரசின் விதிமுறைகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவதே சிறந்தது. ஏனென்றால்,  தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட TNCBR 2019 (Tamil Nadu Combined Building Rules 2019) கட்டடம் கட்ட கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டடமும் கட்டி முடிக்கப்பட வேண்டும். அவ்வாறு கட்டப்படும் கட்டடங்களுக்கு மட்டுமே பொறியாளரால் கட்டட நிறைவுச் சான்றிதழ் (complete certificate) வழங்க முடியும். மேலும், கட்டடத்துக்கு மின்சார இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, சொத்து வ...

புதிதாக வீடு கட்டும்போது எந்த வகை டைல்ஸைப் பயன்படுத்தலாம்?

புதிதாக வீடு கட்டும்போது எந்த வகை டைல்ஸை பயன்படுத்தலாம்? புதிதாக வீடு  கட்டுபவர்களில் பலர் இப்போது டைல்ஸைப் பயன்படுத்தாமல் வீடு கட்டி முடிப்பதில்லை.  புதிதாக வீடு கட்டுபவர்கள் என்ன மாதிரியான டைல்ஸ்களை வாங்க வேண்டும், அப்படி வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பொதுவாக, டைல்ஸில்  பல வகைகள் உண்டு. அவற்றில் நானோ (Nano), பி.ஜி.வி.டி (PGVT), டபுள் சார்ஜ் (Double charge), பார்க்கிங் (Parking), நார்மல் வாள் டைல்ஸ் (Normal wall tiles), வால் டைல்ஸ் வாட்டர்ப்ரூஃப் (Wall tiltes waterproof), ரூப் டைல்ஸ் – கூலிங் டைல்ஸ் (Roof titles), மேட் ஃபினிஷிங் டைல்ஸ் (Matt finishing tiles), எலிவேஷன் டைல்ஸ் (Eelevation tiles), டெக்கரேஷன் டைல்ஸ் (Decorration tiles) என்பவை அதிகமாகப் பயன்படுத்தப்படும் டைல்ஸ்கள் ஆகும். இனி இந்த டைல்ஸ் வகைகள் பற்றி சற்று விளக்கமாகப் பார்ப்போம். நானோ (Nano) இந்த டைல்ஸ்  ஒரு அடிப்படை மாடல் ஆகும். தவிர, இது ஒரு லோ பட்ஜெட் டைல்ஸும்கூட.  இதில் அதிகமான கலர்களும் டிசைன்களும் கிடையாது. பொதுவாக, இது ஐவரி (Ivory) பேஸ்ட் கலர்களில்தான் இருக்கும். இந்த டைல...

சிக்கல் இல்லாமல் சொந்த வீடு வாங்க இந்த 8 விஷயங்கள் கட்டாயம்..!

சிக்கல் இல்லாமல் சொந்த வீடு வாங்க இந்த 8 விஷயங்கள் கட்டாயம்..! பெரும்பாலானவர்களின் வாழ்நாள் கனவாகச்  சொந்த வீடு இருக்கிறது. ஒரு சட்டை வாங்குகிறோம்; செல்போன் வாங்குகிறோம்; சரியில்லை எனில், தூரப் போட்டுவிட்டு, வேறு வாங்கிக் கொள்ளலாம். ஆனால், வீட்டைப் பொறுத்தவரை, நாம் அப்படி நினைக்க முடியாது. அது வாழ் நாள் முடிவாக இருக்கிறது.  இன்றைய  சூழ்நிலையில், பெரும்பாலான மக்களால் ஒரு வீடுதான் வாங்க முடியும். அவர்கள் வாங்கும் அந்த வீடு சரியாக அமையவில்லை எனில், அதன் பாதிப்பு வாழ்க்கை முழுக்கத் தொடர்ந்து கொண்டிருக்கும். ரியல் எஸ்டேட்  துறையைப் பாதுகாக்க இன்றைக்கு ‘ரெரா’ என்கிற மிகப்பெரிய அமைப்பு வந்திருக்கிறது. ஆனால், எத்தனை சட்டங்கள் வந்தாலும் வீடு, சொத்து வாங்குபவர்கள், ‘நான் வாங்குகிற மனைக்கு, வீட்டுக்கு நாம்தான் பொறுப்பு’ என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ‘நான் யாரிடம் வேண்டுமானாலும் ஏமாறுவேன். அரசாங்கம் என்னைக் காப்பாற்ற வேண்டும். சி.எம்.டி.ஏ காப்பாற்ற வேண்டும்’ எனக் கோரிக்கை வைப்பதில் நியாயமில்லை. வீடு விஷயத்தில்  சரியாக முடிவெடுக்காமல் அல்லது உணர்ச்சிவசப்பட்டு தவறான வீட்ட...

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிப்பது லாபமா?

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிப்பது லாபமா நஷ்டமா? நம்மில்  பெரும்பாலானோர் சொந்த வீட்டை வீட்டுக் கடன் மூலம்தான் வாங்கியிருப்போம். இப்படி வாங்கிய கடனை முடிந்த அளவுக்கு சீக்கிரமாகத் திரும்பக் கட்டி முடித்துவிட வேண்டும் என்பதில் நம்மவர்கள் குறியாக இருக்கிறார்கள்.  பொதுவாக,  கடன் என்பதைப் பாரமாக நினைப்பவர்கள் நம்மவர்கள். அதிலும் அதிக கடன் தொகை இருக்கும் வீட்டுக் கடனை நம்மவர்கள் பெரும் பாரமாகவே நினைக் கிறார்கள். எனவேதான், கூடுதலாக இ.எம்.ஐ செலுத்துகிறார்கள்; கணிசமான தொகை கையில் கிடைக்கும்போது அதை வீட்டுக் கடனைத் திரும்பக் கட்ட பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான்  எனக்குத் தெரிந்தவர்களில் ஒருவரான சுரேஷ், கையில் கணிசமான தொகை கிடைத்ததும் அதைக் கொண்டு வீட்டுக் கடனில் ஒரு பகுதியை (Part Payment) அடைத்துவிட்டார். இது நடந்தது 2020–ம் ஆண்டில். அதாவது, கொரோனா பாதிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு. இப்போது அவர்,  ஏன்தான் அந்தத் தவற்றைச் செய்தோமோ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். காரணம், கொரோனா பாதிப்பின்போது போடப்பட்ட ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கத்தால் அவர் வேலை பார்த்த...

28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் RERAவை அறிவிக்கின்றன

28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் RERA-வை அறிவிக்கின்றன 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (யூனியன் பிரதேசங்கள்) ரியல் எஸ்டேட் (கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு) தெரிவித்துவிட்டோம் சட்டத்தின்  (RERA) நாட்டில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ராஜீவ் ஜெயின் கூறினார்.  அமைச்சின் கூற்றுப்படி, 20 மாநிலங்கள் மற்றும் யூ.டி.க்கள் ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை சட்டத்தின் கீழ் நிறுவியுள்ளன,  அவற்றில் ஏழு  'வழக்கமான' தீர்ப்பாயங்கள், 13 'இடைக்கால' ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் இருந்தன. "என 22 மாநிலங்கள் சட்டத்தின் கீழ் முழுமையாக செயல்படும் வலை இணையதளங்களைக் கொண்டுள்ளன, "என்று ஜெயின் மேலும் கூறினார். 27 மாநிலங்கள் மற்றும் யூ.டி.க்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அதிகாரத்தை நிறுவியுள்ளன, அவற்றில் 13 'வழக்கமான' ஒழுங்குமுறை அதிகாரிகள் இருந்தனர், 14 பேர் இருந்தனர்.  இடைக்கால  அதிகாரிகள். ஆறு வடகிழக்கு மாநிலங்கள் – அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் – இந்தச் சட...

விவசாய நிலங்களை வாங்குவதன் நன்மை தீமைகள்

விவசாய நிலங்களை வாங்குவதன் நன்மை தீமைகள் டெல்லி, ஜெய்ப்பூர்  போன்ற பெருநகரங்களில்  பெரும்பாலும் வசித்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 55 வயதான மூத்த சந்தைப்படுத்தல் நிபுணர் ஜனேஷ் சர்மா, சமீபத்தில் தனது சொந்த நகரமான பிகானேரில் மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் முதலீடு செய்தார்.  ஷர்மாவைப்  போலவே, நொய்டாவில்  ஒரு ஐ.டி சேவை நிறுவனத்தில் பணிபுரியும் நிப்புன் சோஹன்லால், தனது சொந்த நகரமான போபாலின் புறநகரில் தனது இரண்டாவது சொத்தில் – ஒரு விவசாய நிலத்தில் – முதலீடு செய்தார். விவசாய நிலங்களை வாங்குவதன் நன்மை தீமைகள் சர்மா மற்றும் சோஹன்லால், நகர்ப்புற  முதலீட்டாளர்களின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர், அவர்கள் இப்போது பெரிய நகரங்கள் மற்றும் மாநில தலைநகரங்களின் புறநகர் அல்லது புறப் பகுதிகளில் விவசாய நிலங்களின் வருவாய் திறனைப் பார்க்கிறார்கள். நான் வாங்கிய நிலம்  மலிவானது என்றாலும், நகர்ப்புற நிலத்துடன் ஒப்பிடுகையில்,  மறுவிற்பனை மதிப்பின் அடிப்படையில் ஆரோக்கியமான வருமானத்தை எதிர்பார்க்கிறேன்" என்று சோஹன்லால் கூறுகிறார். நகரங்களில்  நிலத்தின் பற்றாக...

எப்போது, எப்படி நீங்கள் ரேராவின் கீழ் புகார் அளிக்க வேண்டும்?

எப்போது, எப்படி நீங்கள் ரேராவின் கீழ் புகார் அளிக்க வேண்டும்? ரியல் எஸ்டேட்  (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் (RERA) அமல்படுத்தப்பட்ட பின்னர்,  புதிய சட்டம் தங்கள் நலன்களைப் பாதுகாக்கும் என்று வீடு வாங்குபவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.  இருப்பினும், புதிய  RERA விதிகளின்  கீழ், புகார் அல்லது வழக்குத் தாக்கல் செய்ய மக்களுக்குத் தெரியுமா என்பது முக்கிய கேள்வி. RICS இன் கொள்கைத் தலைவரான டிக்பிஜோய்  மிக்   விளக்குகிறார்,  “ரியல் எஸ்டேட்  ஒழுங்குமுறை ஆணையம் அல்லது தீர்ப்பளிக்கும் அதிகாரியிடம் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டத்தின் பிரிவு 31 ன் கீழ் புகார்களை தாக்கல் செய்யலாம். இத்தகைய புகார்கள் விளம்பரதாரர்கள், ஒதுக்கீட்டாளர்கள் மற்றும் / அல்லது ரியல் எஸ்டேட் முகவர்களுக்கு எதிராக இருக்கலாம். பெரும்பாலான மாநில அரசாங்க விதிகள், RERA க்கு தோற்றமளிக்கும் வகையில் , நடைமுறை மற்றும் படிவத்தை வகுத்துள்ளன , இதில் அத்தகைய விண்ணப்பங்கள் செய்யப்படலாம். உதாரணமாக, சண்டிகர் யுடி அல்லது உத்தரபிரதேசத்தைப் பொறுத்தவரை, ...

RERA அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ரேரா சட்டம் என்றால் என்ன? ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016 (RERA) என்பது வீடு வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமாகும். RERA இல் புகார் செய்வது எப்படி? RERA  இன் கீழ் ஒரு புகார்,  அந்தந்த மாநில விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் இருக்க வேண்டும். RERA இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு திட்டம் தொடர்பாக,  குறிப்பிட்ட கால எல்லைக்குள், சட்டத்தின் விதிமுறைகளை மீறுவது அல்லது மீறுவது அல்லது RERA இன் கீழ் வடிவமைக்கப்பட்ட விதிகள் அல்லது விதிமுறைகள் குறித்து புகார் அளிக்க முடியும். RERA பதிவு எண்ணை எவ்வாறு சரிபார்க்கலாம்? வாங்குபவர்கள்  அந்தந்த மாநிலங்களின்  போர்ட்டலில் இருந்து RERA பதிவு எண்ணை சரிபார்க்கலாம். ஒவ்வொரு வலை இணையதளத்திலும் பதிவு செய்யப்பட்ட  திட்டங்களின் பட்டியல் மற்றும் ரெரா பதிவு எண், ஒப்புதல்கள் மற்றும் பிற ஆவணங்கள் உள்ளன. RERA ஒப்புதல் என்றால் என்ன? வழக்கமாக, RERA அங்கீகரிக்கப்பட்டத...

'பயனுள்ள' க்காக அரசு அமைக்கும் குழு RERA ஐ செயல்படுத்துதல்

'பயனுள்ள' க்காக அரசு அமைக்கும் குழு  RERA ஐ செயல்படுத்துதல் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டத்தை (ரேரா) வலுப்படுத்த  பரிந்துரைகளை பரிந்துரைப்பதற்கும், அதை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நீக்குவதற்கும் அரசாங்கம்  ஒரு குழுவை அமைத்துள்ளது,  ஒரு அதிகாரி,  டிசம்பர் 31, 2018 அன்று கூறினார். குழுவை உருவாக்கும் முடிவு, தொழிற்சங்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களின்  கூட்டுச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில், அமைச்சகம் நான்கு பட்டறைகளை ஏற்பாடு செய்த சில மாதங்களுக்குப் பிறகு, வீடு வாங்குபவர்கள் உட்பட பங்குதாரர்கள் இந்தச் சட்டத்தை திறம்பட  செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கியிருந்தனர். இந்திய அரசு    மார்ச் 2016   வது   ரியல் எஸ்டேட் (கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு) சட்டத்தின் 2016 26 இயற்றப்பட்ட   மற்றும் அதன் அனைத்து  விதிகளுக்கும் மே 1 இருந்து, அமலுக்கு வந்து, 2017   உருவாக்குநர்கள் கீழ் தங்களுடைய திட்டங்கள் பதிவு செய்ய ஜூலை 2017 இறுதி வரை கொடுக்கப்பட்டது ரேரா. அதேபோல், ரியல் எஸ்டேட் முகவர்களு...

ஒப்பந்தம் வைத்திருக்கும் தேதியைக் குறிப்பிடவில்லை என்றால், வாங்குபவர் என்ன செய்ய முடியும்?

ஒப்பந்தம் வைத்திருக்கும் தேதியைக் குறிப்பிடவில்லை என்றால், வாங்குபவர் என்ன செய்ய முடியும்? பல வழக்குகள் உள்ளன, டெவலப்பர்கள்  ஒப்பந்தத்தில் வைத்திருக்கும் தேதியைக் குறிப்பிடாத அளவிற்கு கூட சென்று, வீடு வாங்குபவர்களுக்கு மன மற்றும் நிதி அதிர்ச்சிக்கு வழிவகுக்கிறது.  தீவிரமாக எடுத்துக் கொள்ளும்போது  இந்த பிரச்சினையின் குறிப்பு, மகாராஷ்டிரா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (மகாரா), சமீபத்திய தீர்ப்பில், ஸ்கைலைன் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ. 1.06 கோடியைத் திருப்பித் தருமாறு அறிவுறுத்தியது,  மேலும் நடிகர் வரஜேஷ் ஹிர்ஜிக்கு 10.55 சதவீத வட்டியுடன், உடைமைகளை ஒப்படைக்கத் தவறியதற்காகவும் பதிவு செய்யப்பட்ட  ஒப்பந்தத்தில் உடைமை விதிமுறையை காலியாக வைத்திருத்தல். மற்றொரு வழக்கில், தானேவில் ஒரு குடியிருப்பு திட்டத்தில் ஒரு பிளாட் வாங்கிய அபர்ணா சிங்,  ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) பிரிவு 18 இன் கீழ் வட்டி நிவாரணம் கோர முடியவில்லை.  விற்பனை ஒப்பந்தத்தில் வைத்திருக்கும் தேதி இல்லாததால், சட்டம் (RERA) விதிகள். அவரது வழக்கில், ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடப்ப...

அனைத்து மாநிலங்கள், யூ.டி.க்களின் ரேரா அதிகாரத்திற்காக பொதுவான ஆன்லைன் தளத்தை அமைக்க மையம் திட்டமிட்டுள்ளது

அனைத்து மாநிலங்கள், யூ.டி.க்களின் ரேரா அதிகாரத்திற்காக பொதுவான ஆன்லைன் தளத்தை அமைக்க மையம் திட்டமிட்டுள்ளது அனைத்து  மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அதிகாரத்திற்காக ஒரு பொதுவான ஆன்லைன் தளத்தை அமைக்க இந்த மையம் திட்டமிட்டுள்ளது.  ஜூன் 26, 2019:  வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற விவகார செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா, அனைத்து மாநிலங்களின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் பொதுவான  ஆன்லைன் தளத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளது. தொழிற்சங்க பிரதேசங்கள், இது ரியல் எஸ்டேட் சட்டத்தை 'மேலும் வலுவானதாக' மாற்றும்.  ரியல் எஸ்டேட்   (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016 இன் கீழ், அனைத்து மாநிலங்களும் அந்தந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அதிகாரிகளை (RERA) உருவாக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன,  இது வீடு வாங்குபவர்களுக்கு சரியான பாதுகாப்பை வழங்குகிறது. "ஒரு பொதுவான தளத்தை அறிமுகப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்,  அங்கு  அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் (யூடி) ரெரா...

எந்த திட்டங்கள் RERA இன் கீழ் வருகின்றன

எந்த திட்டங்கள் RERA- வின் கீழ் வருகின்றன திட்டமிடப்பட்ட  வளர்ச்சி உள்ளிட்ட வணிக  மற்றும் குடியிருப்பு திட்டங்கள். 500 சதுர மீட்டர் அல்லது 8 அலகுகளுக்கு மேல்  அளவிடும் திட்டங்கள். நிறைவு  சான்றிதழ் இல்லாத திட்டங்கள், சட்டம் தொடங்குவதற்கு  முன். இந்த திட்டம் புதுப்பித்தல் / பழுதுபார்ப்பு / மறு அபிவிருத்தி ஆகியவற்றின் நோக்கத்திற்காக  மட்டுமே உள்ளது, இது மறு ஒதுக்கீடு மற்றும் சந்தைப்படுத்தல், விளம்பரம், விற்பனை அல்லது ரியல் எஸ்டேட்  திட்டத்தில் சதி அல்லது கட்டிடம் ஆகியவற்றின் புதிய ஒதுக்கீடு ஆகியவை RERA இன் கீழ்  வராது. ஒவ்வொரு  கட்டமும் புதிய பதிவு தேவைப்படும் முழுமையான ரியல் எஸ்டேட் திட்டமாக கருதப்பட  வேண்டும்.

மும்பையில் உள்ள விண்ணைத்தொடும் கட்டிடங்கள்..!

மும்பையில் உள்ள விண்ணைத் தொடும் கட்டிடங்கள்..! இந்தியாவில்  மிக உயர்ந்த கட்டிடங்கள் அதிகளவில் உள்ள நகரம் மும்பை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.  இங்குச் சுமார் 3,000 கட்டிடங்கள் விண்ணைத் தொட முயற்சி செய்து வருகின்றன. குடியிருப்புகள்,  வணிக வளாகங்கள்,  சில்லறை வணிகக் காம்ப்ளக்ஸ்கள் என மிக உயர்ந்த கட்டிடங்கள் இந்த மெட்ரோபாலிட்டன் நகரமான மும்பையில் அதிகளவில் காணப்படுகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். இம்ப்ரீயல் II இந்தியாவின் மற்றும் மும்பையின் மிக உயர்ந்த கட்டிடம் தான் இந்த இம்பிரீயல் டவர் II. 256 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கட்டிடம் ஒரு குடியிருப்புக் கட்டிடம் ஆகும். MP மில்ஸ் காம்பவுண்ட் என்ற பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 60 மாடிகள் உள்ளன. இவற்றில் 40வது மாடிக்கு மேல் அபார்ட்மெண்ட் ஆக உள்ளது. ஒவ்வொரு அபார்ட்மெண்டும் 150 முதல் 270 டிகிரி வரை வெளிப்பக்க பார்வை இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் ஹஃபீஸ் என்பவரால் டிசைன் செய்யப்பட்டு ஷாபூர்ஜி பல்லாஜி குருப் நிறுவனத்தால் கட்டப்பட்டது. அஹுஜா டவர்ஸ் அஹுஜா டவர்ஸ்  ...

சென்னை ரியல் எஸ்டேட்: உங்கள் கனவு வீட்டை வாங்க சிறந்த இடம்

சென்னை ரியல் எஸ்டேட்: உங்கள் கனவு வீட்டை வாங்க சிறந்த இடம் சென்னை : தமிழகத்தின் தலைநகரமான  சென்னை இந்தியாவின் ஐந்தாவது பெரிய மற்றும் நான்காவது  மக்கள் தொகை அதிகம் கொண்ட பெருநகரமாகும். சென்னை நகரம் கடந்த 15 வருடங்களில் அனைத்துத் துறைகளிலும் இணையற்ற வளர்ச்சி  அடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு  ஒரு முக்கியப் பங்கு இங்குள்ள வாகன உற்பத்தி (50% வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இங்கு நிறுவியுள்ளன) தகவல் தொழில் நுட்பம், பெட்ரோகெமிக்கல் மற்றும் நிதிச் சேவைகள் நிறுவனங்களைச் சேரும். சென்னை   இந்தியாவிலேயே  அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சென்னை 4வது இடத்தில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இங்குள்ள மக்கள் அனைவரின் ஓரே கனவு 'சொந்த வீடு'.  சென்னையில்  வீடு வாங்க விரும்பி எங்கு வாங்குவது என்ற குழப்பத்தில் இருப்பவரானால், இதொ உங்களுக்காகக் கட்டமைப்பு, சாதகமான உள்ளூர் வசதிகள், வாங்கும் சக்தி மற்றும் மதிப்பு உயர்வு ஆகிய காரணிகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்ட சென்னையின் சில முக்கிய இடங்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறோம் ஓ.எம்.ஆர் (ஒல்ட் மகாபலிபுரம் ரோடு...

ரியல் எஸ்டேட் விதிகள்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ரியல் எஸ்டேட் விதிகள்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் புதுடில்லி : ரியல் எஸ்டேட்  துறையில் 'பில்டர்' மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் ஒப்பந்தம் செய்து  கொள்ளும் வகையிலான விதிகள் வகுக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து, மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. ரியல் எஸ்டேட்  ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க  புதிய விதிகளை வகுக்க கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான  விசாரணையின் போது நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு:வீடு வாங்க நினைக்கும் நடுத்தர  மக்களின் நலன் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது.  ரியல் எஸ்டேட் துறையில் பில்டர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளும்  வகையில் விதிகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம். இது தொடர்பாக  ஏற்கனவே அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய விதிகள் ஒட்டுமொத்த நாட்டிலும் அமலாக வேண்டும்.  எனவே, மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள...

பண்டிகை காலங்களில் வீடு, மனை வாங்குவதால் என்ன லாபம்??

பண்டிகை காலங்களில் வீடு, மனை வாங்குவதால் என்ன லாபம்? சென்னை: வீடுகள்  மற்றும் மனைகளை வாங்க விரும்புபவர்கள் மற்றும் வாங்கி  விற்க விரும்புபவர்கள் பண்டிகை காலத்தைத்தான் அதிகம் எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள். ஏனென்றால், இதுபோன்ற பண்டிகைக் காலங்களில் தான் நிறைய சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்கும். அடுத்த சில  மாதங்களில் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என நிறையப் பண்டிகைகள்  வரிசையாக வரவுள்ளன. இந்தப் பண்டிகைக் காலங்களில் வீடுகள், மனைகள் மட்டுமல்ல, வீட்டிற்குத் தேவையான பலவகையான பொருள்களும் சலுகை விலைகளில் கிடைக்கும். பண்டிகைக்  காலங்களில் வீடுகள் மற்றும்  மனைகளை ஏன் வாங்கலாம் என்பதற்கான 5 காரணங்கள் இதோ... அதிக வருவாய் மாதச் சம்பளம்  வாங்குபவர்களுக்கு இந்தப் பண்டிகைக் காலங்களின் போதுதான் போனஸ், அட்வான்ஸ் என்று வருவாயின் அளவு அதிகரிக்கும். அதைப் பத்திரமாக முதலீடு செய்ய வீடு, மனை வாங்குவதுதான் பெஸ்ட் ஐடியா. குறைந்தது டவுன் பேமண்ட் கட்டுவதற்காவது உபயோகப்படுமே! வங்கி சலுகைகள் மனைகள்  வாங்குவதற்கும் வீடுகள் கட்டுவதற்கும் பண்டிகை காலங்களில் நிறைய வங்க...

பட்ஜெட் 2022: உச்சமடையுமா ரியல் எஸ்டேட் துறை? வீடு வாங்குவோருக்கு என்னவிதமான சலுகைகள் இருக்கும்?

பட்ஜெட் 2022: உச்சமடையுமா ரியல் எஸ்டேட் துறை? வீடு வாங்குவோருக்கு என்ன விதமான சலுகைகள் இருக்கும்? கொரோனா  பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நாட்டின் ரியல் எஸ்டேட் துறை, கட்டுமானத்துறை பல சவால்களைச் சந்தித்து வருகிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இந்தத் துறைக்கு சலுகைகள் கிடைக்காதா, வீடு வாங்குவோருக்கு சலுகைகளை அறிவித்து, ரியல் எஸ்டேட் துறையை அரசு கைதூக்கிவிடாதா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதே  எதிர்பார்ப்பு 2022-23 ஆண்டு பட்ஜெட்டிலும் எதிரொலித்துள்ளது.  பிப்ரவரி-1ம் தேதி(நாளை) மத்திய நிதி அமைச்சர் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார். அதில் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கவும், வீடு வாங்கும் பிரிவினருக்கு சலுகைகள் குறித்தும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக எளிதாக  கடன் பெறுதல், ஜிஎஸ்டி வரிக் குறைப்பு போன்றவை வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  அது குறித்த விவரம். வீட்டுக்கடன் கழிவு உயர்வு வீடு கட்ட  வங்கியில் கடன் பெற்றிருக்கும் ஊதியம் பெறும் பிரிவினர், வீட்டுக்கடனுக்கான வட்டியில் ரூ.2 லட்சம் வரை பிரி...