பெங்களூர் நகரத்தை விட்டு வெளியேறும் ஐடி ஊழியர்கள்.. என்ன நடக்கிறது..?
பெங்களூர் நகரத்தை விட்டு வெளியேறும் ஐடி ஊழியர்கள்.. என்ன நடக்கிறது..? கொரோனாவின் தாக்கம் மக்களையும் நாட்டையும் மிகப்பெரிய அளவில் மாற்றியுள்ளது, அதிலும் குறிப்பாகப் பெரு நகரங்களில் மிகப்பெரிய மாற்றங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். வீதிக்கு ஒரு ஐடி நிறுவனங்கள் நிறைந்திருக்கும் பெங்களூரில் கொரோனா-க்குப் பின் மக்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். இந்த முடிவுகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போடக் காத்துக் கொண்டு இருக்கிறது. பெங்களூரில் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா வந்த பின்பு ஊழியர்கள் Work From Home செய்து வருகின்றனர். இதிலும் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் கொரோனாவுக்குப் பின்பு செலவுகளைக் குறைப்பதற்காக 50 முதல் 75 சதவீத ஊழியர்களை நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் திட்டமிட்டு வருகிறது இதன் எதிரொலியாக வாடகை வீட்டில் இருப்பவர்களும், சொந்த வீடு வாங்கத் திட்டமிடுபவர்களுக்கும் பெங்களூரின் சிட்டி பகுதியில் வாங்காமல் சிட்டிக்கு வெளியில் வாங்க முடிவு செய்துள்ளனர். மக்களின் மன மாற்றம் பெங்களூரில் இருக்கும் பெரு...