வீட்டுக் கடனில் 7 வகை உள்ளது.. உங்களுக்கான கடன் திட்டம் எது..?
வீட்டுக் கடனில் 7 வகை உள்ளது.. உங்களுக்கான கடன் திட்டம் எது..? தனக்கென ஒரு வீடு. இது ஒவ்வொரு மனிதனின் முதல் கனவாக இருக்கின்றது. கனவு கண்டால் மட்டும் போதுமா? அதை நனவாக்கும் வழிமுறைகளை அறிந்து அவற்றின் வழியே பயணிக்க தொடங்கினால் மட்டுமே நினைத்ததை அடைய முடியும். நடுத்தர இந்தியர்களுக்கு ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் ஒரு எளிய வழி வீட்டுக் கடன். இந்தியாவில் உள்ள தேசிய அல்லது தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையான வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. உங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு, எது உங்களுக்கு மிகவும் உகந்தது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு வகையிலான வீட்டுக் கடன்களைப் பற்றிய புரிதல் மிகவும் அவசியமாகும். தற்போதைய நிலையில் இந்தியாவில் மட்டும் சுமார் 7 வகையான வீட்டுக் கடன்கள் உள்ளது. 1. நிலம் வாங்குவதற்கான கடன் ஒரு நிலத்தை தேர்ந்தெடுத்து அதன் பிறகு உங்களுக்கு தேவையான வீட்டை கட்டத் திட்டமிடுகின்றீர்களா? இதற்கு உதவ இந்தியாவில் உள்ள வங்கிகளாலும் அல்லது பிற வங்கி சாராத நிதி நிறுவனங்களாலும் (NBFCs) வீட்டு மனை வாங்...