Posts

ரியல் எஸ்டேட் முதலீட்டில் சிறந்த ரிட்டர்ன்ஸை பெற 5 சூப்பர் வழிகள்

ரியல் எஸ்டேட் முதலீட்டில் சிறந்த ரிட்டர்ன்ஸை பெற 5 சூப்பர் வழிகள் ஆனால்  நல்ல ரிட்டர்ன்ஸை தரும் முதலீட்டை எப்படி செய்வது என்ற குழப்பம் பொதுவாக அனைவருக்கும் இருக்கும். உங்களுக்கும் இந்த குழப்பம் இருந்தால் இந்த செய்தி உங்களின் குழப்பங்களை தீர்க்க நிச்சயமாக உதவி செய்யும். Best return from Real Estate investment : ரியல் எஸ்டேட்டில்  முதலீடு செய்வது எப்போதுமே ஒரு நன்மை பயக்கும் செயலாகும். ஒரு அவசர தேவைக்கும் கூட பல வகையில் இந்த முதலீடு கை கொடுக்கும். அதனால் தான் பெரும்பாலான மக்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு அதிக அளவில் விருப்பம் தெரிவிக்கின்றனர்.  ஆனால்  நல்ல ரிட்டர்ன்ஸை தரும் முதலீட்டை எப்படி செய்வது என்ற குழப்பம் பொதுவாக அனைவருக்கும் இருக்கும். உங்களுக்கும் இந்த குழப்பம் இருந்தால் இந்த செய்தி உங்களின் குழப்பங்களை தீர்க்க நிச்சயமாக உதவி செய்யும். கீழ் வரும்  தகவல்கள் அனைத்தும் வில்லா ஓர்டிகா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் வடிவமைப்பாளர் சராப்ஜித் சிங் கூறியது.  நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் இந்த ஐந்து விஷயங்களில் சிறப்பு கவனம...

நடுத்தர வர்க்கத்தினருக்கு ரியல் எஸ்டேட் முதலீடு அவசியம்... ஏன்?

நடுத்தர வர்க்கத்தினருக்கு ரியல் எஸ்டேட் முதலீடு அவசியம்... ஏன்? தவணை  என்றால்  வீட்டுக்கடன் என்னும் புரிதல்தான் நமக்கு இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதம் சுமார் 2,000 / 3,000 / 5,000 ரூபாய் செலுத்தினால் ஐந்தாண்டுகளில் ஒரு வீட்டுமனையை வாங்க கூடிய சூழல் இருந்தது. தற்போது 40 வயதை நெருங்குபவர்கள்  அல்லது அதற்கு மேல் இருப்பவர்கள் அன்றைக்கு வீட்டுமனை வாங்கியது இப்படியாகதான் இருக்கும்.  சென்னை  மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பல நடுத்தர மக்களுக்கு வீடு / வீட்டுமனை இப்படிதான் கிடைத்தது. அப்போதைய  காலகட்டத்தில் இந்த விலைக்கு கொடுக்க முடிந்தது. ஆனால், தற்போது வீட்டுமனையை தவணை முறையில் விற்கும் பழக்கமே இல்லை. காரணம்,  ரியல் எஸ்டேட் விலை உயர்ந்துவிட்டது. அதனால், மாத தவணை மூலம் நடுத்தர மக்களை கவர முடியாது. அப்படியே மாத தவணை நிர்ணயம் செய்தாலும் விலை  அதிகமாக இருக்கும்; ஆண்டுகளும் அதிகமாக இருக்கும் என்பதால் கட்டுமான நிறுவனங்கள் மொத்தமாக விற்கும் முறைக்கு மாறிவிட்டார்கள். இதனால் நடுத்தர மக்களின் தனி வீடு கனவு என்பது எட்டாக்கனியாகிவிட்டது. அதனால், அபார்ட்ம...

வருமான வரி விதிப்பில் தளர்வு.. நிதியமைச்சகத்தின் புதிய அறிவிப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..!

வருமான வரி விதிப்பில் தளர்வு.. நிதியமைச்சகத்தின் புதிய அறிவிப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..! கொரோனா  தொற்றுக் காரணமாகப் பல கோடி  மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவும் வகையில் நிறுவனங்கள் முதல் தனிநபர் வரையில் பல்வேறு வகையில் உதவி செய்தனர். இந்நிலையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவும் வகையில் பலருக்கு திடீர் பணவரவு வந்துள்ளது. இதனால் வருமான வரிக் கணக்கில் புதிய பிரச்சினை உருவான நிலையில் மத்திய நிதியமைச்சகம் வருமான வரிக் கணக்கீட்டில் கொரோனா நிதியுதவிக்காகச் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இப்புதிய சலுகை மக்களுக்குப் பெரும் நிதிச் சுமையைக் குறைக்க உள்ளது. சரி  மத்திய நிதியமைச்சகம் அப்படி என்ன சலுகையை அளித்துள்ளது, வாங்க பார்ப்போம். கொரோனா சிகிச்சைக்கு நிதியுதவி 2019-20  நிதியாண்டு மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கொரோனா சிகிச்சைக்காக நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கும், ஒரு நபர் மற்றொரு நபருக்கு நிதியுதவி செய்திருந்தால் இந்தத் தொகையைப் பெறும் நபர் மற்றும் ஊழியரிடம் இருந்து வருமான வரி வசூலிக்கப்படாது. Ex-Gra...

இந்தியாவில் ரியல் எஸ்டேட் முகவராக ஆவது எப்படி? RERA பதிவு மற்றும் வழிகாட்டுதல்கள்

இந்தியாவில் ரியல் எஸ்டேட் முகவராக ஆவது எப்படி? RERA பதிவு மற்றும் வழிகாட்டுதல்கள் ரியல் எஸ்டேட்  முகவர்கள் ஒரு சொத்து வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையிலான இணைப்பு.   இந்தியாவில் ரியல் எஸ்டேட் முகவராக மாறுவது எப்படி என்று   நீங்கள் யோசித்தால், தகவல் தொடர்பு, பேச்சுவார்த்தை திறன் மற்றும் நெட்வொர்க்கிங் போன்ற குணங்கள் ரியல் எஸ்டேட் முகவராக ஆவதற்கு அத்தியாவசியமான சில பண்புகளாகும். ரியல் எஸ்டேட் முகவர் என்றால் என்ன? ரியல் எஸ்டேட்  முகவர் என்பது ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளுக்காக வாங்குபவர்களையும் விற்பவர்களையும் இணைத்து அவர்களின் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக அல்லது பிரதிநிதியாக செயல்படுபவர். ரியல் எஸ்டேட் முகவர்கள் ஒரு ரியல் எஸ்டேட் தரகர் (ஒரு தரகு நிறுவனம் அல்லது தனிநபர்) பணிபுரியும் உரிமம் பெற்ற தொழில் வல்லுநர்கள், அவர்கள் சிறப்பு உரிமம் மற்றும் கூடுதல் அனுபவத்தைக் கொண்டுள்ளனர். நீங்கள்  சொத்தை விற்கிறீர்களோ அல்லது வாங்குகிறீர்களோ, உங்கள் தேவைகளை மனதில் வைத்து ஒப்பந்தத்தை முடிக்க ரியல் எஸ்டேட் முகவர் உங்களுக்கு உதவுவார். அவர்/அவள் சொத்து ஆராய்ச்சி முதல்...

ரியல் எஸ்டேட்-ல் குறி.. 600 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.391 கோடிக்கு வாங்கி அசத்தும் பேஸ்புக் மார்க்.!

ரியல் எஸ்டேட்-ல் குறி.. 600 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.391 கோடிக்கு வாங்கி அசத்தும் பேஸ்புக் மார்க்.! உலகின் மிகப்பெரிய சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக்-ன் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த சில வருடங்களாகவே ரியல் எஸ்டேட் மீது தனது கவனம் செலுத்தி வருகிறார். இவரின் ரியல் எஸ்டேட் முதலீட்டை பலரும் விமர்சனம் செய்து வந்தாலும் தொடர்ந்து இத்துறையில் முதலீடு செய்து வருகிறார். 600 ஏக்கர் நிலத்தை வெறும் 391 கோடிக்கு வாங்கி அசத்தும் FaceBook Mark இந்தச்  சூழ்நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் தனது மனைவி பிரிசில்லா சான் உடன் சேர்ந்து ஹவாய் தீவுகளில் ஒன்றான Kauai-யின் மேற்கு பகுதியில் சுமார் 600 ஏக்கர் நிலத்தை மிகவும் சீப்பான விலைக்கு வாங்கியுள்ளார். பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்   மார்க் ஜூக்கர்பெர்க்  தொடர்ந்து தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் இதர வர்த்தகப் பிரிவைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருவது மட்டும் அல்லாமல் விளம்பர வருவாய் ஈட்டுவதற்கு அனைத்து வழிகளையும் ஆய்வு செய்து தீவிரமான பணியாற்றி வரும் நிலையில் ரியல் எஸ்டேட் துறையில் புதிதாக ஒரு முதலீட்டைச் ...

வேகமாக மீண்டும் வரும் ரியல் எஸ்டேட்.. மக்கள் மகிழ்ச்சி..!

வேகமாக மீண்டும் வரும் ரியல் எஸ்டேட்.. மக்கள் மகிழ்ச்சி..! கொரோனாவால்  உலகம் முழுவதும் அதிகளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வந்தாலும், வளரும் நாடுகளில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு என்பது மிகவும் அதிகம்.  இதில் ஜூன்  காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியைப் பார்த்தால் சுமார் 24 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த மாபெரும் சரிவில் இருந்து மீண்டும் வருவது என்பது மிகவும் சவாலான விஷயம். இந்தக்  கொரோனா லாக்டவுன் காலத்தில் உற்பத்தித்துறை, ரியல் எஸ்டேட், ஹோட்டல்கள் ஆகிய துறைகள் மிகப்பெரிய அளவில் பாதிப்பு அடைந்தது.  குறிப்பாக  ரியல் எஸ்டேட் துறை மக்கள் அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்பு, சம்பள குறைப்பு, வர்த்தக முடக்கம், மோசமான வர்த்தகச் சூழ்நிலை எதிர்கொண்ட காரணத்தால் இத்துறையில் வர்த்தகம் 95 சதவீதம் மாயமானது. தற்போது  நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை இருக்கும் நிலையில், ரியல் எஸ்டேட் மீண்டு வருவதும் மிகவும் கடினம் எனக் கூறப்பட்ட நிலையில் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியை எதிர்கொண்டுள்ளது இந்திய ரியல் எஸ்டேட் துறை. ...

தமிழகத்தில் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு திடீரென அதிகரிக்கும் கிராக்கி.. காரணம் என்ன?

தமிழகத்தில் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு திடீரென அதிகரிக்கும் கிராக்கி.. காரணம் என்ன? கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு  பின்னர் மக்கள் மத்தியில் மினிமம் பட்ஜெட் வீடுகள் வாங்க ஆர்வம் அதிகரித்துள்ளது. பலரும் பட்ஜெட் குறைவாக வீடு கட்ட விரும்புவது  ஒருபுறம் என்றால், ஏற்கனவே கடன் வாங்கி வீடு கட்டியவர்கள், கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் வீடுகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் அவர்களிடம் முடிந்தவரை அடித்து பேசி குறைந்த விலைக்கு வீடுகளை வாங்குவது அதிகரித்துள்ளது. இந்தியா  முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் , இந்தியாவின் அனைத்து துறைகளும் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. ஏற்கனவே பொருளாதார மந்த நிலையில் கட்டி முடித்த வீடுகளை விற்க முடியாமல் ப்ரோமோட்டர்கள் அவதிப்பட்ட நிலையில் இந்த கொரோனா முடக்கம் அந்த துறையை முற்றிலும் சீர்குலைத்தது. இந்தியா  முழுவதுமே கொரோனாவால் கட்டுமான தொழில் ஒட்டுமொத்தமாக முடங்கி கிடந்தது. தமிழகத்தில் பெரும்பாலும் பெரிய அளவிலான மெகா பட்ஜெட் கட்டுமான தொழில்கள், டெண்டர் பணிகள் போன்றவைகளில் வடமாநில தொழி...