Posts

ரியல் எஸ்டேட் துறை எப்போது கரையேறும்?

ரியல் எஸ்டேட் துறை எப்போது கரையேறும்? அதிகம்  பணம் புழங்கும் துறை என்று பேசப்பட்ட  இந்திய  ரியல் எஸ்டேட்   துறை கடந்த சில ஆண்டுகளாகவே பெருத்த அடி வாங்கி மீளாத் துயரில் சிக்கியுள்ளது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு இத்துறையின் வருவாய் குறைந்து நிதி நெருக்கடி அதிகமானது.  பின்னர்  2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி, அதைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் சட்டம் கடுமையாக்கப்பட்டது என, ரியல் எஸ்டேட் துறை பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானது. இதுபோன்ற சூழலில் இந்த ஆண்டில்  கொரோனா  பாதிப்பால் மேலும் சிக்கல் ஏற்பட்டது. நிதி நெருக்கடி காரணமாக மக்கள் தங்களது ரியல் எஸ்டேட் முதலீடுகளையும், வீடு வாங்கும் எண்ணத்தையும் கைவிட்டனர். இந்திய  ரியல் எஸ்டேட் துறை கொரோனா பாதிப்பிலிருந்து எப்போது மீளும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், இன்னும் சில மாதங்களில் கொரோனாவுக்கு முன்னர் இருந்த சூழல் திரும்பி விடும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கில்  நான்காம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திர...

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் 'டிஜிட்டல்’  வழிகளை  நாடுவது, நகரை விட்டு தொலைவில் இருந்தாலும் பெரிய வீட்டை நாடுவது என ரியல் எஸ்டேட் துறையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா சூழல் இணைய வழி கல்வி, வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஆகிய மாற்றங்களை கொண்டு வந்திருப்பதோடு, ஒவ்வொரு துறையிலும் தனியே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் துறையிலும், கொரோனா சூழல் காரணமாக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன .ரியல் எஸ்டேட்  நிறுவனங்கள் சவாலான நிலையை சமாளிக்க புதுமையான வழிகளை பின்பற்றி வரும் நிலையில், வீடு வாங்கும் விருப்பம் கொண்டவர்கள் புதிய வீடுகளை தேடி கண்டறியும் முறையும் மாற்றத்திற்கு உள்ளாகியிருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும், அதற்கான காரணங்களையும், எதிர்கால போக்குகளையும் பார்க்கலாம். டிஜிட்டல் வழி கொரோனா  தாக்கத்தால் பொதுமுடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், வீடு வாங்க விரும்புகிறவர்கள், விற்பனையாளர்கள், இடைத்தரகர்கள் என பல்வேறு தரப்பினரும் டிஜிட்டல் வழியை நாடத...

சென்னைக்கு மிக அருகில்’ - நீரில் மூழ்கிய ரியல் எஸ்டேட் நிலங்கள்

சென்னைக்கு மிக அருகில்’ - நீரில் மூழ்கிய ரியல் எஸ்டேட் நிலங்கள் 'சென்னைக்கு மிக அருகில்’ என்ற முழக்கத்துடன் விற்பனை செய்யப்பட்ட வீட்டு மனைப்பிரிவு ஒன்று, நீர் தேங்கி ஏரி போல காட்சியளிக்கிறது. செங்கல்பட்டில்  இருந்து பொன்விளைந்த களத்தூர் செல்லும் வழியில் ஒழத்தூர் என்ற ஏரியை ஒட்டிய பகுதி மனைப்பிரிவுகளாக விற்பனைக்கு வந்தன. அந்த இடம் தற்போது குளம் போல காட்சியளிக்கிறது.  காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் முக்கிய வருவாய் மாவட்டமாக மாறியுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின்  பல்வேறு இடங்களில் விவசாயம் கைவிடப்பட்ட நிலங்கள் வீட்டு மனைகளாக உருமாறி வருவதன் அடையாளமாக இந்த இடம் காட்சியளிக்கிறது. இதுபோன்று நீர்த் தேங்கும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு மனைப்பிரிவுகளாக மாற்றப்படுவதே மழை வெள்ளகாலத்தில் அதிக பாதிப்புகள் உருவாவதற்கு காரணம் என கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள். சென்னைக்கு  அருகில் என்று நம்பி மனை வாங்குவோர்,  மனையை பார்த்து வாங்க வேண்டும் என்றும், ஏமாறும் நிலைக்குச் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கிறார்கள் அப்பகுதிவாசிகள...

இந்திய ரியல் எஸ்டேட்டில் என்ஆர்ஐகள் முதலீடு செய்வது எப்படி?

இந்திய ரியல் எஸ்டேட்டில் என்ஆர்ஐகள் முதலீடு செய்வது எப்படி? இந்திய ரிசர்வ் வங்கி  மற்றும் எஃப்இஎம்எ (FEMA) ஆகியவை வகுத்திருக்கும் விதிமுறைகளின் கீழ் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறனர். பின்வரும்  சொத்துக்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுமதிக்கப்படுகிறனர். 1. விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் மற்றும் விவசாயம் சார்ந்த சொத்துக்களைத் தவிர, மற்ற எந்த ஒரு அசையா சொத்தையும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வாங்கலாம்.  2. இந்தியாவில் வாழ்ந்து வரும் இந்திய குடிமகனிடமிருந்தோ அல்லது வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்திய குடிமகனிடமிருந்தோ அல்லது வெளிநாட்டில்  வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்தோ, ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் இந்தியாவில் உள்ள அசையாச் சொத்துக்களை அன்பளிப்பாக பெறலாம்.  3. வெளிநாட்டு வாழ்  இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்களது பரம்பரைச்  சொத்துக்களைப் பெற அனுமதி உண்டு.  4. வெளிநாட்டு வாழ் இந்தியர் தங்களது அசையா சொத்துக்களை, இந்தியாவில் வசிப்பவர்களுக்...

யோகி ஆதித்யநாத் அரசின் செம அறிவிப்பு.. உண்மையிலேயே பல லட்சம் பேருக்கு நன்மை..!

யோகி ஆதித்யநாத் அரசின் செம அறிவிப்பு.. உண்மையிலேயே பல லட்சம் பேருக்கு நன்மை..! யோகி ஆதித்யநாத்-தின் பல அறிவிப்புகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குப் பெயர் போனதாக இருந்தாலும், தற்போது  அவர் அறிவித்துள்ளது அறிவிப்பு அம்மாநில மக்களுக்குப் பெரிய அளவில் நன்மை அளிப்பது மட்டும் அல்லாமல் பலருக்கும் பல ஆயிரம் ரூபாய் சேமிக்கும் ஒரு வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. அப்படி  என்ன அறிவிப்பு என்று தானே கேட்குறீங்க.. வாங்க சொல்றேன். யோகி ஆதித்யநாத்   யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநில அரசு லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுக்குள் சொத்து பரிமாற்றத்திற்கான பத்திர வரியை தள்ளுபடி செய்வதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. பத்திர வரி   அதாவது குடும்ப உறுப்பினர்களிடையே  சொத்துப் பரிமாற்றம் செய்யும் போது கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், மருமகள், மருமகன் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு ஆகியோர் மத்தியிலான சொத்துப் பரிமாற்றம் செய்யும் போது செலுத்தப்படும் பத்திர வரியை முழும...

முதலீட்டில் 50% லாபம் பெற ரியல் எஸ்டேட் தான் பெஸ்ட் சாய்ஸ்

முதலீட்டில் 50% லாபம் பெற ரியல் எஸ்டேட் தான் பெஸ்ட் சாய்ஸ் சென்னை: கடந்த  பத்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண குப்பை நிலம் கூட இப்போது பிளாட் போட்டு விற்கின்றனர். மண் மீதான ஆசை யாரையும் விட்டு வைக்கவில்லை. நிலத்தின் மீதான முதலீடு நம் எதிர்காலத்தை பெரிய அளவில் மாற்றிட உதவும்.  ஆனால்  இன்றளவும் ரியல் எஸ்டேட் மீதான அச்சம் அதிகளவில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த வளர்ச்சி சாமானிய மக்களுக்கு சொந்த வீடு என்னும் கனவை எட்டும் உயரத்தில் கொண்டு வந்துள்ளது. இது உண்மையில் மகிழ்ச்சிக்குரிய விஷயம். வீட்டு மனை  முதலீட்டாளர்களை கவரும் வகையிலும் சாதாரண மக்களின் விட்டு மனை கனவை நினவாக்கும் வகையில் மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்தது. வங்கி கடன்கள்   முதல் முறையாக  ரியல் எஸ்டேட் அல்லது விட்டு மனையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 1.5 இலட்சம் முதல் 2.5 இலட்சம் வரை எளிமையான முறையில் வங்கிகள் கடன் வழங்க உத்தரவு பிறப்பித்தது. இது ஒவ்வொருவரின் வீடு வாங்கும் கனவை நனவாக்க மிகப்பெரிய உதவியாக இருக்கும்.  வர்த்தகம் உயர்வு...

வீட்டுக்கடன் வட்டி உயர்வால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பாதிப்பா?

வீட்டுக்கடன் வட்டி உயர்வால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பாதிப்பா? சமீபத்தில்  ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து  கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்  வீட்டுக்கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் ரியல் எஸ்டேட் துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?  என்பது குறித்து தற்போது பார்ப்போம். வங்கிகளின்  வீட்டுக்கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய பாதிப்பில்லை என்று ரியல் எஸ்டேட் துறையில் உள்ள நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீட்டுக்கடன் வட்டி வங்கிகள்  வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை  அதிகரித்ததால் ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த விளைவையே ஏற்படுத்தி உள்ளது என்றும் புதிய குடியிருப்பு திட்டங்களுக்கான முன்பதிவுகள் அதிகரித்து வருகின்றன என்றும் நாங்கள் எதிர்பார்த்தபடியே இன்னும் சில நாட்களில் அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடும் என்றும் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் வ...