Posts

பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி

பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி  பவர் பத்திரம் எழுதி கொடுத்த முதன்மையாளர் கண்டிப்பாக அதனை எந்த நேரத்திலும் ரத்து செய்யும் உரிமை உள்ளது. அதனை முதன்மையாளர் என்றும் முகவர் என்றும் நாம் கூறுவோம்.  பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி? 1. சொத்தின்  உரிமையாளர் - முதன்மையாளர் 2. அதிகாரம் கொடுக்கும் நபர் - முகவர் முதன்மையாளர் தன்னால் செயல்படுத்த முடியாத சரியாக maintain பண்ண முடியாத சொத்தை அதிகாரம் என்ற பெயரில் எழுதி கொடுப்பது பவர் பத்திரம் எனலாம்.  இதில்  முதன்மையாளர் எந்தெந்த அதிகாரம் இருக்கிறது என்று பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.  நமது நிலத்தை யாராவது ஆக்கிரமிப்பு செய்ய நேர்ந்தால் அப்போது இந்த பவர் பத்திரம் உபயோகமாகும்.  அதற்காக தான் அதிகபட்ச அளவில் பவர் பத்திரம் போடுகின்றனர்.  2. பவர் பத்திரம் மாதிரி இவை எல்லாம் தேவை இல்லை. மற்ற கிரைய பத்திரம் போல் தான் இதையும் எழுத வேண்டும். உங்களுக்கு தெரியாமல் முகவர்  உங்கள் நிலத்தை யாருக்குக்காவது கிரையம் செய்து இருந்தால் அல்லது கிரையம் செய்ய ரெடி ஆக இருந்தால்  அந்த பவர் பத்திரத்தை நீங்கள்...

ஜெனரல் பவர் பத்திரம்

ஜெனரல் பவர் பத்திரம்  பவர்  பத்திரத்தில் இந்த பத்திரம் ஒரு வகை ஆகும். அதாவது ஒரு ஏஜென்ட்-க்கு கொடுக்கும் அதிகாரம் ஆகும். அந்த வகையில் கொடுக்கும் பவர் பத்திரம் வாங்கும்போது யோசித்து மற்றும் விசாரித்து வாங்க வேண்டும். அவ்வாறு சரியாக அந்த பவர் பத்திரம் நாம் வாங்கும் போது எதிர்பாராத விதமாய் அதனை ரத்து செய்தால் வாங்கிவருக்கு மிகப்பெரிய  நஷ்டம் ஆகும்.  ஜெனரல் பவர் பத்திரம்  இப்பொது ஒருவர் நிலம் வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம். அதன் பத்திரம் Power Of Attorney யை சேர்ந்தது என்று அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது நமக்கு தெரிய வரும் போது முதல்வரின் லைப் சான்றிதழும் மற்றும் அவரின் ஒப்புதலும் நிலம் வாங்குபவர் வாங்க வேண்டும். முகவருக்கு விற்பனை அதிகாரம் இருந்தாலும் முதல்வர் தான் அதற்கு முதலாளி என்பதால் அவரின் ஒப்புதல் மிகவும் முக்கியம்.  ஜெனரல் பத்திரம் முழு அதிகாரம் பெற கூடிய  ஆவணம் ஆகும். ஆனால் இதனை தவறாக சில பவர் ஏஜெண்டுகள் முதல்வருக்கு தெரியாமல் விற்பனை செய்து விடுகின்றனர். அவ்வாறு விற்பனைக்கு வாங்கும் நபர் ஏமாந்து தான் போவார்கள். ஏனென்றால் அந்...

பாகப் பிரிவினையை பதியாவிட்டால் பிரச்சினை வரும்

பாகப் பிரிவினையை பதியாவிட்டால் பிரச்சினை வரும். சொந்தங்களுக்குள்  பாகப் பிரிவினை நடந்தாலும் பதிவு செய்யாவிடில்  சந்ததியினருக்கு பிரச்சினை வரும் என நீதிபதி மோகன்ராம் பேசினார். செஞ்சி தாலுகா பாலப்பாடியில் செஞ்சி வட்ட சட்டபணிகள் மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி மோகன் ராம் பேசியதாவது:சிவில் வழக்குகளில் பெரும்பகுதி ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.  இரு தரப்பிலும் ஆவணங்கள் இல்லாத நிலையில் தான் சாட்சிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். பல இடங்களில் பட்டா வழங்க மறுப்பதாக புகார் கூறுகின்றனர். முதலில் பட்டா கோருபவருக்கு என்ன உரிமை, எந்த வழியில் உரிமை என்பதை பரிசீலிப்பார்கள். 100 ரூபாய்க்கு மேல் உள்ள சொத்துக்களை  கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத ஆவணங்களை  கொண்டு உரிமை கோர முடியாது.  கிராமங்களில்  80 சதவீதம் பாகப் பிரிவினையை  கூறு சீட்டு மூலம் தீர்த்து கொள்கின்றனர். இதை 2 ரூபாயில் இருந்து 50 ரூபாய் பத்திரத்தில் எழுதி வைத்துக் கொண்டு  எனக்குத் தான் சொந்தம் என்று சொன்னால் அதை சட்டம் ஏற்ற...

போலி பத்திரங்களை பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை

போலி பத்திரங்களை பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை:  சட்டசபையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றம் சென்னை : போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் குறித்து பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்ட மசோதாவை சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   2021-ம் ஆண்டு பதிவு (தமிழ்நாடு 2-ம் திருத்தம்) சட்டம் என்று அழைக்கப்படும் இந்த சட்டம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இந்த சட்டத்தில் 22பி என்ற பிரிவு சேர்க்கப்படுகிறது. அதன்படி, போலி பத்திரங்கள் மற்றும் வேறு ஆவணங்களை பதிவு செய்யும் அலுவலரே மறுக்கலாம். 1908ஆம் ஆண்டு பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யும் அலுவலர் அல்லது பிற அதிகார அமைப்பால் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட ஆவணம் ஒன்றை மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற காரணத்திற்காக கூட ரத்து செய்வதற்கு அதிகாரம் இல்லாமல் இருந்தது. ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள்  மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றங்களிடம் கோரலாம்.  இதனால், போலி பத்திரப்பதிவை ரத...

புத்தகம்-4 பத்திரங்கள்

புத்தகம்-4 பத்திரங்கள்: சொத்துப் பத்திரமாக இருந்தாலும், அல்லது சொத்து சம்மந்தப்படாத பத்திரமாக இருந்தாலும், எல்லாப் பத்திரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம். பொதுவாக, பத்திரங்களை மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள். புத்தகம்-1ல் பதிவு செய்யப்படாத பத்திரங்களை புத்தகம்-4-ல் பதிவு செய்யப்படும். இதைத் தனியார் பத்திரங்கள்  என்று சொல்வர்.  Personal Document என்ற வகையைச் சேரும். இதில் சொத்து சம்மந்தப்பட்டு இருக்கலாம்  அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால்: அசையாச் சொத்தி்ன் உரிமை  இந்த மாதிரி பத்திரங்கள் மூலம் மாறி இருக்காது. உதாரணமாக ஒரு அசையாச் சொத்தை கிரயம் கொடுத்தால், அந்த சொத்தில் அவருக்கு உள்ள உரிமையை மற்றொருவருக்கு (கிரயம் வாங்கியவருக்கு) மாற்றிக் கொடுக்கிறார். எனவே அந்தச் சொத்தின் உரிமை அந்தப் பத்திரம் மூலம் மாறி வேறு ஒருவருக்குப் போகிறது. எனவே அப்படிப்பட்ட பத்திரங்களை புத்தகம்-1ல் பதிவு செய்வார்கள். ஆனால், சொத்து சம்மந்தப்பட்டு இருக்கும், ஆனால், அந்த சொத்தின் உரிமை மாறாது.  அப்படிப்பட்ட பத்திரங்களை புத்தகம்-4ல் பதிவு செய்...

புத்தகம்-3 பத்திரங்கள்

புத்தகம்-3 பத்திரம் சொத்துப் பத்திரமாக இருந்தாலும், அல்லது சொத்து சம்பந்தப்படாத பத்திரமாக இருந்தாலும், எல்லாப் பத்திரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம். பொதுவாக, பத்திரங்களை  மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள். இந்தப் புத்தகம்-3 பத்திரம்  என்பது, 1-வது புத்தகம், 4-வது புத்தகம்  இவைகளில் வராத  பத்திர வகையைச் சேர்ந்தது. இது ஒரு சிறப்பு வகை. இதில் உயில் பத்திரங்கள் மட்டும் அடங்கும். உயில் என்பது அசையாச் சொத்து சம்பந்தப்பட்டும்  இருக்கும் அல்லது சம்பந்தப்படாமலும்  இருக்கும். ஆனாலும், உயில் என்பது அதை எழுதி வைத்தவரின் இறப்புக்கு பின்னரே அது நடைமுறைக்கு வருவதால், அதை சிறப்பாக  புத்தகம்-3ல் பதிவு  செய்து வைப்பார்கள். உயிலும்  ஒரு தனிப்பட்ட பத்திரமாகும். இது பொதுப் பத்திர வகையை சேராது. எழுதிக் கொடுத்தவர் மட்டுமே அதன் நகலைப் பெற  முடியும், வேறு யாரும் அதைப் பெற்றுவிட முடியாது. அவரது இறப்புக்குப் பின்னர் அவரின் வாரிசுகள் அதன் நகலைப் பெறலாம். இதில் உயில், மற்றும்  உயிலை அடுத்து அதன் பின்  இணைப்பு எனச் சொல்லப்படும் “கொடுசில்” (Codicil) ஆகிய...

புத்தகம்-2 பத்திரங்கள்

புத்தகம்-2 பத்திரம் சொத்துப் பத்திரமாக இருந்தாலும், அல்லது சொத்து சம்மந்தப்படாத பத்திரமாக இருந்தாலும், எல்லாப் பத்திரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம். பொதுவாக, பத்திரங்களை மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள். புத்தகம்-2 என்பது பத்திரங்களைப்  பதிவு செய்து வைக்கும் புத்தகம் இல்லை. இந்தப்  புத்தகம்  பொதுவாக ஏதும் பதிவு செய்யாமல் காலியாகவே இருக்கும். நாம் பதிவுக்குக் கொடுக்கும் பத்திரங்கள்  சரியாக இருந்தால் தான், பதிவாளர் அதை பதிவு செய்வார். சரியாக இல்லை என்றால், பதிவாளர் பதிவு செய்ய மாட்டார். அப்படி எந்த எந்த காரணங்களுக்கு ஒரு பத்திரத்தின்  பதிவை மறுக்கலாம் என்று பதிவுச் சட்டம் பிரிவு 71-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பதிவாளர் பதிவு செய்ய மறுத்தால், அதன் காரணத்தை அந்த பத்திரத்தின் பின் பக்கத்தில் எழுதி பதிவாளர் கையெழுத்துச்  செய்ய வேண்டும். அதே காரணத்தை அவர் வைத்துள்ள புத்தகம்-2ல் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விபரங்கள் மட்டுமே புத்தகம்-2ல் இருக்கும். அவ்வாறு பதிவுக்கு மறுக்கும் காரணங்கள்: 1) அந்த பத்திரத்தில் உள்ள சொத்து அந்த பதிவு அலுவலக எல்லைக்குள்...