Posts

வீடு வேண்டி விண்ணப்பம்

  வீடு வேண்டி விண்ணப்பம் –  பொதுவாக வீடு இல்லாதவர்களுக்கு  மாநில மற்றும் மத்திய அரசு இலவசமாக வீடுகளை வழங்கி வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழும் மற்றும் பல ஆண்டுகளாக நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களுக்கு இத்தகைய திட்டம் மிகவும் உபயோகமாகிறது.  இந்த  சூழ்நிலையில் தமிழக அரசு இலவசவீட்டுமனை  பட்டாக்களையும் வழங்கி  வருகிறது. அதனை பயன்படுத்தி எளிய ஏழை மக்கள் இந்த இலவச வீட்டுமனை திட்டத்தினை உபயோகப்படுத்த வேண்டும். மேலும் மக்கள் மனு மூலமாகவும் உங்கள் வீடு வேண்டி விண்ணப்பிக்கலாம். ஒருவேளை நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்ய முடியாத நிலையில் இருந்தால்  உங்கள் ஊராட்சியில் உள்ள தலைவர், ஊர் தலைவர் மற்றும் கிளர்க் இவர்களை கான்டாக்ட் செய்தாலே அதற்குண்டான வழிகளை கூறுவார்கள். நீங்கள் இதையெல்லாம் முயற்சி செய்தும் பலனளிக்க வில்லையென்றால் ஆன்லைனில் அப்ளை செய்யலாம். உங்கள் கோரிக்கைகள் மனு நிராகரிக்கப்பட்டாலோ அல்லது சரியான விளக்கம் தராமல் போனாலோ முதலமைச்சர் முகவரி டிபார்ட்மென்ட்ற்கு குறைகளை கூறலாம். அதில் வீடு பிரச்சினை மட்டுமில்லாமல் அனைத்து விதமான பிரச்ச...

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்

  கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!   ஒரு  நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரையப் பத்திரம் ஆகும்.  மேற்படி  கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவதுதான் கிரையப் பத்திர பதிவு ஆகும். எழுதி  கொடுப்பவரின் பெயரும் &  இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரையப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். கிரையம்  எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கிரயம் எழுதி கொடுப்பவருக்...

பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி?

பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? ஒருவர் தமது சொத்தை விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடமிருந்து வாங்கினாலோ அல்லது வேறு ஒரு பெயருக்கு மாற்றினாலோ அதை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம்.  இரண்டு தனி நபர்களுக்கிடையே நடக்கும் விற்பனை நடவடிக்கையை பத்திரப்பதிவு செய்வது முதல் நடவடிக்கை எனில், அதனை அரசு அங்கீகரித்து அளிப்பதே பட்டா பெயர் மாற்றம். பட்டா உள்ள நிலம், கட்டிடம், காலி மனை, விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் வாங்கப்படும்போது, அவற்றை விலை கொடுத்தோ சொத்து வாரிசு உரிமைப்படியோ,  பாகப்பிரிவினை பத்திரப்படியோ, உயில் ஆவணத்தின்படியோ வாங்குபவர் பட்டாவின் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? யாரை அணுகுவது? பட்டாவில் என்னென்ன விவரங்கள் இருக்கும்? பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என்பதைக் காட்டுவதாகும். இதில் உரிமையாளர் பெயர், பட்டா எண், ஊரின் பெயர், மாவட்டத்தின் பெயர், புல எண் (survey number), உட்பிரிவு (sub division), நிலத்தின் பரப்பு, தீர்வை, நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா போன்ற விவரங்களை உள்ளடக்கியிருக்கும். எ...

பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை

  பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை –   பூர்வீகம்   என்றாலே பாட்டன் , முப்பாட்டன் சேர்த்து பாதுகாக்கப்படும் சொத்து பூர்வீக சொத்து எனலாம் . அவர்கள் எந்த ஒரு செட்டில்மெண்ட் மற்றும் உயிலும் எழுதி வைக்காமல் போனால் அது பூர்வீக சொத்தாக மாறி விடும் .  பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை அதனை எப்படி பிரிப்பது பொதுவாக சுயமாக சேர்த்து வைத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களை எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்க முடியும். ஆனால் அதனை முறையாக பராமரிக்காமல் யாருக்கும் எழுதி வைக்காமல் போனால் பூர்வீகமாக மாறி விடும். அந்த   சொத்து உங்களிடம் வந்து விட்டால் என்ன செய்வது என்றால் இந்து வாரிசுரிமை சட்டம் அடிப்படையில் முதல் நிலை வாரிசுகளுக்கு சென்று விடும் .  அந்த வாரிசுகள் மூன்று அல்லது நான்கு இருப்பின் பாக பிரிவினை செய்ய வேண்டும். அப்படி பாகப்பிரிவினை செய்யும் போது சரி சமமாக பிரிக்க வேண்டும். தனித் தனியாக பாக பிரிவினை செய்யும் பொது தனி பட்டாவாக மாற்றி கொள்ள வேண்டும். பாகம்  வேண்டாம் என்பவர்கள் விடுதலை பத்திரம்...

பத்திரப் பதிவுக்கு பான் எண் அவசியம்: தமிழக அரசு

பத்திரப் பதிவுக்கு பான் எண் அவசியம்: தமிழக அரசு 30  லட்சம் ரூபாய்க்கு மேல் பதிவு செய்யப்படும் சொத்து விவரங்கள் வருமானவரித் துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமானவரிச் சட்டம் 1962-இன் படி, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பதிவு செய்யப்படும்போது பத்திரப்பதிவுடன் 'பான்' எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30  லட்சம் ரூபாய்  மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான சொத்துக்கள் பதிவு செய்யப்படும் போது அந்த தகவல்கள் வருமான வரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி பத்திரப்பதிவு படிவம் 60 மற்றும் 61-ஏ படிவங்கள் இணையதளத்தில் இருப்பதாகவும், அதில், குறிப்பிட்டுள்ளபடி முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த  தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறையிடம் பகிர்ந்து கொள்ளப்படும் பட்சத்தில், வருமானவரி கணக்கு தாக்கலின் போது சொத்துக்கள் யார் பெயரில் பதியப்பட்டுள்ளது என்பதை பார்...

summary of Patta chitta

Image
Table of Contents What is Patta? What is Chitta? What are the details you can find on your Patta Chitta document? Documents required to apply for Patta Chitta How to apply for Patta Chitta Online in Tamil Nadu How to do Patta Verification How to View Patta Online How to Transfer Patta  How to View Patta Chitta Online Status How to Change Name in Patta Download Patta Chitta App How do I check the status of Poramboke land in TN Patta Chitta? How to verify Poramboke land online in TN Patta Chitta? Tamilnadu Patta Chitta Overview List of districts in Tamil Nadu where Patta Chitta, adangal is available  How do you revoke a Patta granted by the taluk office to somebody else? Land Records: State-wise In  the state of Tamil Nadu, a series of land records called as  Patta Chitta  are used to signify ownership of land or property. Land records play an important role in property-related transactions such as transfer of ownership, property mortgage, etc. In the guide we'll ...

சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா?

சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா?  மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம். சமூகம் மாற ஆரம்பித்ததும் குற்றங்களும் நடைபெற ஆரம்பித்தன. சமூகத்தை ஒருங்கிணைக்கவும் பாதுகாக்கவும் சட்டங்கள் வரையறுக்கப்பட்டன. ஆனால் சட்ட விழிப்புணர்வு மட்டும் இன்றும் தோன்றவே இல்லை.  குறிப்பாக பெண்கள், அடிப்படை சட்டங்களை அறிந்து கொள்வதின் மூலம் தன்னம்பிக்கையும், எதையும் எதிர் கொள்ளும் துணிவும் பக்குவமும் அதிகரிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சொத்தில் பங்கு உண்டா..? ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சில பேருக்கு பொதுவாய் தெரிகிறது. “மகிழ்ச்சி”. ஆனால் பெண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறது என்ற அடிப்படைகளைக் கூட இன்றைய பெண்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. நமது சட்ட முன்னோர்களும் அரசாங்கமும் எத்தனையோ நல்ல சட்டங்களையும் இயற்றியுள்ளா...